Published:Updated:

`நகைக் கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு! - அமைச்சர் சொல்வது என்ன?

தங்க நகைக்கடன் (Representational Image)
News
தங்க நகைக்கடன் (Representational Image)

40 கிராமுக்கு அதிகமாக நகை வைத்து கடன் பெற்றவர்கள், விவரங்களைத் தவறாகக் கொடுத்தவர்கள் எனப் பல காரணங்களால் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடைக்காது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது விவரங்கள் தவறாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க தெரிவித்திருந்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடியில் பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டு, அவற்றின்படியே தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூட்டுறவுத் துறை தெரிவித்தது. இதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்காகக் காத்திருந்த 48 லட்சம் பேரில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடைக்காது என்று அறிவித்தது.

இதனால் நகைக்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்திருந்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம் உண்டானது. இந்த விவகாரத்தைக் கையெலெடுத்த எதிர்க்கட்சிகள், ``தி.மு.க அரசு சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. மக்களை ஏமாற்றியுள்ளது. கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லிவிட்டு, வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளது" என்று விமர்சித்தனர்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழக கூட்டுறவுத் துறையின் அறிவிப்பால் மக்களும், எதிர்க்கட்சிகளும் கொந்தளிக்கவே, தற்போது நகைக் கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு தருவதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். தவறான ஆவணங்கள், விவரங்கள் வழங்கியவர்கள், தங்களின் குடும்ப அட்டை, ஆதார் விவரங்களைச் சரியாக வழங்கினால் அவை சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என்று கூறியுள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக ஆய்வில் இறங்கிய கூட்டுறவு துறையின் சிறப்புக் குழு கடன் வாங்கிய நபர்கள், அவர்தம் குடும்பத்தினர் விவரங்கள், அதாவது பயனாளர் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை ஆராய்ந்து அதலிருந்து தகுதியான பயனாளர்களின் பட்டியலைத் தயார் செய்தது.

கடன்
கடன்

இதில் 40 கிராமுக்கு அதிகமாக நகை வைத்து கடன் பெற்றவர்கள், விவரங்களைத் தவறாகக் கொடுத்தவர்கள் எனப் பல காரணங்களால் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடைக்காது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விவரங்கள் தவறாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.