Published:Updated:

பெரும் சரிவிலிருந்து மீண்டு பாட்டா வெற்றி கண்டது எப்படி? திருப்புமுனை- 14

பாட்டா

2002, 2003 மற்றும் 2004 -ம் நிதி ஆண்டில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. ரூ.74 கோடி, ரூ.26 கோடி மற்றும் 63 கோடி ரூபாய் அளவுக்குத் தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்தது இந்த நிறுவனம்...

பெரும் சரிவிலிருந்து மீண்டு பாட்டா வெற்றி கண்டது எப்படி? திருப்புமுனை- 14

2002, 2003 மற்றும் 2004 -ம் நிதி ஆண்டில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. ரூ.74 கோடி, ரூ.26 கோடி மற்றும் 63 கோடி ரூபாய் அளவுக்குத் தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்தது இந்த நிறுவனம்...

Published:Updated:
பாட்டா

சிலர் மரணத்தை நெருங்கி தப்பிப் பிழைத்திருப்பார்கள். அதுபோல, சில நிறுவனங்கள் திவால் வரைக்கும் சென்று தப்பித்திருக்கும். அப்படிப்பட்ட நிறுவனம்தான் பாட்டா இந்தியா. 1995-ம் ஆண்டு ஒரு சிறிய நஷ்டத்தை சந்தித்து மீண்டது. ஆனால், 2002, 2003 மற்றும் 2004-ம் நிதி ஆண்டில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. ரூ.74 கோடி, ரூ.26 கோடி மற்றும் 63 கோடி ரூபாய் அளவுக்குத் தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்தது இந்த நிறுவனம்.

பங்குதாரர்கள், பணியாளர்கள் என யாருக்கும் திருப்தியில்லை. இந்த நிலையில், நிறுவனத்தை மீட்பதற்காக பாட்டாவின் சிலி நாட்டு பிரிவை கவனித்துவந்த மெர்சிலோ விலாகிரான் ( Marcelo Villagran ) இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் தலைமையில்தான் அடுத்த சில ஆண்டுகளில் லாபப் பாதைக்கு பாட்டா நிறுவனம் திரும்பியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாட்டா என்னும் வெளிநாட்டு நிறுவனம்...

1894-ம் ஆண்டு செக்கோஸ்லாவியாவில் தாமஸ் பாட்டா, அன்னா பாட்டா மற்றும் அந்தோனி பாட்டா ஆகிய சகோதரர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. 1932-ம் ஆண்டு தாமஸ் பாட்டா இந்தியாவுக்கு வந்தார். அப்போது பலரும் வெறும் கால்களில் நடப்பததை கண்ட தாமஸ், இந்தியாவில் ஆலை அமைக்க முடிவெடுக்கிறார். கொல்கத்தாவில் மிகப்பெரிய ஆலை அமைக்கப்பட்டது. ( சர்வதேச அளவில் 22 ஆலைகள் உள்ளன. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பாட்டா செயல்பட்டு வருகிறது!)

பாட்டா
பாட்டா

இது தவிர தற்போது ஹரியானா, ஓசூர், பெங்களூரு, பீகார் ஆகிய இடங்களில் ஆலை உள்ளது. 1990 வரைக்கும் பெரிய போட்டி இல்லை என்பதால், நிறுவனத்தின் வளர்ச்சி சீராக இருந்தது. அதனைத் தொடர்ந்து போட்டி அதிகரித்தது. தவிர, மக்களின் ரசனையும் வளர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், ரசனையை பாட்டா கவனிக்கவில்லை. தவிர, பாட்டாவில் தொழிற்சங்களின் கட்டுப்பாடு அதிகமாக இருந்தததால், அடிக்கடி வேலைநிறுத்தம், உற்பத்திக் குறைபாடு, சரியாக சப்ளை இல்லாத சூழல் இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து பெரிய நஷ்டத்தைக் கொண்டுவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன செய்தார் மெர்சிலோ விலாகிரான்?

பிசினஸில் பல சிக்கல்கள் இருந்தன. ஒவ்வொரு முறை கொல்கத்தா செல்லும்போது சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘‘நாம் பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை எனில் நாம் காணாமல் போகும் வாய்ப்புதான் இருக்கிறது’’ என்பதைப் புரியவைத்தார். அடுத்து சொல்லவரும் விஷயத்தைத் தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

மெர்சிலோ விலாகிரான்
மெர்சிலோ விலாகிரான்

பாட்டாவின் ஷோரூம்கள் அனைத்தும் சொந்த ஷோரூம்கள். அதனால் பணியாளர்கள் அனைவரும் நிறுவனத்தின் பணியாளர்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷோரூம் செயல்படாது. அதே போல, எட்டு மணி நேரம் மட்டுமே ஷோரூம் செயல்படும். இதைவிட முக்கியம், ஒரு ஷோரூமில் உள்ள பணியாளர்களை மற்ற ஷோரூமுக்கு மாற்ற வேண்டும் என்றால்கூட யூனியனிடம் அனுமதி வாங்கவேண்டும்.

