Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் அந்த ஒரு ரகசியம்... காஞ்சிபுரம் வாசிகளுக்கு அரிய வாய்ப்பு..!

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிதி சார்ந்த விவரங்களை நாமாகப் படித்து தெரிந்துகொள்வதைவிட இந்தத் துறையில் ஆழமான அனுபவம் பெற்றவர்கள் சொல்லும்போது விரைவிலேயே புரிய ஆரம்பிக்கும். நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி முதலீடு செய்தால் இன்னும் விரைவில் நம்முடைய செல்வத்தைப் பெருக்க முடியும்.

உங்களைப் பணக்காரர் ஆக்கும் அந்த ஒரு ரகசியம்... காஞ்சிபுரம் வாசிகளுக்கு அரிய வாய்ப்பு..!

நிதி சார்ந்த விவரங்களை நாமாகப் படித்து தெரிந்துகொள்வதைவிட இந்தத் துறையில் ஆழமான அனுபவம் பெற்றவர்கள் சொல்லும்போது விரைவிலேயே புரிய ஆரம்பிக்கும். நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி முதலீடு செய்தால் இன்னும் விரைவில் நம்முடைய செல்வத்தைப் பெருக்க முடியும்.

Published:Updated:
நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாழ்க்கையில் பணம்தான் அல்டிமேட் என்று நினைக்கத் தேவையில்லை. ஆனால், அந்தப் பணம் இல்லை எனில், நாம் படும் கஷ்டம் நமக்கு நன்றாகவே தெரியும்.

பணம் சம்பாதிக்க எல்லோருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால், எப்படி சம்பாதிப்பது என்பதுதான் அனைவரும் கேட்கிற ஒரே கேள்வி.

அதற்கு பதில் மிகவும் எளிது. கையிலிருக்கும் பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்று தெரிந்தால் போதும். அந்தப் பணத்தைப் பலமடங்காக மாற்றலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணத்தை பல மடங்காக மாற்றுவதில் சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பண மேலாண்மை பற்றியும், சொத்துகளின் தன்மை பற்றியும், அவற்றின் எதிர்காலம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். சந்தையில் என்னென்ன முதலீடு வகைகள் உள்ளன, அவற்றின் சாதக பாதகங்கள் என்ன? யாருக்கு எந்த முதலீடு சரியானது என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற நிதி சார்ந்த விவரங்களை நாமாக படித்து தெரிந்துகொள்வதைவிட இந்தத் துறையில் ஆழமான அனுபவம் பெற்றவர்கள் சொல்லும்போது விரைவிலேயே புரிய ஆரம்பிக்கும். நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி முதலீடு செய்தால் இன்னும் விரைவில் நம்முடைய செல்வத்தைப் பெருக்க முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செல்வத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு உதவும் சொத்து முதலீட்டின் முக்கியத்துவம் குறித்தும், நிதிசார்ந்த முதலீடுகளின் வகைகள் குறித்தும், பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதென்றால் என்ன என்பது குறித்தும் உங்களுக்காகச் சொல்ல காத்திருக்கிறது நாணயம் விகடன்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்தும்..!' என்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, காஞ்சிபுரத்தில் ஜூலை 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 1.00 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் சோனல் மேனேஜர் எஸ்.குருராஜ், மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் இருவரும் உரையாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் முதலீடு குறித்த தெளிவை நீங்கள் பெறலாம். அது உங்களுடைய நிதி சார்ந்த பழக்க வழக்கங்களையே தலைகீழாக மாற்றிவிடும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கில் முன்பதிவு செய்யவும்.