Published:Updated:

முகேஷ் அம்பானிக்கே கடும் போட்டியைத் தந்த கில்லாடி பிசினஸ்மேன்...! திருப்புமுனை-32

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

யார் பணக்காரர் என்கிற போட்டி சில ஆண்டுகளுக்குமுன் முகேஷ் அம்பானிக்கும் திலிப் சாங்விக்கும் இடையேதான் இருந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு திருப்புமுனைகளுக்குப்பிறகுதான் முதல் தலைமுறை (Self made) பணக்காரராக உயர்ந்தவர்...

முகேஷ் அம்பானிக்கே கடும் போட்டியைத் தந்த கில்லாடி பிசினஸ்மேன்...! திருப்புமுனை-32

யார் பணக்காரர் என்கிற போட்டி சில ஆண்டுகளுக்குமுன் முகேஷ் அம்பானிக்கும் திலிப் சாங்விக்கும் இடையேதான் இருந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு திருப்புமுனைகளுக்குப்பிறகுதான் முதல் தலைமுறை (Self made) பணக்காரராக உயர்ந்தவர்...

Published:Updated:
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

மிகப் பெரும் பணக்காரர்கள் என்னும் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையேதான் இப்போது போட்டி. ஆனால், சில ஆண்டுகளுக்குமுன் முகேஷ் அம்பானிக்கும் திலிப் சாங்விக்கும் இடையேதான் இருந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு திருப்புமுனைகளுக்குப்பிறகுதான் முதல் தலைமுறை (Self made) பணக்காரராக உயர்ந்தவர்.

 மருந்து விற்பனை
மருந்து விற்பனை

அப்பா கற்றுத் தந்த மருந்து விற்பனை...

நம் நாட்டில் கோவிட்டுக்குப் பிறகுதான் பார்மா துறை குறித்து பலரும் கவனம் செலுத்தினார்கள். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் கவனம் செலுத்தினார் திலிப் சாங்வி.

இவர், குஜராத்தைப் பூர்விமாகக் கொண்டவர். ஆனால், கொல்கத்தாவில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர்.

இவரது அப்பா, மருத்துவத் துறையில் வர்த்தகம் செய்தவர் என்பதால், இயல்பாகவே மருந்து விற்பனையில் திலிப்புக்கும் ஆர்வம் பிறந்தது. அனைத்து விதமான மருந்துகளையும் விற்பனை செய்யாமல், மனநலம் சார்ந்த சைக்கியாட்ரிக் துறை மருந்துகளை மட்டுமே விற்பனை செய்துவந்தார்.

மருந்து விற்பனை To மருந்து உற்பத்தி...

பிசினஸ் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஏதோ ஒரு நிறுவனம் தயாரித்த மருந்தை நாம் ஏன் விற்கவேண்டும், நாமே அந்த மருந்தைத் தயாரித்து விற்கலாமே என்கிற யோசனை திலிப்பிற்கு வந்தது.

நல்ல யோசனையை உடனே செயல்படுத்தத் தொடங்குவது பிசினஸ்மேன்கள் அடையும் வெற்றிக்கான முதல் படி. 1983-ம் ஆண்டு மருந்து தயாரிக்கத் தொடங்கினார். தனக்குத் நண்பரிடம் இருந்து தேவையான உபகரணங்களையும், அவருடைய அப்பாவிடம் இருந்து ரூ.10,000 கடனும் வாங்கி, தொழிலைத் தொடங்கினார்.

 மருந்து உற்பத்தி
மருந்து உற்பத்தி

குஜராத்தில் வபி என்னும் இடத்தில் மருந்து உற்பத்தி செய்யும் மையத்தைத் தொடங்கினார். சிறிது சிறிதாக வளரத் தொடங்கிய நிறுவனம், நாடு முழுவதும் விற்பனை செய்யத் தொடங்கியது. ஒரளவுக்கு நெட்வொர்க்கை வளர்ந்தபிறகு நிறுவனங்களை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கியது சன் பார்மா.

அடுத்தடுத்து நிறுவனங்களை வாங்கிய சன் பார்மா...

15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கையக்கப்படுத்திய இந்த நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த கரகோ பார்மா, இஸ்ரேலைச் சேர்ந்த டாரோ பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்களை வாங்கியது.

சன் பார்மா
சன் பார்மா

ஜப்பானுக்குச் சொந்தமான ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்கியபோது சர்வதேச கவனம் பெற்றது. 2015-ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய பார்மா நிறுவனமாகவும், சர்வதேச அளவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாகவும் மாறியது.

அன்று பாசிட்டிவ், இன்று நெகட்டிவ்...

