Published:Updated:

பல்கலைக்கழகத்தில் சம்பளம் போட பணமில்லை..! `மாத்தி யோசி' பிசினஸ் கதைகள் - 2

சம்பளம் ( income )

திரவியம் - சிறிய பெயர்தான். ஆனால், அதன் பின்னால் இருக்கும் பட்டங்கள், கூட்ஸ் வண்டி போல் நீண்டிருக்கும். புரொஃபஸராக ஒரு மாமாங்கம். கல்லூரி முதல்வராக `20 ஆண்டுகள். அந்த அனுபவம் நெற்றியில் படர்ந்திருக்கும் சுருக்கங்களில் பிரதிபலிக்கும்.

பல்கலைக்கழகத்தில் சம்பளம் போட பணமில்லை..! `மாத்தி யோசி' பிசினஸ் கதைகள் - 2

திரவியம் - சிறிய பெயர்தான். ஆனால், அதன் பின்னால் இருக்கும் பட்டங்கள், கூட்ஸ் வண்டி போல் நீண்டிருக்கும். புரொஃபஸராக ஒரு மாமாங்கம். கல்லூரி முதல்வராக `20 ஆண்டுகள். அந்த அனுபவம் நெற்றியில் படர்ந்திருக்கும் சுருக்கங்களில் பிரதிபலிக்கும்.

Published:Updated:
சம்பளம் ( income )

``ஸார்” - கிளார்க் குமரேசனின் குரலைக் கேட்ட திரவியம் நிமிர்ந்து பார்த்தார். சில நாள்களுக்கு முன்புதான் அந்தத் தொலைதூரப் பல்கலைக்கழகத்தின் உயர்பொறுப்பை ஏற்றிருந்தார்.

திரவியம் - சிறிய பெயர்தான். ஆனால், அதன் பின்னால் இருக்கும் பட்டங்கள், கூட்ஸ் வண்டி போல் நீண்டிருக்கும். புரொஃபஸராக நெடுங்காலம். கல்லூரி முதல்வராக 20 ஆண்டுகள். அந்த அனுபவம் நெற்றியில் படர்ந்திருக்கும் சுருக்கங்களில் பிரதிபலிக்கும்.

ரூபாய்
ரூபாய்

``என்ன விஷயம், குமரேசன்...?”

```நாளைக்கு அஞ்சாம் தேதி. எல்லோருக்கும் சம்பளம் போடணும்.”

``சரி...”

``அதுக்கு நம்ம பேங்க்ல ஒரு டெம்பொரரி ஓவர் டிராஃப்ட் வாங்கணும்.”

திரவியத்துக்குக் குழப்பமாக இருந்தது. வலுவான பல்கலைக் கழகம். இந்தியா முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள், இதில் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். சம்பளம் போட TOD வாங்க வேண்டிய சூழலா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பேங்க் மேனேஜருக்கு நாம ஒரு லெட்டர் குடுத்தா போதும் ஸார். செக் பாஸாயிடும்...”

லெட்டர் தயாரானது. கையெழுத்திட்டார். சம்பளப் பிரச்னை தீர்ந்தது. மாத இறுதியில் கணக்கு வழக்குகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். மீதி ஃபைல்களில் மூழ்கினார்.

இரண்டு நாள் கழிந்திருக்கும். ஏதோ ஒரு கோப்புக்காக ஒரு பீரோவைத் திறந்தார். அதில் கத்தை கத்தையாக விண்ணப்பப் படிவங்கள். M.A, M.Com என்று ரகவாரியாகப் பிரிக்கப்பட்டு கட்டி வைத்திருந்தார்கள்.

Demand Draft
Demand Draft
மாடல் படங்கள்

எல்லாம் அனுமதி பெற்ற மாணவர்களின் படிவங்கள். எல்லோருக்கும் பதிவு எண் கொடுத்து, பயிற்சிப் புத்தகங்கள்கூட அனுப்பப்பட்டிருந்தன.

ஆனாலும் கட்டுக்களைப் பார்த்த திரவியம், கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். எல்லாப் படிவங்களிலும் ஒரு வரைவோலை (demand draft) பிணைக்கப்பட்டிருந்தது. அனுமதிக் கட்டணத்துக்கான தொகை.

குமரேசனைக் கூப்பிட்டு விவரம் கேட்டார். ``சார், அப்ளிகேஷன் வந்ததுமே நம்பர் கொடுத்துடுவோம். ஸ்டடீ மெடீரியல்கூட அனுப்பிடுவோம். அப்புறம் ஒரு நாளைக்கு 10, இல்லேன்னா 15 டிராஃப்ட்களை பேங்குல போட்டுடுவோம். அங்க பக்கத்துல இருக்குற மூணு பீரோவிலேயும் இதே மாதிரி இருக்கு ஸார்...” என்றார் கூலாக.

``எல்லாத்தையும் ஒண்ணா பேங்குல போடலாமே..?”

``இல்ல ஸார். எல்லாமே பெரும்பாலும் ஒரே தொகையா இருக்கும். எது யாரோட டிராஃப்ட்ன்னு குழப்பம் வந்துடும்...”

`மாத்தி யோசி’ ஃபார்முலா...
`மாத்தி யோசி’ ஃபார்முலா...

உண்மைதான். பாடத்திட்டங்களுக்கு ஏற்றார்போல் ஒரே மாதிரி கட்டணங்களைத்தானே செலுத்தியிருப்பார்கள்!

``என்ன மிஸ்டர் குமரேசன். இது ஒரு சரியான ரீஸனா? இங்க வாங்க. இந்த அப்ளிகேஷன்ல இருக்குற டிராஃப்டுக்கு நம்ம ஜெராக்ஸ் மெஷின்ல ஒரு காப்பி எடுங்க.”

குமரேசன் ஒரு நொடியில் எடுத்துத் தந்தார். ``காபியை இந்த அப்ளிகேஷன்ல வைங்க. அதுக்கு ஒரு சலான் போடுங்க. மேட்டர் முடிஞ்சுதா?”

சில புதிய படிவங்களைத் திரவியம் வடிவமைத்தார். வங்கிச் சலானோடு பிணைக்க ஒரு படிவம். ஒரு படிவத்தில் 10 டிராஃப்ட்டுகளின் விவரங்கள் இருக்கும். ஆனால், ஒரே ஒரு சலான். ஒரு A4 தாளில் இரண்டு டிராஃப்டுகளின் நகல். அதன் மூலம் கொஞ்சம் காகிதச் சேமிப்பு.

நான்கு ஊழியர்கள் முழு நேரம் பணியாற்றினார்கள். அலமாரிகளில் உறங்கிக்கொண்டிருந்த வரைவோலைகள் வங்கியில் சேர்ந்தன. கணக்கு பேலன்ஸ்-ஆகி இப்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது.

திரவியம் தேடித் தந்த திரவியம் (செல்வம்)!

போனஸ்
போனஸ்

``ஸார், எங்களுக்கெல்லாம் தீபாவளி அட்வான்ஸ் வேணும்.”

``குமரேசன், அட்வான்ஸ் என்ன. போனஸ்ஸே தரலாமே. நம்ம ஊழியர்களோட ஒத்துழைப்பாலேதானே யுனிவர்சிடி இப்ப ஃபினான்ஷியலா பலமா இருக்கு.”

கையருகே ஒரு கற்பகத் தரு. அது புரியாமல் வறட்சியில் வீழ்ந்திருக்கிறார்கள்! மாத்தி யோசித்தால் எதற்கும் தீர்வு உண்டுதானே?