Published:Updated:

``மோசடி நிறுவனங்கள் நடக்கக் காரணம் காவல் துறையின் அலட்சியமே!" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

``பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுபோன்ற நிதித் திரட்டும் திட்டங்களின் விளம்பரங்கள் வரும்போதே அதுகுறித்து விசாரணையை நடத்தியிருக்க வேண்டும். பொருளாதார குற்றப் பிரிவுக்கு தெரியாமல் இதுபோன்ற திட்டங்கள் நடக்க வாய்ப்பில்லை...''

``மோசடி நிறுவனங்கள் நடக்கக் காரணம் காவல் துறையின் அலட்சியமே!" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

``பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுபோன்ற நிதித் திரட்டும் திட்டங்களின் விளம்பரங்கள் வரும்போதே அதுகுறித்து விசாரணையை நடத்தியிருக்க வேண்டும். பொருளாதார குற்றப் பிரிவுக்கு தெரியாமல் இதுபோன்ற திட்டங்கள் நடக்க வாய்ப்பில்லை...''

Published:Updated:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி செய்து மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டி இருக்கின்றன. இந்த மோசடி சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் செய்த மோசடி
ஐ.எஃப்.எஸ் நிறுவனம் செய்த மோசடி

``மக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி பல நூறு கோடிகளில் மோசடி செய்துள்ள நிதி நிறுவனங்களின் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. எவ்வளவு விழிப்புணர்வை ஊடகங்கள் வழங்கி வந்தாலும் தொடர்ந்து மோசடிகளில் சிக்கி ஏமாறுவது வாடிக்கையாக இருக்கிறது. இது போன்ற மோசடி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறியாமல் காவல்துறை மெத்தனமாக இருப்பது கவலை அளிக்கிறது.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் செய்த மோசடியில் ஏஜென்டாக வேலை செய்த வினோத்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக விழாக்கள், உணவு உள்ளிட்ட பிற இலவச பொருள்கள் கொடுப்பது எனக் காலங்காலமாக இப்படித்தான் மக்களை ஆசைகாட்டி ஏமாற்றும் தந்திரத்தை செய்து வருகிறார்கள். ஆனால், அது இன்றளவும் அப்படியே மாறாமல் தொடர்கிறது என்பதுதான் வேதனை. கொஞ்சமும் யோசிக்காமல் மக்கள் இது போன்ற ஆசை வலைகளில் சிக்கி தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகச் சொல்லி ஏமாற்றி யிருக்கிறார்களே, இது சாத்தியம்தானா என்ற கேள்வியை ஏன் யாரும் கேட்டுக்கொள்ளவில்லை.

 மோசடி (Representational Image)
மோசடி (Representational Image)

இது போன்ற மோசடிகளில் 10 சதவிகிதம் மக்களின் விழிப்புணர்வின்மை காரணம் என்றால், 90 சதவிகிதம் காவல்துறையின் அலட்சியம் காரணம் என்று சொல்லலாம். பல லட்சக்கணக்கான மக்களிடம் இருந்துபல நூறு கோடிகளில் பணத்தைத் திரட்டி ஏமாற்றியிருக்கிறார்கள். இதுவரை இதில் என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற மோசடித் திட்டங்கள் பல விளம்பரங்கள் மூலமாகவே நடத்தப்பட்டிருக்கிறது.

ஊடகங்களில், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் காவல்துறை ஏன் கவனிக்க தவறுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

``பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுபோன்ற நிதித் திரட்டும் திட்டங்களின் விளம்பரங்கள் வரும்போதே அதுகுறித்து விசாரணையை நடத்தியிருக்க வேண்டும். பொருளாதார குற்றப் பிரிவுக்குத் தெரியாமல் இதுபோன்ற திட்டங்கள் நடக்க வாய்ப்பில்லை. அதுவும் இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் தகவல்கள் வந்துசேர்வது மிகவும் எளிதாகவும் விரைவாகவும் இருக்கிறது. தமிழக காவல்துறைக்கும், பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கும் இந்த செய்தி முன்பே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களைத் தடுக்கும் சக்தி எது?

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

தமிழ்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மோசடிகளில் எந்த நிறுவனத்திடமிருந்தும் மக்களின் பணத்தை மீட்டு கொடுத்திருக்கிறது என்று பார்த்தால் எதுவும் இல்லை என்பதுதான் பதில். மக்களிடம் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் காவல்துறை தோற்றுவிட்டது. இப்போதும்கூட மோசடி செய்த நிறுவனங்களிடமிருந்து 10 சதவிகித பணத்தைக் கூட கைப்பற்றவில்லை. அவற்றின் சொத்துகள் முடக்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனங்கள் மீது சாதாரண சட்டப் பிரிவான இந்திய தண்டனை சட்டம் 420 கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய இந்த மோசடி நிதி நிறுவனங்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். இல்லையென்றால் இவர்கள் எளிதில் தப்பிவிடுவார்கள். அவர்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும். மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் செய்த மோசடி
ஐ.எஃப்.எஸ் நிறுவனம் செய்த மோசடி

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் அரசியல் தலைகளும், காவல்துறையும் தொடர்பு இருப்பதாக நாணயம் விகடனும், ஜுனியர் விகடனும் தொடர்ந்து எழுதி வருகிறது. ஆனால், டாக்டர் ராமதாஸ் குறிப்பிடுவதுபோல், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மீது எந்த பெரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, முதல்வர் ஸ்டாலின் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.