இந்தியாவின் மிகப் பெரிய பார்மா நிறுவனம், பல நிறுவனங்களை கையகப்படுத்தியது மற்றும் முகேஷ் அம்பானியைத் தாண்டியது என அடுத்தடுத்து பல திருப்புமுனைகளை திலிப் கண்டிருந்தாலும், அந்த வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சன்பார்மா பங்கு விலை கடும் சரிவை சந்திக்கத் தொடங்கின. எவ்வளவு வேகமான உயர்ந்ததோ, அவ்வளவு வேகமாக சரிந்தது.

பாசிட்டிவ் & நெகட்டிவ்
பாசிட்டிவ் & நெகட்டிவ்

இந்த சரிவுக்குப் பல காரணங்கள். அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விதித்த கட்டுபாடுகளை உடைத்து வெளியேற முடியவில்லை. மற்ற போட்டி நிறுவனங்களுக்கு இந்தச் சிக்கல் இருந்ததாலும், அவற்றில் இருந்து கொஞ்சம் வேகமாக வெளியேறின. ஆனால், சன்பார்மாவால் எளிதில் வெளியே வரமுடியாதபடிக்கான சக்ரவியூமாக அது இருந்தது. அதனால் அமெரிக்காவில் விற்பனை பாதிக்கப்பட்டது.

இந்தியளவிலும் உலகளவிலும் பல்வேறு நிறுவனங்களை வாங்கியது ஒரு சமயத்தில் சாதகமாகப் பார்க்கப்பட்டது; ஆனால், பிற்பாடு அதுவே பாதகமாகப் பார்க்கப்பட்டது. காரணம், சன் பார்மா வாங்கிய பல நிறுவனங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

மூன்று துறைகளில் முதலீடு...

பார்மா துறையில் வெற்றி அடைந்தததும் அடுத்த துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார் திலீப் சாங்வி. ஆயில் அண்ட் கேஸ், காற்றாலை என முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்தார். அம்பானி, அதானி, டாடா உள்ளிட்ட அனைத்து குழுமங்களும் பல துறைகளில் முதலீடு செய்துவரும் விஷயம்தான் இது. அடிப்படைத் தொழிலில் சிக்கல் வராதவரைக்கும் அவையெல்லாம் ஓகே. ஆனால், திலிப் சாங்க்விக்கு அடிப்படைத் தொழிலே சிக்கல் ஏற்பட்டதால், ஒட்டுமொத்தமாக நெகட்டிவ் இமேஜ் இருந்தது. அதனால் கோவிட்டுக்கு முந்தைய சில ஆண்டுகளில் சன்பார்மா பங்குகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

ஆண்டுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தீலிப் சாங்வி தனது சம்பளத்தை ஒரே ஒரு ரூபாயை சம்பளமாகக் குறைத்துக் கொண்டார். இத்தனைக்கு 2018-19 நிதி ஆண்டில் 27% வளர்ச்சி இருந்தது.

கோவிட்டில் அதிகரித்த லாபம்...

இந்தச் சூழலில் கோவிட் வந்தவுடன் ஒட்டுமொத்த பார்மா துறையும் வளரத் தொடங்கியதால், சன்பார்மாவும் சேர்ந்தே வளர்ந்தது. கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் சன் பார்மா நிறுவனம் ரூ.4,932 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது. கடந்த சில நிதி ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்த சன் பார்மா, கடந்த காலாண்டில் மட்டும் ரூ.1,011 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி இருக்கிறது.

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

2015-ம் ஆண்டு உச்சபட்ச சந்தை மதிப்பில் சன் பார்மா வர்த்தமாகியது. தற்போது கிட்டத்தட்ட அந்த சந்தை மதிப்புக்கு அருகில் வர்த்தகமாகிறது.

2015-ம் ஆண்டு சுஸ்லான் நிறுவனத்தில் ரூ.1,800 கோடி முதலீடு செய்து 23% பங்குகளை வைத்திருந்தார். தற்போது 12% பங்குகள் இவர் வசம் இருப்பதாக புளும்பெர்க் தெரிவிக்கிறது. மேலும், சுஸ்லானில் உரிமைப் பங்குகளில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

பார்மா தவிர்த்த மற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடுகளும் கைகொடுத்திருந்தால், தற்போது இருக்கும் நிலையைவிட பல மடங்குகள் பெரிய குழுமமாக சன் பார்மா இருந்திருக்கும்.

ரூ.10,000-த்தை வைத்து பல ஆயிரம் கோடிகளாக மாற்றி திலிப் சாங்வி உண்மையிலேயே கில்லாடி பிசினஸ்மேன்தான்!

(திருப்புமுனை தொடரும்)