Published:Updated:

Pension: குடும்ப உறுப்பினர் பட்டியலில் இடம் பெறாத குடும்ப உறுப்பினர்களும் குடும்ப பென்ஷன் பெறலாம்!

central civil services pension rules 2021

மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021 (central civil services (pension) rules 2021) தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது. பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் விதிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய துணை விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Pension: குடும்ப உறுப்பினர் பட்டியலில் இடம் பெறாத குடும்ப உறுப்பினர்களும் குடும்ப பென்ஷன் பெறலாம்!

மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021 (central civil services (pension) rules 2021) தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது. பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் விதிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய துணை விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Published:Updated:
central civil services pension rules 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு (பழைய பென்ஷன் திட்டத்தின்படி) பென்ஷன், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் குடும்ப பென்ஷன் முதலானவற்றை வழங்குவதற்கான, `மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிமுறைகள் 1972’ சீரமைக்கப்பட்டு-மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021 (central civil services (pension) rules 2021) தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது.

Pension Scheme | பென்ஷன்
Pension Scheme | பென்ஷன்

பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் விதிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய துணை விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் கவனிக்கத்தக்க பல்வேறு அம்சங்களில் குடும்ப பென்ஷன் பற்றிய விதிமுறை சீரமைப்பு மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கவனத்துக்கு உரியதாக அமைந்துள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர் படிவம் - 4

பணியில் சேர்ந்தவுடன் தன் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டியது படிவம் - 4. வரிசை எண், பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் (விரும்பினால் தெரிவிக்கலாம்) குடும்ப உறுப்பினரின் உறவு முறை, மணமானவரா ஆகாதவரா, குறிப்பு ஆகிய விவரங்களுடன் கூடிய இப்படிவத்தில் குடும்ப பென்ஷன் பெறத் தகுதியுடையவரா, தகுதி இல்லாதவரா என்ற பாகுபாடு பார்க்காமல் கீழ்க்கண்டவர்களின் பெயர்-விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

central civil services pension rules 2021
central civil services pension rules 2021
பென்ஷன்
  • ஊழியர் ஆண் எனில் மனைவி, பெண் ஊழியர் எனில் கணவரின் பெயர் (சட்டப் பூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள மனைவி/கணவர் உட்பட).

  • மகன், மகள் (இறந்துபோன கணவர் அல்லது மனைவிக்கு பிறந்தவர்கள், விவகாரத்தான கணவர் - மனைவி மூலமான பிள்ளைகள் தத்தெடுத்த பிள்ளைகள், சட்டபூர்வமல்லாத முறையில் பிறந்த பிள்ளகைள் உட்பட)

  • பெற்றோர்.

  • மாற்றுத்திறனாளியாக உள்ள (தாயையோ, தந்தையையோ பொதுவாகக் கொண்ட) சகோதர - சகோதரிகள்.

 ஆகிய அனைவரது பெயர் விவரங்களை எழுதி தேதியுடன் கூடிய கையொப்பமிட்டு தனது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பித்து விட வேண்டும்.

 இவ்வாறு சமர்ப்பித்த பிறகு ஏற்படும் பிறப்பு, இறப்பு, விவாகரத்து, மறுமணம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை அவ்வப்போது அலுவலகத் தலைவருக்கு தெரிவித்து அலுவலகத் தலைவரின் தேதியுடன்கூடிய கையொப்பம் பெற வேண்டும்.

சிறப்பம்சம்..!

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த (Original Form-4) படிவத்தில்தான், மேற்கண்ட பிறப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுமே தவிர, (முன்பு போல்) ஒவ்வொரு முறையும் புதிய படிவம் சமர்ப்பிக்கக் கூடாது. இந்தப் புதிய நடைமுறையால் கிடைக்கும் நன்மைகள் கீழ்க்கண்டபடி இருக்கலாம். அதாவது-

ஓய்வூதியம்
ஓய்வூதியம்
சித்தரிப்பு படம்
  • புதிய புதியதாக படிவம் சமர்ப்பிக்கும் நேர்வில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த குடும்ப உறுப்பினர் பெயர் புதிய படிவத்தில் விடுபட வாய்ப்பு உண்டு.

  • மேற்கண்ட விடுபாடு, கவனக் குறைவு காரணமாக இருக்கலாம். என்றாலும், குறிப்பிட்ட மகன் / மகளுக்குத்தான் திருமணமாகிவிட்டதே என்ற நினைப்பிலும் மகன் / மகள்  பெயரை விட்டுவிடக் கூடும். குறிப்பிட்ட குடும்ப உறுப்பினருக்கு திருமணமாகிவிட்டது அல்லது இறந்துவிட்டார் என்ற விவரம் பென்ஷன் ஏற்பளிப்பு (sanction) செய்யும் கணக்கு அதிகாரிக்குத் தெரிந்தால்தான், ஊழியர் மறைவுக்குப் பின் ஏற்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான  சச்சரவுகளைத் தவிர்க்க முடியும். எனவே, இந்த நடைமுறை மிகவும் சிறந்த ஒன்று.

  • மனைவி / கணவர் அல்லது பிள்ளைகள் மீதான தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு புதிய படிவம் 4 சமர்ப்பிக்கவும் வாய்ப்புண்டு. இதனடிப்படையிலும், ஒரே படிவத்தில்தான் கடைசி வரை பிறப்பு, இறப்பு, திருமணநிலை மாற்றம் முதலானவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பது சிறந்த நடைமுறையாகத் திகழ்கிறது.

ஓய்வு பெறும்போது

இவ்வாறு அப்-டேட் (update) செய்யப்பட்டு, ஊழியர் தன்வசம் வைத்துள்ள படிவம் - 4 ஐ, ஓய்வுக் காலப் பணப்பலன் பெறுவதற்கான படிவம் 6-ஐ சமர்ப்பிக்கும்போது இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் அனைத்தும் ஓய்வூதிய பட்டுவாடா ஆணை (Pension Payment Order-p.p.o) யில் இடம் பெறும். ஓய்வு பெற்ற ஊழியர் மரணமடைந்த பிறகு, அப்போதைய நிலையில் குடும்ப உறுப்பினர் யார் தகுதி படைத்தவராக உள்ளாரோ அவருக்கு குடும்ப பென்ஷன் ஏற்பளிக்கப்படும். தகுதி உள்ளவர் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

இத்தனையும் மீறி

இத்தனை தூரம் விதிமுறைகளைச் செம்மைப்படுத்திவிட்ட நிலையிலும், குடும்ப உறுப்பினர் எவரது பெயராவது விடுபட்டுப் போயுள்ளது என்ற காரனத்துக்காக, பெயர் விடுபட்ட குடும்ப உறுப்பினருக்கு குடும்ப பென்ஷன் மறுக்கப்படக் கூடாது. விண்ணப்பம் வரப்பெற்றால் இறந்துபோன ஊழியரின் அலுவலகத் தலைவர், இவ்வாறு பெயர் விடுபட்டுப் போயுள்ளவர் குடும்ப பென்ஷன் பெறத் தகுதியுள்ளவர் என்பதை ஆவண அடிப்படையில் உறுதி செய்துகொண்டு `குடும்ப பென்ஷன்’ வழங்கலாம் என்பதே தற்போதைய விதி 15 (h)(i)-ன் படியான புதிய நடைமுறை.

படிவம் - 5

மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு செய்யப்படுபவை. ஊழியர், ஓய்வு பெற்ற பிறகு மணம் புரிந்தாலோ, மறுமணம் செய்துகொண்டாலோ, அவ்வாறு மணம் அல்லது மறுமணம் மூலம் கணவர் / மனைவியாகிவிட்டவரின் பெயரையும் ஆவண ஆதாரத்துடன் அலுவலகத் தலைவருக்குத் தெரிவிக்கலாம். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய படிவம்-5. ஓய்வு பெற்ற பிறகு மணந்துகொண்ட மனைவி மற்றும் பிறக்கும் குழந்தைகளின் பெயரையும், பிறந்த தேதி மற்றும் ஆவண ஆதாரத்துடன் இதே படிவம் 5-ல் சமர்ப்பிக்க வேண்டும். இவர்களும் குடும்ப பென்ஷன் பெறுவர்.

நிபந்தனை

குடும்ப பென்ஷன் பெற யாரெல்லாம் தகுதி பெற்றவர்? குடும்ப உறவுகளை பொறுத்து பென்ஷன் தொகை, பென்ஷன் பெறும் காலம் மாறுபடுமா? நிபந்தனை ஏதும் உண்டா? என்ற கேள்விகளில் பரவலான சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கான சில விளக்கங்கள்.

பென்ஷன்
பென்ஷன்

பணியில் உள்ள ஊழியர் இறந்துவிட்டால், அவர் இறந்த மறு நாள் முதல் இறந்தவரின் மனைவி / கணவர் குடும்ப பென்ஷன் பெறலாம். உரிய படிவத்தில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இறந்துபோனவர் கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளத்தில் 50% குடும்ப பென்ஷனாக, 10 வருடங்களுக்குக் கிடைக்கும். 10 வருடங்களுக்குப் பிறகு குடும்ப பென்ஷன் என்பது இறந்த ஊழியரின் சம்பளத்தில் 30% ஆக இருக்கும். வருமான நிபந்தனை கிடையாது. மறுமணம் அல்லது மரணம் வரை பென்ஷன் பெறலாம். மறுமணம் செய்துகொண்ட குடும்ப பென்ஷனருக்கு மைனர் பிள்ளை இருந்தால், அந்த மைனருக்கான குடும்ப பென்ஷனை மறுமணம் செய்துகொண்டவர் தன் பிள்ளை 18 வயதடையும் வரை பெறலாம்.

  • பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக் கொண்டு இருந்த ஒருவர் இறந்துவிடும் நேர்வில் அவரின் மனைவி/கணவர் குடும்ப பென்ஷன் பெறலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இறந்து போனவரின் கடைசி சம்பளத்தில் 50% குடும்ப பென்ஷனாகக் கிடைக்கும். இறந்து போன மறுநாள் முதல் ஏழு வருட முடிவில் அல்லது இறந்து போனவரின் வயது என்றைக்கு 67 ஆகுமோ அதுவரை 50% சம்பளம் பென்ஷனாக இருக்கும். அதன் பின்னர் 30% ஆகக் குறைந்துவிடும் பென்ஷன்.

 என்பிஎஸ் பென்ஷன்
என்பிஎஸ் பென்ஷன்
  • பணியில் இருக்கும்போது இறந்துபோன ஊழியரின் மனைவிக்கு குழந்தை இல்லாதபட்சத்தில், அத்தகைய மனைவி (விதவை) மறுமணம் செய்துகொண்டாலும் குடும்ப பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், விதவையானவர் மறுமணம் செய்தால் மறுமணத்தின்போது தன் வருமானமாக குறைந்தபட்ச பென்ஷனுக்கும் (ரூ.12,420) அதிகமாக வருமானம் பெறுபவர் எனில் குடும்ப பென்ஷன் நிறுத்தப்படும்.

  • மகனுக்கு 25 வயது வரை அல்லது மணமாகும் வரை அல்லது குறைந்தபட்ச பென்ஷனுக்கு மேல் வருமானம் பெறும் வரை (50% அல்லது 30% கடைசி சம்பள அடிப்படையில்) குடும்ப பென்ஷன் கிடைக்கும்.

  • மகளுக்கு திருமணம் ஆகும் வரையிலும், விதவை அல்லது விவாகரத்து பெற்றவருக்கு மறுமணம் ஆகும் வரையிலும் குடும்ப பென்ஷன் உண்டு. இவர்களது வருமானம் குறைந்தபட்ச பென்ஷனுக்குச் சமமாக அல்லது அதிகமாகப் பெறும்போது பென்ஷன் நிறுத்தப்படும்.

  • மூளை வளர்ச்சியற்ற, உடல் முடங்கிப்போன பிள்ளைகளுக்கும் வாழ்நாள் வரை பென்ஷன் கிடைக்கும். மேற்கண்ட வருமானம் பெற்றாலும், திருமணம் ஆனாலும்  நிறுத்தப்பட்டுவிடும்.

  • ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு, தனது பிள்ளைகளுக்கு மூளை செயல்பாடின்மை, உடல் செயல்பாட்டின்மை ஏற்பட்டாலும், உரிய மருத்துவச் சான்றுடன் விண்ணப்பம் செய்து அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

  • ஓய்வு பெற்ற ஒருவர் இறந்துபோன பிறகு, அவரின் பிள்ளைகள் மேற்கண்ட மூளை அல்லது உடல் செயல்பாடின்மைக்கு உட்பட்டால் இறந்து போனவரின் குடும்ப பென்ஷன் பெறும் மனைவி / கணவர் விண்ணப்பித்து இத்தகு இயலாமையுற்ற பிள்ளைகள் பென்ஷன் பெற ஏற்பாடு செய்து வைத்துவிடலாம்.

 பென்ஷன்
பென்ஷன்
  • ஊழியர் மற்றும் அவரின் மனைவி (அல்லது) கணவர் இருவருமே இறந்துபோன நிலையிலும், மேற்கண்ட இயலாமைக்கு உட்படுவோர் விண்ணப்பித்து பென்ஷன் பெறலாம். இதேபோல், மணமாகாத/விதவையான, விவாகரத்து பெற்ற மகள்களும், தாய்-தந்தையர் இறந்து போன நிகழ்வில், தாமே விண்ணப்பித்து பென்ஷன் பெறலாம்.

  • இவ்வாறு பென்ஷன் பெறுவதற்கு மேற்சொன்ன படிவம் 4 அல்லது படிவம் 5-ல் தன் பெயர் இடம் பெற்றிருந்தால்தான் குடும்ப பென்ஷன் கிடைக்கும் என்ற நிலை இப்போது இல்லை. இதற்காக உருவாக்கப்பட்டதுதான் மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிமுறைகள் 2021-ல் இடம் பெற்றுள்ள விதிமுறை 15 (h) (i)

தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு பென்ஷன் விதிமுறைகள் (Tamilnadu Pension Rules) 1978-தான் நாளது தேதிவரை அமலில் உள்ளது. அதன்படியே குடும்ப பென்ஷன் தரப்படுகிறது. 

   - ப.முகைதீன் சேக்தாவுது