இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு வேலை பார்ப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கட்டாயம் இருக்கிறது. உள்ளுக்குள் பிசினஸ் செய்வதற்கான யோசனை தீயாக எரிந்துகொண்டிருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பவர்கள்தான் அதிகம். கவலை வேண்டாம் பிசினஸ் செய்ய ஆர்வமிருப்பவர்களாகவே TiE chennai அமைப்பு சென்னையில் கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது.
மே மாதம் 14-ம் தேதி அன்று நடக்கவிருக்கும் அந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன, பிசினஸ் செய்ய துடிக்கும் இளைஞர்களுக்கு அந்நிகழ்ச்சியில் என்ன கிடைக்கும் என்பதையெல்லாம் அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஸ்வர் நமக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``வெற்றியாளர்களில் வெகு சிலர் மட்டுமே மற்றவர்களையும் வெற்றியை நோக்கி நகர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். தாங்கள் கற்றுக் கொண்ட பிசினஸ் பாடங்களிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்று வழிகாட்டுவார்கள். அப்படியான சிலர் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் முயற்சிதான் இது.
2019-ம் தேதி பிற்பகுதியில் `டை சென்னை' அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கவின்கேர் சி.கே.ரங்கநாதன். வளர்ந்துவரும் தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருக்கிறவர்களுக்கும் தர வேண்டும் என்கிற திட்டத்தை முன்வைத்தார் சி.கே.ஆர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதற்கு `பர்சனல் டிரான்ஸ்ஃபர்மேஷன்’, `பர்சனல் போர்டு’ என்கிற இரு கருத்தாக்கத்தை முன்வைத்தார். உங்கள் பிசினஸ் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காண வேண்டும் எனில், முதலில் நீங்கள் மாற வேண்டும். இந்த மாற்றம் ஒவ்வொரு பிசினஸ்மேனுக்குள்ளும் ஏற்பட வழிசெய்வதுதான் `பர்சனல் போர்டு’ திட்டத்தின் இலக்கு. அதாவது, வெவ்வேறு பிசினஸ் செய்பவர்கள் ஒன்றாக சேர்ந்து, மாதம் இரு முறை சந்தித்து, தாங்கள் சந்திக்கும் தொழில் பிரச்னைகள் மட்டுமன்றி, எந்த விதமான சவால்களாக இருந்தாலும், அவற்றைப் பற்றி மனம் விட்டுப் பேசலாம்.

இப்படிப் பேசும்போது, குழு உறுப்பினர்கள் யாரும் இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள் என்றெல்லாம் அறிவுரை அளிக்க மாட்டார்கள். எந்த பிரச்னையானாலும் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் தான் பேசுவார்கள். இதனால் சிறப்பான தீர்வுகள் பிசினஸ்மேன்களுக்குக் கிடைக்கும்.
கொரோனா உச்சத்தில் இருந்த ஜூன் 2020 சமயத்தில்தான் முதல் இரண்டு பர்சனல் போர்டுகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டன. இன்றைக்குத் தமிழகம் முழுவதும் இருக்கும் தொழில்முனைவோர்களுக்காக 28 `பர்சனல் போர்டு’கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஓராண்டுக் காலத்தில் இந்த போர்டில் உள்ள பிசினஸ் மேன்கள் செய்துவரும் பிசினஸ் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறது. இத்தனை நாளும் பிசினஸ், பிசினஸ் என்று குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் திணறியவர்கள், இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பர்சனல் போர்டு ஏற்பத்திய ஆக்கபூர்வமான மாற்றத்தை தமிழகத்திலுள்ள அனைத்து தொழில்முனைவோர்களுக்கும் கொண்டுசெல்லும் விதமாக வருகிற மே 14-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க் அரங்கில் ஒரு நாள் வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி-யின் எம்.டி அனந்த பத்மநாபன், விகடன் குழுமத்தின் எம்.டி பா.சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பிசினஸ்மேன்கள் வளர்ந்து வரும் பிசினஸ்மேன்களுக்கு வழிகாட்டப் போகிறார்கள்.

இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டை சென்னை உறுப்பினர்களுக்கும், டை சென்னையின் பர்சனல் போர்டு உறுப்பினர்களுக்கும் 750 ரூபாயும் (GST தனி). டை சென்னையில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு 1,500 ரூபாயும் (GST தனி) கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாள் நேரத்தை ஒதுக்கி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், பிசினஸை பல மடங்கு வளர்க்க உதவும் வழிகளைக் கண்டடையலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை https://hub.tie.org/e/shift-2022 க்ளிக் செய்யுங்கள்.