Published:Updated:

திருக்குறள் புத்தக மோசடி வழக்கு 6 மாதத்தில் முடிவுக்கு வருமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

``உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை நடைபெறவில்லை. வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்" என்று முதலீட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருக்குறள் புத்தக மோசடி வழக்கு 6 மாதத்தில் முடிவுக்கு வருமா?

``உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை நடைபெறவில்லை. வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்" என்று முதலீட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Published:Updated:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

திருக்குறள் புத்தகத்தை வைத்து மக்களிடம் நிதி மோசடி செய்த பாராமவுன்ட் நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதன் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு சிறு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மோசடி
மோசடி

பிள்ளைகள் உயர்கல்வி, திருமணச்செலவு, சொந்த வீட்டு கனவு, ஓய்வுக்கால பணத்தேவையைக் கருத்தில் கொண்டு நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் தங்களுடைய சேமிப்புகளை அரசு வங்கிகளில் முதலீடு செய்யாமல் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.

20 வருடங்களுக்கு முன் தமிழகமெங்கும் அதிக வட்டி ஆசை காட்டி போலி நிதி நிறுவனங்கள், எம்.எல்.எம் பிசினஸ் என்று புதிது புதிதாக வந்தனர்.

இப்படி மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடும் போலி நிதி நிறுவனக் கும்பல் மதுரையில் அதிகம். பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு ஓடினாலும், பணத்தை இழந்துவிட்டு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மக்கள் அலைந்துகொண்டிருந்தாலும் புதிய பெயர்களில் போலி நிதி நிறுவனங்கள் வந்துகொண்டே உள்ளன. மக்களும் அதில் பணத்தைத் தொடர்ந்து போடவே செய்கின்றனர்.

போலி நிதி நிறுவனம்
போலி நிதி நிறுவனம்

15 வருடங்களுக்குமுன் மதுரையைச் சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர் தன் உறவினர்களை பங்குதாரர்களாகச் சேர்த்து `பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேசன்' (PMC) என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் திருக்குறள் புத்தகத்தை உலகம் முழுவதும் விற்பனை செய்வதாகவும், ரூ.10,000 செலுத்தி 100 புத்தகங்களை வாங்கினால் 3 வருட முடிவில் ரூ.46,900 வழங்குவதாகவும் விளம்பரம் செய்தார். ந்தை நம்பி இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்தார்கள். ஆனால், மூன்று வருட முடிவில் முதலீட்டாளர்களுக்கு முதிர்வுத் தொகையை வழங்கவில்லை.

45,500 பேர் ரூ.64.46 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்தாகச் சொல்லபட்ட நிலையில் தங்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவித்து, ஆடம்பர கார், பங்களா வீடு வெளிநாட்டுப் பயணம் என்று சொகுசாக வாழ்ந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கேட்கும்போதெல்லாம் விரைவில் பணம் தருவதாகக் கூறியவர்கள் பின்பு மிரட்டலாகப் பதில் கூறத் தொடங்கினார்கள்.

குற்றம்
குற்றம்

பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் செய்ய, ஷேக் மைதீன் உள்ளிட்ட பி.எம்.சி நிறுவன நிர்வாகிகள் மீது 2010-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரையிலுள்ள பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி நிறுவனம் வாங்கியுள்ள சொத்துகளைக் கையகப்படுத்தி அதை விற்பனை செய்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், வழக்கைத் தாமதப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் பி.எம்.சி நிறுவனத்தினர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பி.எம்.சி நிறுவனம் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றக் கிளை, வழக்கு விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்போது உத்தரவிட்டது.

``உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை நடைபெறவில்லை. வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்" என்று முதலீட்டாளர்கள் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், ``திருக்குறள் புத்தக மோசடி வழக்கை பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும். அரசுத் தரப்பில் ஒவ்வொரு விசாரணையின்போதும் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும். விசாரணை நிலை குறித்து உயர் நீதிமன்றத்தில் மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

விசாரணையை விரைந்து நடத்தி பணம் திரும்ப கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே, பி.எம்.சி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட ஒவ்வொரு முதலீட்டாளரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது ஒரு புறமிருக்க, மதுரையில் இப்போதும் சில மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் மோசடி வெற்றிகரமாக நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் இதில் பணத்தை செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் எப்போதுதான் மாறுவார்களோ..?