Published:Updated:

சுரேஷின் குடும்பத்துக்கு அத்தியாவசிய செலவுக்குக்கூட கையில் காசு இல்லை... ஏன் தெரியுமா?

மாடல் படம்

சுரேஷ் செய்த தவறினால், கையில் பணம் எதுவும் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்குக்கூட பிறரிடம் கேட்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

சுரேஷின் குடும்பத்துக்கு அத்தியாவசிய செலவுக்குக்கூட கையில் காசு இல்லை... ஏன் தெரியுமா?

சுரேஷ் செய்த தவறினால், கையில் பணம் எதுவும் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்குக்கூட பிறரிடம் கேட்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

Published:Updated:
மாடல் படம்

பொதுவாக, எல்லா நிறுவனங்களும் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் அந்த நிதி ஆண்டில் செய்யப்போகும் முக்கியமான செலவுகள், முதலீடுகள் பற்றி கேட்கும். இந்த விவரங்களை முன்கூட்டியே நிறுவனத்துக்குத் தந்துவிட்டால், வரி பிடித்தம் செய்யலாமா, கூடாதா என்கிற முடிவை நிறுவனங்கள் எடுக்கும்.

வருமான வரி
வருமான வரி

உதாரணமாக, பணியாளர் ஒருவர் அண்மையில் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வீட்டுக் கடன் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையும், திரும்பக் கட்டும் வட்டியில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அந்த வகையில் வீட்டுக் கடன் வாங்கியதன் மூலமே அவர் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் வரிச்சலுகை பெற முடிகிறது. அதாவது, அவரின் மாத வருமானம் ரூ.50,000. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு அவர் வருமான வரி கட்டத் தேவை இருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது மாதிரி கணக்கிட்டே பலரும் வரிச் சலுகைக்காக வீட்டுக் கடனை வாங்குகிறார்கள். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, வரிச் சலுகை பெற வருமானத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்துவிடுவதால், அத்தியாவசியமான செலவு மற்றும் முதலீட்டுக்குப் பணம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குடும்பத்துக்கு மிக அவசியமாக ஆயுள் காப்பீட்டு பாலிசியைக்கூட எடுக்க முடியாமல் போய்விடுகிறது.

சிக்கலில் சிக்கிய சுரேஷின் குடும்பம்...

மாடல் படம்
மாடல் படம்

30 வயதான சுரேஷுக்கு அண்மையில் அப்படித்தான் நடந்தது. ஓராண்டுக்கு முன் வீட்டுக் கடன் மூலம் அவர் வீடு வாங்கினார். முன்பணம் (டவுன்பேமென்ட்) கட்ட ஏற்கெனவே எடுத்திருந்த யூலிப் பாலிசியை சரண்டர் செய்துவிட்டார். வீட்டுக் கடனுக்குக் கட்டிய அசலும் வட்டியும் வரிச் சலுகைக்குப் போதுமானதாக இருந்ததால், புதிதாக ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைத்துவிட்டார் சுரேஷ். தவிர, வீட்டுக் கடனுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் விட்டுவிட்டார்.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான சுரேஷுக்கு, தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் வரை செலவானது. மருத்துவக் காப்பீடு இல்லை என்பதால், இந்தத் தொகையை மனைவி அவரின் நகையை விற்று கட்டியிருக்கிறார். ஆனால், குணமடைந்து வீட்டுக்குத் திரும்ப வந்த ஓரிரு வாரங்களில் வேறு பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து போனார் சுரேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது அவரின் குடும்பம் நிதி நெருக்கடியில் தவிக்கிறது. வீட்டுக் கடனுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், குடும்பத்தினருக்கு வீடு கிடைத்திருக்கும். அதையும் சுரேஷ் செய்யவில்லை என்பதால், வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைத் தொடர்ந்து பல மாதங்களாகக் கட்ட முடியாத நிலைக்கு சுரேஷின் குடும்பம் சென்றது. இதனால், வீட்டுக் கடன் கொடுத்த வங்கி, வீட்டை எடுத்துக்கொண்டதால், சுரேஷின் குடும்பத்தினர் தற்போது வாடகை வீட்டில் இருக்கிறார்கள். வீடு வாங்குவதற்கு அனைத்து சேமிப்புகளையும் செலவு செய்துவிட்டதால், கையில் பணம் எதுவும் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்குக்கூட பிறரிடம் கேட்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்
டேர்ம் இன்ஷூரன்ஸ்

வரிச் சலுகை பெறுவதற்காக சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைத்த சுரேஷ், வாழ்க்கையின் முக்கியமான தேவைகளான ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, அவசரகால நிதித் தொகுப்பு ஆகியவற்றைச் செய்திருந்தால் அவரின் குடும்பம் இந்த அளவுக்கு சிக்கலைச் சந்தித்திருக்காது.

இனியாவது வரிச் சலுகைகளுக்கான திட்டங்களைத் தேர்வு செய்யும் முன்பு, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தேவையான ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டை எடுத்திருக்கிறோமா என்று பாருங்கள். எடுக்கவில்லை என்றால் உடனே இன்ஷூரன்ஸை எடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism