Published:Updated:

அடுத்தடுத்து வரும் சர்ச்சை; அசராமல் முன்னேறும் அதானியின் ரகசியம்தான் என்ன?

கெளதம் அதானி

``மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அதானிக்கு அளிக்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியதாக" இலங்கையில் மின்வாரிய தலைவர் சொன்ன கருத்து அங்கு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்காக இலங்கை அரசாங்கம் செய்த சட்டத் திருத்தத்துக்கும் அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடுத்தடுத்து வரும் சர்ச்சை; அசராமல் முன்னேறும் அதானியின் ரகசியம்தான் என்ன?

``மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அதானிக்கு அளிக்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியதாக" இலங்கையில் மின்வாரிய தலைவர் சொன்ன கருத்து அங்கு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்காக இலங்கை அரசாங்கம் செய்த சட்டத் திருத்தத்துக்கும் அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Published:Updated:
கெளதம் அதானி

அதானி என்றாலே சர்ச்சைதான். சிறு வியாபாரியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர், கடந்த 30 ஆண்டுகளில் டாடா, பிர்லாவை எல்லாம் விஞ்சி, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடி நிற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் தொடர்பாக அந்த நாட்டில் மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியபோதும், அதானி அசைந்து கொடுக்கவில்லை. நரேந்திர மோடி பிரதமரான பிறகு அதானியின் வளர்ச்சி பல நூறு மடங்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

கவுதம் அதானி
கவுதம் அதானி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது, இலங்கை மின்வாரியத் தலைவராக இருந்த பெர்டினான்டோ, அதானி பற்றி ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். இலங்கையில் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அதானிக்கு அளிக்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியதாக அவர் சொல்லி இருப்பது அங்கு கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதற்கான இலங்கை அரசாங்கம் செய்த சட்டத் திருத்தத்துக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை மக்கள் `ஸ்டாப்அதானி’ என ட்விட்டரில் ஹேஷ்டாக் செய்ய, அது டிரெண்டிங் ஆகும் நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அதானி அதையும் மீறி முன்னேற்றம் கண்டுவருவது எப்படி, யார் இந்த அதானி, அவரின் கடந்த கால வரலாறு என்ன என்கிற கேள்விகளுக்கு சமீபத்தில் பார்ச்சூன் இந்தியா பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரை பதில் சொல்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த கெளதம் பாய்?

கே.எஃப்.ஜி படத்தின் கதாநாயன் ராக்கியை `ராக்கி பாய்’ என்றே எல்லோரும் அழைப்பார்கள். அது மாதிரி குஜராத்தில் `கெளதம் பாய்’ என எல்லோராலும் அழைக்கப்படுகிறார் கெளதம் அதானி. 1962-ம் ஆண்டு குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் அகமதாபாத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஏழு பேர். இவரின் அப்பா ஒரு துணி வியாபாரி. குஜராத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் தராட் (Tharad) என்னும் ஊரிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.

அதானி
அதானி

கெளதம், இளங்கலை வணிகவியல் படிப்பதற்குக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், ஏதாவது தொழில் தொடங்க வேண்டுமென்ற ஆர்வத்தால் இரண்டாம் ஆண்டிலேயே படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, 1978-ம் ஆண்டு மும்பையில் வைர வியாபரம் செய்துவந்த மஹேந்திரா சகோதரர்களிடம் வைரத்தைத் தரம் வாரியாக பிரிக்கும் டயமண்ட் சார்ட்டராக (diamond sorter) பணியில் சேர்ந்தார்.