இதுபோன்ற பல விதிமுறைகளால் ஒரு ஸ்டோர் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாகவே இருந்தது. ஒரு பிசியான மார்கெட் என்றால்கூட, பாட்டா ஷோரூம் திறந்திருக்காது என்பதுதான் நிஜம். வாடிக்கையாளர்களைக் கவனிக்காத பணியாளர்கள் இருக்கும் சூழலில், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான புராடட்களும் இல்லை என்பதால், விற்பனையில் கடும் தேக்கம் இருந்தது.

விருப்ப ஓய்வும் அவுட் சோர்ஸும்

இந்த நிலையில், விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு மட்டும் சுமார் 1,500 பணியாளர்கள் இதன்மூலம் வெளியேறினார்கள். அதேபோல, முக்கியம் அல்லாத, லாபம் குறைவாக இருக்கிற மற்றும் மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் புராடக்ட்டுகளை அவுட்சோர்ஸ் செய்தது பாட்டா.

உதாரணமாக, ஹவாய் செருப்பு பெரும்பாலான மக்களிடம் சென்று சேர்ந்தாலும் இதனால் பெரிய லாபம் இல்லை. அதனால் இந்த பிராண்ட் அவுட் சோர்ஸ் செய்தது. இதன் மூலம் பணியாளர்களைக் கையாளுவது குறையும். மேலும் சீரான லாப வரம்பும் இருக்கும்.

பாட்டா
பாட்டா

தவிர, நஷ்டத்தில் இயங்கிவந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை மூடப்பட்டன. சில ஸ்டோர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் நிறுவனத்தின் செலவு குறைந்தது. அதேபோல, தேவைப்படும் இடங்களில் புதிய ஸ்டோர்களையும் திறந்தது.

கமிஷன் திட்டம் என்னும் கமிஷன் திட்டம்...

கமிஷன் திட்டம் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது பாட்டா. ஒரு ஸ்டோருக்கான இடம், வாடகை, பொருள்கள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் பாட்டாவே பார்த்துக்கொள்ளும். தொழில்முனைவில் ஆர்வம் இருக்கும் பணியாளர்கள் இந்த ஸ்டோர்களை நடத்தி, விற்பனைக்கான கமிஷனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் கடையில் தேவைப்படும் பணியாளர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கான சம்பளத்தை மட்டுமே ஸ்டோர் உரிமையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாடலில் பணியாளர்களுக்கான செலவு கணிசமாக குறைந்தது. இதனால் லாப வரம்பும் அதிகரிதது. அதேபோல, 3000 சதுர அடிக்கு பெரிய ஸ்டோர்களைத் திறந்தனர்.

இதனால் பல வகையான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிந்தது. அதேபோல இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களிலும் ஸ்டோர் திறக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்குமேல் மக்கள் இருக்கும் நகரங்களில் ஸ்டோர் திறக்கப்பட்டது. மேலும், மால்கள் வரத்தொடங்கிவுடன் அனைத்து மால்களிலும் ஸ்டோர் திறக்கப்பட்டது.

ஷு
ஷு

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் முறைப்படுத்தப்பட்டாத நிறுவனங்களே பெரிதும் இருந்தன. இந்தப் பிரிவிலும் பாட்டா கவனம் செலுத்தியது. இதனால் அடுத்த ஆண்டிலே லாபம் ஈட்டத் தொடங்கியது. அடுத்த நிதி ஆண்டில் சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் இருந்தது. மேலும், சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. 2005-ம் ஆண்டு முதல் இந்தியா பிரிவைக் கவனித்த வில்லாகிரான் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அதனைத் தொடர்ந்து மெக்ஸிகோ பிரிவைக் கவனிக்க சென்றுவிட்டார்.

வந்தார் சந்தீப்  கட்டாரியா...

யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய சந்தீப் கட்டாரியா 2017-ம் ஆண்டு பாட்டா இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகளில் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். மேலும், Surprisingly Bata என்னும் வாசகத்தை அறிமுகப்படுத்தினார்.

சந்தீப்  கட்டாரியா...
சந்தீப் கட்டாரியா...

இதனால் இளம் வாடிக்கையாளர்களைக் கவரமுடிந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் 10 முதல் 14 வயதுடையவர்களுக்கான புதிய புராடக்ட்டுகளை அறிமுகம் செய்தார் சந்தீப். காலணி உற்பத்தியில் பாட்டா நிறுவனம் இன்றைக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கக் காரணம், சவால்கள் ஏற்பட்டபோதெல்லாம் அதை சந்தித்து ஜெயித்து, திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொண்டதுதான்!

(மீண்டும் சந்திப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism