Published:Updated:

பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி; எப்படி விண்ணப்பிப்பது?

business

தமிழகத்தில் உள்ள புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சிக்கல்களை ஆராய்ந்து அவர்களுக்கான உதவியை செய்து வருகிறது, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM).

பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழகத்தில் உள்ள புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சிக்கல்களை ஆராய்ந்து அவர்களுக்கான உதவியை செய்து வருகிறது, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM).

Published:Updated:
business

தமிழகத்தில் உள்ள புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சிக்கல்களை ஆராய்ந்து அவர்களுக்கான உதவியை செய்து வருகிறது, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM). இந்த இயக்கத்தின் மூலம் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஆரம்ப கட்ட ஆதார நிதி (TANSEED) வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர் புத்தொழில் ஒன்றை துவங்கி நடத்தி வருபவர்களுக்கு, நிதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், குறிப்பிட்ட தகுதிகளை கொண்ட பட்டியலின பழங்குடி தொழில்முனைவோருக்கு மட்டுமே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

Start-Up(Representational Image)
Start-Up(Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் விண்ணப்பிக்க விரும்பும் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் நிறுவனமானது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதோடு நிறுவனத்தின் முதன்மை செயல்பாடுகள் இந்தியாவில் நடைபெற வேண்டும். விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டிருக்க வேண்டும், நிர்வாகத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். நிறுவனத்தின் 50 சதவிகிதத்திற்கும் மேலான பங்குகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பட்டியலின் பழங்குடியின தொழில்முனைவோருடையதாக இருக்க வேண்டும்.

நல்ல ஐடியாக்களோடு, தொழில் துவங்கி பண நெருக்கடியில் சிக்கி தவித்து வருபவர்கள் இந்த உதவியை உடனடியாக உபயோகித்து கொள்ளலாம். www.startuptn.in என்ற இணைய தள பக்கத்தில் இது குறித்த மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism