Published:Updated:

அய்யோ பரிதாபம்.. பிட்காயினை நம்பி, திவாலாகும் அபாயத்தில் உள்ள நாட்டின் கதை...!

பிட்காயின்

இதனை எல்லாம் பார்த்துத்தானோ என்னவோ, நமது ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ், ‘‘பிட்காயின் நமக்கு மிகப் பெரிய அபாயத்தை விளைவிக்கும். அதனை அங்கீகரிப்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்’’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அய்யோ பரிதாபம்.. பிட்காயினை நம்பி, திவாலாகும் அபாயத்தில் உள்ள நாட்டின் கதை...!

இதனை எல்லாம் பார்த்துத்தானோ என்னவோ, நமது ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ், ‘‘பிட்காயின் நமக்கு மிகப் பெரிய அபாயத்தை விளைவிக்கும். அதனை அங்கீகரிப்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்’’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

Published:Updated:
பிட்காயின்

சென்ட்ரல் அமெரிக்காவில் உள்ள ‘எல் சால்வடார்’ என்னும் நாட்டில் செப்டம்பர் 2021-இல் அந்த நாட்டின் ஜனாதிபதி நயீப் புகேலே பிட்காயினைத் தேசிய நாணயமாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் பிட்காயினைத் தேசிய நாயணமாகக் கொண்ட முதல் நாடாக நிதி உலகை மிரளவைத்தார் என் சால்வடாரின் ஜனாதிபதி.

பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த எல் சால்வடோர்
பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த எல் சால்வடோர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், எல் சால்வடார் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு. மேலும், அந்த நாட்டுக்கு இருக்கும் கடன் மிகவும் அதிகம். இந்த நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பிட்காயினைப் பயன்படுத்தி நிதிப் புரட்சிக்கு முன்னோடியாக ஒரு பந்தயம் கட்டினார் ஜனாதிபதி புகேலே.

ஆனால், அவரின் கணக்கு பொய்யாகி, அந்த நாட்டின் பொருளாதாரத்தையே திவாலாகும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. சமீபத்திய மார்க்கெட் வீழ்ச்சியின்போது பிட்காயின் 60% வரை மதிப்பினை இழந்துள்ளன. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் அந்நாட்டு மக்கள் பிட்காயின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்தனர். மேலும், ஜனாதிபதி புகேலே முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதியைத் திரட்ட தவறியதால், அந்த நாட்டில் பெரும் பணப் பற்றாக்குறை தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021-இல் எல் சால்வடாரின் தேசியப் பொருளாதாரத்தில் பிட்காயினை அறிமுகப்படுத்த அவரது அரசாங்கம் அதன் வருடாந்திர முதலீட்டு பட்ஜெட்டில் இருந்து 15 சதவிகிதத்துக்கு சமமான தொகையை ஒதுக்கியது. பிட்காயின் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பேமெண்ட் ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது அந்த நாட்டு அரசு. பேமெண்ட் ஆப்பிள் பெயர் “சிவோ வாலெட்”. அதாவது, சிவோ என்றால், அந்த நாட்டு மொழியில் குளிர் என்று அர்த்தமாம்.

நயீப் புகேலே
நயீப் புகேலே

இந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் 30 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2,400) அறிமுகப் பரிசாக வழங்கப்பட்டது. 30 டாலர் என்பது அந்த நாட்டுக் குடிமகனின் வருடாந்திர சம்பளத்தில் 1% ஆகும்.

அந்த ஜனாதிபதி சொன்னதன்படி, சுமார் மூன்று மில்லியன் குடிமக்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பிட்காயின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனராம். ஆனால் உண்மை என்னவோ, மக்கள் அரசாங்கம் பரிசாக கொடுத்த 30 டாலரை செலவு செய்த பிறகு ‘சிவோ வாலெட்’ ஆப்பைப் பயன்படுத்துவதை நிறுத்தியுடன், அந்த ஆப்பை தங்கள் செல்போனிலிருந்து நீக்கியும் விட்டனர். அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் தற்போது 10% மட்டுமே ஆப்பின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனங்களை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் டிஜிட்டல் சொத்துக்களின் மதிப்பிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அழித்த உலகளாவிய கிரிப்டோ கரன்சி விற்பனையால் ஜனாதிபதி புக்கேலேயின் பிட்காயின் திட்டம் மேலும் ஒரு அடியை சந்தித்தது. எல் சல்வடாரின் குடிமக்கள் தங்கள் பணத்தை இழக்கும் அச்சத்தில் உள்ளனர் என்கிறார்கள் நிதி ஆய்வாளர்கள்.

``சிவோ வாலெட்டில் அரசாங்கம் கொடுத்த 30 டாலரின் தற்போதைய மதிப்பு வெறும் 10 டாலராக சரிந்து விட்டதாம். இதனால் மக்கள், பிட்காயின் மேல் இருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து குழப்பத்தில் தவித்து வருகின்றனர்...''

சிவோ வாலெட்டில் அரசாங்கம் கொடுத்த 30 டாலரின் தற்போதைய மதிப்பு வெறும் 10 டாலராக சரிந்து விட்டதாம். இதனால் மக்கள், பிட்காயின் மேல் இருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

பண இழப்பு அதிகரித்து வருவதால், உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதியின் விலை உயர்வுக்கு மானியம் வழங்கவும், வரவிருக்கும் கடனைச் செலுத்தவும் எல் சால்வடார் அரசாங்கம் போராடி வருகிறது.

பிட்காயின்
பிட்காயின்

இது குறித்த அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள், “பிட்காயின் முக்கிய சிக்கல் என்னவென்றால், அதில் லாபம் ஈட்ட முடியாது. மேலும் இது சமூக நன்மைகளைத் தராத முதலீடு” என்கிறார்கள்.

ஆகவே, ஜனாதிபதியின் பிட்காயின் பந்தயம் நாட்டையே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கவைத்துள்ளது. இனிவரும் கடன் சுமை மற்றும் பட்ஜெட் பிரச்னைகளைக் கையாள்வது எல் சால்வடார் நாட்டிற்கு நெருக்கடியாக அமையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதனை எல்லாம் பார்த்துத்தானோ என்னவோ, நமது ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ், ‘‘பிட்காயின் நமக்கு மிகப் பெரிய அபாயத்தை விளைவிக்கும். அதனை அங்கீகரிப்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்’’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

பிட்காயினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதுவரை அதில் தேவை இல்லாமல் பணத்தைப் போடுவது குறித்து ஆழமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது!