Published:Updated:

நீங்கள் கோடீஸ்வரர் ஆக என்ன செய்ய வேண்டும்? பக்காவான 10 டிப்ஸ்கள்...

கோடீஸ்வரர்...
பிரீமியம் ஸ்டோரி
கோடீஸ்வரர்...

P E R S O N A L F I N A N C E

நீங்கள் கோடீஸ்வரர் ஆக என்ன செய்ய வேண்டும்? பக்காவான 10 டிப்ஸ்கள்...

P E R S O N A L F I N A N C E

Published:Updated:
கோடீஸ்வரர்...
பிரீமியம் ஸ்டோரி
கோடீஸ்வரர்...

பல ஆண்டுகளுக்கு முன் லட்சாதிபதி ஆவது பலரின் கனவாக இருந்தது. ஆனால், இன்று கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாக மாறியிருக்கிறது. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கான பொருளாதாரத் தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் கோடீஸ்வரர் ஆவது கடினமா என்று கேட்டால், என் பதில் இல்லை என்பதுதான். ஆனால், அதற்கான சில வழிமுறைகளை ஃபாலோ செய்வது முக்கியம்.

சுரேஷ் 
பார்த்தசாரதி 
நிதி ஆலோசகர்,  
Myassetscon
solidation.com
சுரேஷ் பார்த்தசாரதி நிதி ஆலோசகர், Myassetscon solidation.com

1. பட்ஜெட் போடுங்கள்...

பொருளாதார ரீதியான வெற்றிகள் அனைத்துக்கும் அடிப்படையே பட்ஜெட் போடுவதுதான். முதலில் உங்களுடைய வரவு செலவு கணக்கு களை அடிப்படையாக வைத்து, மாதம்தோறும் பட்ஜெட் போடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பை அதிகரித்து, அதை முதலீடாக்க முடியும்.

2. விருப்பத்தைத் தள்ளிப்போடுங்கள்...

மக்கள் பல ஆயிரங்களைக் கொடுத்து அல்லது இ.எம்.ஐ மூலம் பொருள்களை வாங்குவதற்கு, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஒரு தூண்டுதலாக இருக்கின்றன. ஒரு பொருளை விற்பதற்கு, அந்த நிறுவனம் செய்யும் வியாபார யுக்திதான் இது. இதைப் புரிந்து கொள்வதன் மூலம் உங்களால் ‘இம்பல்ஸ் பையிங்’ பழக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். தேவை எது, விருப்பம் எது என்பதைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருந்துவிட்டால், தேவைக்கு முன்னுரிமையும், விருப்பத்துக்கு அடுத்த உரிமையும் உங்களால் கொடுக்க முடியும். விருப்பப்பட்டதை எல்லாம் வாங்கி, செலவு செய்பவர்களால் நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியாது.

3. இலக்குகளைத் தீர்மானியுங்கள்...

இலக்கில்லாமல் ஓடும் குதிரையும், இலக்குகளை நிர்ணயம் செய்யாத முதலீட்டாளரும் ஒன்றுதான். இலக்குகள் என்பது அவரவர் வாழ்க்கையில் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. பரவலாக நம் சமுதாயத்தில் குழந்தைகள் படிப்பு, மேற்படிப்பு, திருமணம், வீடு வாங்குவது, ஓய்வுக்காலத்துக்கு சேர்த்து வைப்பது சுற்றுலா செல்வது எனப் பல இலக்குகள் இருக்கின்றன. இதில் எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்தடுத்து செய்ய வேண்டும் என்கிற திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முதலில் தேவைப்படும் இலக்கை உங்களால் எளிதில் அடைய முடியும். உதாரண மாக, மாதம்தோறும் நீங்கள் 10,200 ரூபாயை முதலீடு செய்து, அதற்கு 12% வருமானம் கிடைத்தால், 20 ஆண்டுகளில் ஒரு கோடியை ஈட்டி விடலாம். இலக்கை அடையும் வழி தெரிந்துவிட்டது; இனி திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது நீங்கள்தாம்.

4. இலக்குகளை எளிதாக அடைதல்...

ஒவ்வொரு தனிநபருக்கும் பல விதமான இலக்குகள் இருக்கும். குழந்தையின் படிப்பு, திருமணம், ஓய்வுக்காலம் என ஒவ்வொரு நபருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கும். இந்த இலக்குகளை எப்படி அடைவது என்பது குறித்த தெளிவான திட்டமிடல் அவசியம் வேண்டும்.

உங்கள் இலக்குகள் எதுவாக இருந்தாலும், ஒவ்வோர் இலக்குக்கும் இன்றைக்கு எவ்வளவு தோராயமாக தேவை எனக் கணக்கிட்டு, அது எத்தனை ஆண்டு கழித்து தேவையோ, அந்தளவுக்கு பணவீக்கத்தைச் சேர்த்துக் கணக்கிட்டால், நமக்குத் தேவையான தொகை எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இவ்வாறு உங்கள் இலக்குகளை எளிதாக அடையும் வழிகளை நீங்களே கண்டறிந்து நிறைவேற்றலாம்.

கோடீஸ்வரர்...
கோடீஸ்வரர்...

5. பரவலான முதலீடு...

ஒரு நல்ல முதலீடு என்பது ‘டைவர் சிஃபைட்’-ஆக இருக்க வேண்டும். அதாவது, ஒரே இடத்தில் இல்லாமல், பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், எந்தவொரு குறிப்பிட்ட முதலீடும் தொடர்ந்து நல்ல வருமானத்தைக் கொடுப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அத்துடன் பொருளாதாரத்தில் ஏதாவது மாற்றம் அல்லது சிக்கல் உருவானால் அதன் வீழ்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும். அத்துடன் பாதிப்பும் பெருகும்.

பங்குச் சந்தை 2020 மார்ச் மாதத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்து, அதற்கான தேவை ஜூன் 2020-ல் இருந்திருந்தால் அல்லது ஜூலை மாதத்தில் இருந்திருந்தால், உங்கள் வருமானத்தின் மீதான பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

அதேபோல், தங்கம் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வீழ்ச்சியைக் கண்டது. அதில் நீங்கள் மொத்தமாக முதலீடு செய்து, வருமானத்தை எதிர்பார்த்திருந்தால், மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருப்பீர்கள். ஆகையால், முதலீடு பரவலாக இருப்பது அனுகூலமான பலனைக் கொடுக்கும்.

உங்கள் முதலீடு பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் என அனைத்திலும் இருக்கும் போது, ஒன்றின் இழப்பை இன்னொன்று ஈடுசெய்யும். இப்படிப் பரவலாக முதலீடு செய்யும்போதுதான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற கனவையும் நம்மால் எளிதாக அடையலாம்.

6. ரிஸ்குக்கு ஏற்ற வருமானம்...

முதலீடுகள் ஒவ்வொன்றுக்கும் ரிஸ்க் அளவு வேறுபடுகிறதே தவிர, இங்கு அனைத்துவிதமான முதலீடுகளும் ரிஸ்க் உள்ள முதலீடுகள்தான். பங்குச் சந்தையில் ரிஸ்க் அளவு அதிகமாக இருப்பதுபோல, ஃபிக்ஸட் டெபாசிட்டில் வேறு மாதிரி ரிஸ்க் இருக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி மிகவும் சரிந்துள்ளது. பல வங்கிகள் வாராக்கடன் பிரச்னை களால் சமீபத்தில் திவால் ஆனதையும், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்குச் சேமித்த பணம் கிடைக்காமல் போனதையும் நாம் பார்த்தோம்.

இப்படி முதலீடுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மாதிரியான ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதனால், முதலீட்டில் ‘ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்’ என்று யாராலும் சொல்ல முடியாது. ரிஸ்க் அளவை குறைத்துக் கொள்வதற்காக வேண்டுமானால், மேலே குறிப் பிட்டதுபோல, முதலீடுகளைப் பரவலாக்கிக்கொள்ளலாம். அதாவது, 50:30:15:5 என்கிற விகிதத்தில் பங்குச் சந்தை, ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யவும். இது ஒரு பொதுவான அறிவுரை. தேவைகளைப் பொறுத்தும், வருமானம் மற்றும் வயதைப் பொறுத்தும் முதலீட்டுச் சதவிகிதமும், ரிஸ்க் எடுக்கும் தன்மையும் மாறுபடும்.

7. எதிர்பார்க்கும் வருமானம்...

மேலே தரப்பட்டுள்ள விகிதா சார அடிப்படையில் (50:30:15:5) நீங்கள் முதலீடு செய்தால் 11 - 12% வரை வருமானத்தை எதிர்பார்க்கலாம். அதேவேளையில், உங்கள் முதலீட்டை முறையாகப் பராமரிக்கும் தன்மை உங்களிடம் இருந்தால், இதைவிடக் கூடுதல் வருமானத்தையும் உங்களால் பெற முடியும். முதலீடுகளை ஏன் முறையாகப் பராமரிக்க வேண்டும்? முதலீடுகளை ஆரம்பித்துவிட்டு, இடையில் ஏற்படும் ஏதாவது ஒரு பொருளா தாரச் சிக்கல் காரணமாக அதை பலர் இடையில் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் இலக்குகள் பாதிக்கப்படுவதுடன், பொருளாதாரச் சிக்கல் அதிகரிக் கிறது. பொருளாதாரச் சிக்கல் அதிகரிக்கும் போது, கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற கனவு மட்டுமல்ல, அனைத்து விதமான நிதித் திட்டமிடல்களும் பாதிப் படையும். அதனால் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

8. ‘பிராஃபிட் புக்’ செய்யுங்கள்!

பங்குச் சந்தை சார்ந்த புத்தகங்கள் எப்போதும் இலக்குகள் அடையும்வரை புராஃபிட் புக் செய்ய பரிந்துரை செய்வதில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் நாம் கூர்ந்து கவனித்தால் 3 - 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பங்குச் சந்தை மூலம் கண்டிப்பாக உங்களுக்கு அதிக வருமானம் கிடைத்திருக்கும். அந்த வேளையில், உங்கள் முதலீட்டில் 30 - 40% பிராஃபிட் புக் செய்து, மறுமுதலீடு செய்தால், உங்கள் மொத்த போர்ட் ஃபோலியோ கூடுதலாக 2 - 3% வரை வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது.

9. அஸெட் அலொகேஷன்...

ஒருவர் செய்யும் முதலீட்டில் ‘அஸெட் அலொகேஷனை’ச் சரியாக செய்வது முக்கியம். குறுகியகாலம், நீண்டகாலம் மற்றும் நடுத்தர காலம் என முதலீடுகளை வகைப்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில், குறுகிய காலத்துக்கு ஏற்றவாறு வரிச் சலுகைகளையும், நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றவாறு வரிச் சலுகைகளையும் அப்போதுதான் நம்மால் பெற முடியும். அஸெட் அலொகேஷன் முறையின் மூலம் முதலீடு செய்யும்போது நமக்குக் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் வருமானத்துக்குப் பாதகம் இருக்காது. முதலீட்டு விஷயங்களைச் சரியாகப் பகுத்தாய்ந்து, ஒரு நிபுணர்போல உங்களால் செயல்பட முடியும் என்றால் மட்டுமே நீங்கள் ‘அஸெட் அலோகேஷன்’ படி செய்யாமல்கூட இருக்கலாம். அதாவது, 100% தொகையையும் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில், முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.

10. முதலீட்டைத் தொடர்ந்து கவனியுங்கள்!

முன்பே குறிப்பிட்டதுபோல, பெரும் பாலான முதலீட்டாளர்கள் இலக்கு இல்லாமல் முதலீடு செய்கிறார்கள். இலக்கு இருந்தாலும், ஆண்டுதோறும் அந்த இலக்குகளை எவ்வளவு தூரம் அடைந்திருக்கிறோம் என்று பார்ப்ப தில்லை. இதனால் ஈட்ட நினைக்கும் வருமானம் எந்தளவுக்குக் குறைந்துள்ளது, வருமானத்தை அதிகரிக்க முதலீட்டை மாற்ற வேண்டுமா அல்லது முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டுமா என்று பார்க்கத் தவறுகிறார்கள். சில ஆண்டுகள் சில முதலீட்டுப் பிரிவுகள் அதிகமான வருமானம் கொடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும்; அவ்வாறு இருக்கும்போது தொடர்ந்து போர்ட் ஃபோலியோவை சரிபார்த்து வந்தால், அந்த முதலீட்டுப் பிரிவில் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். சராசரியாக ஆண்டுக்கு இரு முறை தொடர்ந்து முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவைக் கண்காணித்து வருவது நல்லது.

உதாரணமாக, கொரோனா நோய்த் தொற்று காரணமாக, 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய சரிவு கண்டது, அப்போது நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் சராசரியாக 40 - 60% வருமானம் கிடைத்திருக்கும். முதலீட்டைத் தொடர்ந்து கவனித்து, மாற்றி அமைப்பதன்மூலம் நாம் கூடுதல் நன்மைகளைப் பெற முடியும்.

இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.

பிட்ஸ்

முத்ரா திட்டத்தின்கீழ் கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.3.4 லட்சம் கோடி கடனாக அளிக்கப் பட்டது; ஆனால், கடந்த நிதி ஆண்டில் ரூ.2.7 லட்சம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது. இது ஏறக்குறைய 20% குறைவாகும்!