Published:Updated:

`ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன் சேமிப்பு பத்திரம்’ - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு 2020-ம் ஆண்டிற்கான ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்புப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஜூலை 1-ம் தேதி முதல் சேமிப்பைத் தொடங்கலாம். இதற்கான வட்டி விகிதம் 7.15% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் வட்டி வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.

``ஆகஸ்ட் 31 வரை வங்கிக் கடன் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை" - ரிசர்வ் வங்கி!

இந்தச் சேமிப்பு பத்திரத்தில் இந்திய குடிமக்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இது வரிக்குட்பட்ட சேமிப்புப் பத்திரமாகும். இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான எந்த உச்சவரம்பும் இல்லை. குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயாவது இருக்க வேண்டியது அவசியம். ஏழு வருடங்களுக்குப் பிறகே இந்த முதலீடானது திரும்பக் கிடைக்கும். மூத்த குடிமக்களின் திட்டத்தில் மட்டும் முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான வசதிகள் உள்ளன.

பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள்

இந்தச் சேமிப்புப் பத்திரங்களில் பணமாக 20,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். பிற பணம் செலுத்தும் வகைகளின் (காசோலை / வரைவோலை / இணையம் மூலம் பணம் செலுத்துதல்) மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். இந்தச் சேமிப்பு பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் எஸ்.பி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகியவற்றில் பெறலாம். இந்தப்பத்திரங்களானது மின்னணு முறையிலேயே வழங்கப்படும். சேமிப்புப் பத்திரக் கணக்குகளானது பத்திரம் வைத்திருப்பவர்களின் கணக்கில் பாண்ட் லெட்ஜர் அக்கவுண்ட் என்ற பெயரில் வழங்கப்படும். இப்பத்திரங்களை இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது.

முதலீடு
முதலீடு

மேலும், இவற்றை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களுக்கு இணை பாதுகாப்பாகவும் பயன்படுத்த இயலாது. சேமிப்பு பத்திரங்களை வைத்திருப்பவர் மட்டுமே தனது இறப்பிற்குப் பிறகு கணக்குகளைக் கையாளுவதற்கான நபரை நியமனம் செய்ய முடியும். இந்தப் பத்திரம் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுவதால் முதலீட்டில் உள்ள ரிஸ்க் அளவு குறைவு.

அடுத்த கட்டுரைக்கு