Published:Updated:

பங்குச் சந்தை வர்த்தகத்தில் கலக்கும் இரு நகரங்கள்... தமிழக நகரங்களின் நிலை என்ன தெரியுமா?

பங்குச் சந்தை

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு நிதி ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி என்.எஸ்.இ பங்கு வர்த்தகத் தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில் 80 சதவிகிதத்தை மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே பங்கு வகிக்கின்றன.

பங்குச் சந்தை வர்த்தகத்தில் கலக்கும் இரு நகரங்கள்... தமிழக நகரங்களின் நிலை என்ன தெரியுமா?

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு நிதி ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி என்.எஸ்.இ பங்கு வர்த்தகத் தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில் 80 சதவிகிதத்தை மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே பங்கு வகிக்கின்றன.

Published:Updated:
பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இளைஞர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருவதையும் பார்க்கிறோம். இதற்கு சான்று டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை. சமீபத்தில்தான் 10 கோடி டீமேட் கணக்குகள் என்ற இலக்கை இந்தியா எட்டியது.

மெட்ரோ மாநகரங்கள் மட்டுமல்லாமல், பிற நகரங்கள், நகராட்சிகளிலும் பங்கு சார்ந்த முதலீடுகளில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அதேசமயம், பங்குச் சந்தை வர்த்தகத்தில் நகரங்கள் ரீதியிலான பட்டியலில் எந்தெந்த நகரங்கள் எத்தனை சதவிகித பங்களிப்புகளைக் கொண்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது, நம் நாட்டில் உள்ள இரண்டு நகரங்கள் மட்டுமே 80% பங்களிப்பைக் கொண்டிருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி நடப்பு நிதி ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, என்.எஸ்.இ பங்கு வர்த்தக தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில் 80 சதவிகிதத்தை மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே பங்கு வகிக்கின்றன. அதிலும் மும்பை மட்டுமே 67.8 சதவிகிதமும், அகமதாபாத் 11.4 சதவிகிதமும் பங்கு வகிக்கின்றன.

என்.எஸ்.இ தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில் நகரங்களின் பங்களிப்பு விகிதங்கள்:

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

மும்பை - 67.8%

அகமதாபாத் - 11.4%

சென்னை - 5.1%

பெங்களூரு - 0.7%

கோயம்புத்தூர் - 0.1%

டெல்லி - 4.6%

கொல்கத்தா - 0.9%

ஹைதராபாத் - 2.4%

பிஎஸ்இ தளத்தின் பங்கு வர்த்தக மதிப்பில் நகரங்களின் பங்களிப்பு விகிதங்கள்:

மும்பை - 36.4%

அகமதாபாத் - 21.3%

சென்னை - 0.2%

பெங்களூரு - 0.3%

கோயம்புத்தூர் - 0.0%

டெல்லி - 2.2%

கொல்கத்தா - 2.3%

ஹைதராபாத் - 0.1%

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

தமிழக நகரங்கள் பங்குச் சந்தை முதலீடுகளில் மிக மிகக் குறைவான பங்களிப்பையே கொண்டிருக்கின்றன என்பது இந்த புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது.

மெட்ரோ நகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐ.டி துறையின் மையமாக விளங்கும் பெங்களூரு, ஹைதராபாத் போன்றவையும் பெரிய அளவில் பங்களிக்கவில்லை.

மும்பையைப் போல, அகமதாபாத்தைப் போல தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ள மக்கள் பங்குச் சந்தை முதலீட்டில் பங்கேற்க வேண்டும். நல்ல, தரமான பங்குகளைக் கண்டறிந்து, அவற்றில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்துவந்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதே மும்பை மற்றும் அகமதாபாத் நகர மக்களின் அனுபவம். தமிழக மக்களும் அவர்களைப் போல முதலீடு செய்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்!