Published:Updated:

பொதுப் பங்கு விற்பனைக்கு தயாராகும் நூற்றாண்டு பாரம்பரிய TMB வங்கி - முழு விவரங்கள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

இந்த வங்கியை வங்கித் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளும், இயக்குநர்களும் நிர்வகித்து வருகின்றனர். வங்கியின் சொத்து தரம் சிறப்பாக உள்ளது. அதோடு வங்கியின் ரிஸ்க் மேலாண்மை கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவையும் நன்றாகவே உள்ளது.

பொதுப் பங்கு விற்பனைக்கு தயாராகும் நூற்றாண்டு பாரம்பரிய TMB வங்கி - முழு விவரங்கள்

இந்த வங்கியை வங்கித் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளும், இயக்குநர்களும் நிர்வகித்து வருகின்றனர். வங்கியின் சொத்து தரம் சிறப்பாக உள்ளது. அதோடு வங்கியின் ரிஸ்க் மேலாண்மை கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவையும் நன்றாகவே உள்ளது.

Published:Updated:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

100 வருட பாரம்பரியம் கொண்ட தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வரும் செப்டம்பர் 5ம் தேதி பொதுப் பங்கு விற்பனை வெளியிட உள்ளது.

சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கான நிதி சேவைகளை வழங்குவது இந்த வங்கியின் கூடுதல் சிறப்பம்சமாகும். கடந்த மார்ச் 2022 நிலவரப்படி இந்த வங்கியில் 50.8 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஐபிஓ
ஐபிஓ

மொத்த 509 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இவற்றில் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும், 327 கிளைகள் நகர்ப்புறங்களிலும், 76 கிளைகள் பெருநகரங்களிலும் உள்ளன. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 70 சதவிகித வாடிக்கையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐபிஓ விவரங்கள்:

ஐபிஓ தொடங்கும் தேதி - 05-செப்டம்பர்-22

ஐபிஓ முடிவடையும் தேதி - 07-செப்டம்பர்-22

முகமதிப்பு - ரூ.10

IPO
IPO

ஐபிஓ வெளியீட்டு விலை - ரூ.500-ரூ.525

ஐபிஓ லாட் அளவு - 28 பங்குகள்

குறைந்தபட்ச விண்ணப்பம் - 28 பங்குகள்

வெளியீட்டின் மொத்த மதிப்பு - ரூ. 831.6 கோடி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்க சில காரணங்கள் உள்ளன. முதலில் இந்த வங்கி வலுவான பாரம்பரியத்தைக் கொண்டதாகவும், இதன் வாடிக்கையாளர்கள் நீண்டகாலமாக இந்த வங்கியுடன் பயணிக்கிறார்கள் என்பதும் ஆகும். தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தேவையான சேவைகளையும், வசதிகளையும் மேம்படுத்திவருகிறது. தமிழகத்தில் தன்னுடைய இருப்பை வலுவாக்க முக்கிய உத்திசார்ந்த பிராந்தியங்களில் கவனம் செலுத்துகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

எம்.எஸ்.எம்.இ மற்றும் விவசாயிகள் மற்றும் ரீடெய்ல் வங்கி சேவைகள் ஆகியவற்றிலும் தொடர்ந்து முன்னேறிவருகிறது. இந்த வங்கியின் டெபாசிட் தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருகிறது. மேலும் குறைந்த செலவினம் கொண்ட ரீடெய்ல் CASA-வை கொண்டுள்ளது. இந்த வங்கியை வங்கித் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளும், இயக்குநர்களும் நிர்வகித்து வருகின்றனர்.

வங்கியின் சொத்து தரம் சிறப்பாக உள்ளது. அதோடு வங்கியின் ரிஸ்க் மேலாண்மை கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவையும் நன்றாகவே உள்ளது. இதனால் இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக நல்ல வருவாய், லாப வளர்ச்சி என வலுவான நிதிநிலையைக் கொண்டுள்ளது.