அதானி துறைமுகம்
அதானி துறைமுகம்

1981-ல் இவருடைய சகோதரர் ஆரம்பித்து நடத்திவந்த பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொருட்டு சகோதரரின் அழைப்பின் பேரில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதன்மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய புரிதல் ஏற்பட்டது. 1988-ம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனத்தை கெளதம் ஆரம்பித்தார். இது ஆரம்பத்தில் விவசாயம், மின்சார உற்பத்தி சம்பந்தப்பட்ட பொருள்களைக் கையாண்டு வந்தது. 1991-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையைத் தனது டிரேடிங் தொழிலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்து, மெட்டல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் என தனது தொழிலை விரிவாக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1994-ம் ஆண்டு குஜராத் அரசு முந்த்ரா துறைமுக நிர்வாகத்தை தனியாருக்குத் தர நினைத்தது. அதற்கான ஒப்பந்தம் 1995-ம் ஆண்டு கெளதம் அதானிக்குக் கிடைத்தது. அதன்பின், கடந்த 27 ஆண்டுகளில் அதானியின் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவ ஆரம்பித்து. இன்றைக்கு உலக அளவில் ஐந்தாவது செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறார் அதானி.

கெளதம் அதானி
கெளதம் அதானி

அதானியின் ராசி எண் `20’...

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ராசி நம்பர் இருக்கும். அதானியின் வாழ்க்கையில் `20’ என்கிற நம்பர் மிக முக்கியமான பங்கு வகிப்பதாகச் சொல்கிறார்கள். கெளதம் பாயின் பிறந்த நாள், மாதம், வருடத்தைக் கூட்டினால் (24.6.62) வரும் எண்ணிக்கை 20. இவருக்குச் சொந்தமாக இருக்கும் எட்டு கார்களில் ஒவ்வொரு கார் நம்பரின் கூட்டுத் தொகையும் 20 ஆகும். 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ஷார்கேஜ் - காந்திநகர் நெடுஞ்சாலையில் இவரது தலைமையகமும் டவுன்ஷிப்பும் இருக்கும் சாந்திகிராம் என்கிற பகுதியின் பின்கோடைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையும் 20. அது போல, 2020-ம் ஆண்டும் இவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் இவரது நிறுவனப் பங்குகள் பல மடங்கு லாபம் கண்டன.

``இந்தியாவின் மிகப் பெரிய தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனம் (14,000 MW) அதானியினுடையதுதான். டாடா பவர் நிறுவனத்தின் திறன் 8,860MW ஆகும்...''

அதானி குழுமத்தின் வளர்ச்சி

`இந்தியாவின் உள்கட்டமைப்பு வெற்றிக் கதையின் ஓர் அங்கம்தான் அதானி குழுமத்தின் வளர்ச்சி’ என ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் சொல்லியிருக்கிறார் அதானி. இப்போது அதானி குழுமம் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாற்று எரிசக்தி சம்பந்தமான சூரிய சக்தி, காற்று எரிசக்தி, ஹைட்ரஜன், கிரீன் கேஸ், கிரீன் சிமென்ட், கிரீன் ஸ்டீல் எனப் பல துறைகளில் சுமார் 70 பில்லியன் டாலருக்கான முன்மொழிவை 2030-ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் எகிறிப் பாய ஆரம்பித்திருக்கிறது.

அதானி துறைமுகம்
அதானி துறைமுகம்
Subagunam Kannan

இந்தக் குழுமம்தான் இந்தியத் துறைமுகங்களை நிர்வகிப்பதில் மிகப் பெரியதாகும். இது ஆண்டுக்கு 312 மில்லியன் மெட்ரிக் டன் பொருள்களைக் கையாள்கிறது. இதற்கடுத்துதான் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் ஆகும். இது கையாளும் பொருள்களின் அளவு 76.14 மில்லியன் மெட்ரிக் டன். இது போல, இந்தியாவின் விமான நிலையங்களில் ஏழு விமான நிலையங்களின் பராமரிப்பு இந்தக் குழுமத்தின்கீழ் இருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனம் (14,000 MW) அதானியினுடையதுதான். டாடா பவர் நிறுவனத்தின் திறன் 8,860MW ஆகும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமும் அதானி குழுமத்தைச் சேர்ந்தது. மொத்த உற்பத்தித் திறன் சுமார் 20,000MW ஆகும். ஆக, துறைமுகம், விமான நிலையம், மின்சாரம், இயற்கை எரிவாயு உற்பத்தி போன்ற முக்கியமான துறைகள் மட்டுமல்லாமல், சமையல் எண்ணெய் (Fortune) சந்தையிலும் சுமார் 18.9% அளவுக்கு சந்தைப் பங்கை வைத்திருக்கிறது.

பல மடங்கு லாபம்...

இந்தக் குழுமத்தின் சமீபத்திய வளர்ச்சியில் ஒரு பகுதி ஏறக்குறைய 35 நிறுவனங்களை ரூ.82,600 கோடிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கியதன் மூலம் கிடைத்திருக்கிறது. இதில் கடந்த ஆண்டு (2021) மட்டும் ரூ.33,500 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் அதானி சிமென்ட் நிறுவனமானது ஹோல்சிம் இந்தியாவின் பங்குகளை ரூ.81,360 கோடிக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக உயர்ந்திருக்கிறது. இதில் முதலாவது இடம் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கானது.

 மோடி-அதானி
மோடி-அதானி

இந்த அதிரடியான கையகப்படுத்தல்களால் (acquistions) இக்குழுமத்தின் வருமானமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.70,463 கோடியிலிருந்து ரூ.2.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 53.8% ஆகும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ.858 கோடி நஷ்டம் ஈட்டியிருந்த இந்தக் குழுமம் 2022-ம் நிதியாண்டில் ரூ.18,066 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி பட்டியலிடப்பட்ட இவரது ஏழு நிறுவனங்களில் இவருக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், 2022-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி அதன் மதிப்பு 10.3 லட்சம் கோடி என்கிற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இவரோடு ஒப்பிடுகையில் முகேஷ் அம்பானிக்கு அவரது குழும நிறுவனங்களில் இருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.8.7 லட்சம் கோடி.

கெளதம் அதானி
கெளதம் அதானி

டாடாவுக்கு இணையாகக் கடன் வாங்கிய அதானி...

குழும வளர்ச்சிக்குக் கைகொடுத்த நிறுவனங்களை வாங்கிய வகையில் இதன் கடனும் ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் 34 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட அதானி குழுமமானது டாடா குழுமத்துக்கு (ரூ.3.5 லட்சம் கோடி) அடுத்து இந்தியாவில் அதிக கடன் வைத்திருக்கும் குழுமம் என்கிற `அந்தஸ்த்தை’யும் அடைந்திருக்கிறது.

அதானியின் வெற்றிக்கான காரணங்கள்

அதானி மிகவும் தைரியமாக நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர். முன்வைத்த காலை எக்காரணம் கொண்டு பின்வைக்க விரும்பாதவர். உதாரணம், 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 11.05 பில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி ரிசர்வ் கொண்ட கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை வாங்கியதும் அது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திய பிரச்னைகளும் ஆகும். ஆனால், அவர் அதிலிருந்து பின்வாங்காமல் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்தார். இன்றைக்கு அங்கிருந்து மூன்று கப்பல்களில் இந்தியாவுக்கு நிலக்கரி வந்துகொண்டிருக்கிறது.

கோத்தபய, அதானி
கோத்தபய, அதானி

சாத்தியமற்ற காலக்கெடுக்களை இலக்காகக் கொண்டு தனது குழுவுக்கு அழுத்தம் கொடுத்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் திட்டங்களை முடித்துக் காட்டும் திறமை கொண்டவர் அதானி. ஹோல்சிம் சிமென்ட் நிறுவனத்தை வாங்க இவர் 30 நாள்கள்தான் எடுத்துக்கொண்டார். அதற்குள் அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்டன.

கடந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்டுவந்த அதானி, இப்போது இலங்கையில் அவருக்கெதிராக உருவாகி இருக்கும் எதிர்ப்புகளிலிருந்தும் மீண்டு வருவாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism