Published:Updated:

ஆதார் - பான் இணைக்க இன்றே கடைசி நாள்; தவறினால் என்ன நடக்கும்?

Aadhar - PAN

ஒருவேளை உங்களின் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிடில், மார்ச் 31, 2023 வரை மட்டுமே பான் கார்டு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் அபராத தொகையை செலுத்தி இணைத்துவிடலாம்.

ஆதார் - பான் இணைக்க இன்றே கடைசி நாள்; தவறினால் என்ன நடக்கும்?

ஒருவேளை உங்களின் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிடில், மார்ச் 31, 2023 வரை மட்டுமே பான் கார்டு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் அபராத தொகையை செலுத்தி இணைத்துவிடலாம்.

Published:Updated:
Aadhar - PAN

ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி 2022, மார்ச் 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆதார் பான் எண்ணை இணைக்காதவர்கள் இணைக்க இன்றோடு கடைசி தேதி. ஒரு வேளை இவை இரண்டையும் இணைக்க தவறியவர்கள் ஏப்ரல் 1, 2022 தேதியிருந்து ஜூன் 30, 2022 வரை பான் ஆதார் அட்டையை இணைத்தால் 500 ரூபாய் அபராதமும், இந்த இடைப்பட்ட மூன்று மாதத்துக்குப் பிறகு, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்தால் 1,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் - பான்
ஆதார் - பான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக, இரண்டு ஆவணங்களை அரசு அறிவித்த உரிய தேதிக்குள் இணைக்காவிட்டால் எந்த அபராதமும் வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால், நிதி சட்டம் 2021-ல் ஒரு திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருமான வரி சட்டம் 1961-ல் பிரிவு 234-H அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மார்ச் 31, 2022-க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

link PAN with Aadhaar
link PAN with Aadhaar
vikatan

ஒருவேளை உங்களின் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிடில், மார்ச் 31,2023 வரை மட்டுமே பான் கார்டு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் அபராத தொகையை செலுத்தி இணைத்துவிடலாம். மேலும், வருமான வரித்துறையானது 272B பிரிவின் கீழ் சுமார் 10,000 ரூபாய் வரை இதற்காக அபராதம் விதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism