Published:Updated:

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டுவந்த பயணப்படியும், விடுப்புகால பயணச் சலுகையும்!

அரசு ஊழியர்களுக்கு...
பிரீமியம் ஸ்டோரி
அரசு ஊழியர்களுக்கு...

அரசாணை

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டுவந்த பயணப்படியும், விடுப்புகால பயணச் சலுகையும்!

அரசாணை

Published:Updated:
அரசு ஊழியர்களுக்கு...
பிரீமியம் ஸ்டோரி
அரசு ஊழியர்களுக்கு...

கோவிட்-19 பெருந் தொற்று ஏற்படுத்திய நிதி நெருக்கடியை சமாளிப்பதற் காக அரசின் தவிர்க்கக்கூடிய செலவினங்கள் சிலவற்றை முழுமையாக நிறுத்தி வைத்தும், வேறு சில செலவு களுக்கு பகுதி அளவு கட்டுப் பாடுகள் விதித்தும் கடந்த 21.05.2020 அன்று ஆணை யிட்டிருந்தது, தமிழக அரசு.

அலுவலக செலவினம், அறைக்கலன், எந்திரத் தளவாடங்கள், மோட்டார் வாகனம் வாங்குதல், விளம் பரம், விருந்தோம்பல் முதலிய வற்றுடன் அரசு ஊழியர் களுக்கு நேரடித் தொடர் புடைய பயிற்சி மற்றும் பயணப்படிக்குப் பகுதி கட்டுப்பாடும், விடுப்புப் பயணச் சலுகையை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்தும் மேற்கண்ட அர சாணை வெளியிடப்பட்டது.நிறுத்திவைக்கப்பட்ட இந்தச் செலவினங்களுக்கான கட்டுப்பாட்டை சில இனங் களில் தளர்த்தியும், சில இனங் களில் தடை மற்றும் கட்டுப் பாட்டை நீட்டித்தும் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஊழியர் பணப் பலன் சார்ந்த இரண்டு இனங் களுக்கான கட்டுப்பாடு மற்றும் தடை நீக்கப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது. பயிற்சிக்கான கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

பயணப்படி...

அரசுப்பணி தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்குப் பயணக் கட்டணம், முனைப் படி, இடைநிகழ் செலவு மற்றும் தினப்படி ஆகிய நான்கு இனங்கள் பயணப்படி எனப்படுகின்றன. இவற்றுள் தினப்படி என்பது பயணம் மேற்கொள்ளும் ஊழியருக்கு உணவுக்காகத் தரப்படுவது.

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு பணி புரியும் ஊழியர்களுக்கு, ஒவ் வொரு 24 மணி நேரத்துக்கும் ரூ.800 (GRI), ரூ.600 (GRII), ரூ.400 (GRIII) ரூ.320 (GRIV) தினப் படியாகத் தரப்படுகிறது. சென்னை அல்லாத பிற ஊர் களில் பணிபுரிவோர்க்கு இந்த தினப்படி முறையே ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.160-ஆக உள்ளது. கடந்த இரு ஆண்டு களாக, தினப்படியானது 25% குறைவாக வழங்கப்பட்டு வந்தது. புதிய அரசாணையின் படி, தினப்படியானது இனிமேல் குறைப்பு இன்றி முழுமையாகக் கிடைக்கும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டுவந்த பயணப்படியும், விடுப்புகால பயணச் சலுகையும்!

விடுப்பு கால பயணச் சலுகை...

இரண்டு வருட காலத்துக்கு விடுப்புப் பயணச் சலுகை நிறுத்தி வைத்திருந்ததால், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால், 1981-ல் தொடங்கப்பட்ட விடுப்புப் பயணச்சலுகை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனுபவிக்கத்தக்கது. அதாவது, 1981-82 கூட்டு வருடத்தில் (Block year) ஒருமுறை சலுகையை அனுபவித்துவிட்டால், மீண்டும் 1983-84-ல் இச்சலுகை பெறலாம். பயணத்தின் ஒரு வழிக்கே பயணக்கட்டணம் கிடைக்கும் இந்த இரண்டு கூட்டு ஆண்டு சலுகையில்.

பின்னர் நான்கு கூட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதாக சலுகை மேம்படுத்தப்பட்டது. அதாவது, ஓர் ஊழியர் 2017-2020 கூட்டு ஆண்டில் சலுகையை அனுபவித்து இருந்தால், மீண்டும் 2021 - 2024 கூட்டு ஆண்டில் அடுத்த நான்கு கூட்டு ஆண்டுக்கு இந்தச் சலுகையைப் பெறலாம். போக, வர எனப் பயணத்தின் இருவழிக்கான பயணக்கட்டணம் கிடைக்கும். எனவே, பெரும்பான்மையான ஊழியர்கள் இந்தக் கூட்டு ஆண்டு சலுகையையே பெரிதும் பயன் படுத்தக்கூடும். அப்படிப் பார்க்குபோது, சலுகை 21.05.2020-ல் நிறுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் 2017-2020 கூட்டு ஆண்டுக்கான சலுகையைப் பெற்றிருக்க முடியும். தற்போது 2012-2024 கூட்டு ஆண்டுக்கான சலுகையையும் பெற முடியும். அந்த வகையில், இந்தச் சலுகை தற்போது மீண்டு வந்தது வரவேற்கத்தக்கதே.

தொடரும் தடைகள்...

இருப்பினும் மோட்டார் வாகனம், எந்திர தளவாடங்கள் வாங்குதல் முதலானவற்றுக்கு கடந்த 21.5.2020-ல் விதிக்கப்பட்ட தடையும், அரசு முறை பயணம் முதலானவற்றுக்கான கட்டுப்பாடுகளும் 2022 - 23 நிதியாண்டிலும் தொடர்கின்றன. அவற்றுள் அரசு ஊழியர்களுக்கான பொது இடமாறுதலும் ஒன்று.

ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்குமேல் பணி புரியும் அரசு ஊழியர்களைப் பொது இட மாறுதல் செய்வது வழக்கம். பொது மாறுதலுக்கான ஊழியர் களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர் களுக்கு வழங்க வேண்டிய மாறுதல் பயணப் படியும் பெருந்தொகையாக இருக்கும். செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக, பொது மாறுதல் செய்ய முன்பு விதிக்கப்பட்ட தடை மேலும் தொடர்கிறது.

மேற்கண்ட சிக்கன நடவடிக்கைகள் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள் முதலானவற்றுக்கும் பொருந்தும்.