Published:Updated:

2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ், கட்டாய ஒப்பந்தம்; புதிய வாடகைச் சட்டம் சொல்வது என்ன?

Home
Home

முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த நகல் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும்.

இந்தியாவில் கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலாக கொரோனா நோய்ப்பரவல் இரண்டாம் அலையாக உருவெடுத்து நாட்டு மக்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன் காரணமாகப் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டு வாடகை உயர்வு, வாடகை ஒப்பந்தம் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Home (Representational Image)
Home (Representational Image)
Image by mohamed Hassan from Pixabay

அந்த வகையில், கடந்த ஜூன் 2-ம் தேதி, இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாடகைச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் வகையில் `மாதிரி வாடகை ஒப்பந்த சட்டத்துக்கு' ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் கொண்டு வருவதற்காகவும், வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, வீட்டைக் காலி செய்வதில் ஏற்படும் தகராறு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி, வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த நகல் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் வாடகை ஒப்பந்த நகலைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்யலாம். இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.

Rupees
Rupees
Photo by Syed Hussaini on Unsplash
Vikatan

மேலும், வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வீட்டைக் காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க வீட்டு உரிமையளருக்கு உரிமை உண்டு. வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் ஊக்குவிக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

வாடகை மற்றும் குத்தகைக்கான ஒப்பந்தங்களைக் கட்டாயாம் பதிவு செய்ய வேண்டும் எனச் சொல்லியிருப்பதால், பதிவுக்கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என்று மக்களின் பணம் விரையமாகுமே என்று இத்துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது, ``அப்படியல்ல... ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் என்றதும் தற்போது நடைமுறையில் இருக்கும் நிலம் கிரயம் உள்ளிட்ட ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

Home
Home
Image by Arek Socha from Pixabay

இந்தப் பதிவு முறையே வேறு. இதற்கு நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டாம். இணையத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம். இந்த முன்பதிவுக் கட்டணமும் எல்லோரும் எளிதாக செலுத்தக்கூடிய வகையில் குறைந்த கட்டணமாகவே இருக்கும். மற்றபடி முத்திரைத்தாள் கட்டணம் என்று எதுவும் கிடையாது.

வாடகைதாரரும் உரிமையாளரும் தங்களது விருப்பத்தின் பேரில் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். அதில் நாங்கள் தலையிடுவதில்லை. செய்துகொண்ட ஒப்பந்தத்தை மட்டும் நாங்கள் உருவாக்கும் அமைப்பில் கொண்டுவந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னாளில், சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையே ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை இந்த அமைப்பு தீர்த்துவைக்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு