Published:Updated:

டிஜிட்டல் கரன்சி முதல் MSME கடனுதவிகள் வரை; மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்!

FM Nirmala Sitharaman ( AP Photo / Altaf Qadri )

``அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்திய பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்" - நிர்மலா சீதாராமன்.

டிஜிட்டல் கரன்சி முதல் MSME கடனுதவிகள் வரை; மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்!

``அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்திய பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்" - நிர்மலா சீதாராமன்.

Published:Updated:
FM Nirmala Sitharaman ( AP Photo / Altaf Qadri )
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் `மத்திய பட்ஜெட் 2022-2023' இன்று காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவரது 4-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் உரையை ஆரம்பித்து பேசிய நிர்மலா சீதாராமன், ``கோவிட் 19 பெருந்தொற்றினால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து இந்தியா விரைவாகவே மீண்டு வந்திருக்கிறது. தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவல் அதிக அளவில் இல்லாமல் தடுக்கப்பட்டதற்கும் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதே காரணம். உலக நாடுகளிலேயே இந்தியாவின் பொருளதாரம்தான் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

Rupee
Rupee
Photo: rupixen

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடப்பு ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27%-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்திய பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் அறிவிப்பில் அவர் வெளியிட்ட முக்கியமான 10 அம்சம்ங்களை இங்கே பார்க்கலாம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை!

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கப்படும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ட்ரோன் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களை கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்நாட்டில் எண்ணெய் வித்துகளில் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

farming
farming

கோதாவரி, காவிரி, பெண்ணாறு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.44,000 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 9,00,000 விவசாயிகள் பயனடைவார்கள். மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகே நதிநீர் இணைப்பு திட்டம் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே நிதியுதவி செய்யப்படும். மேலும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக ரூ. 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. ஒரு ரயில் நிலையம், ஓர் உற்பத்தி பொருள்!

2022-2023-ம் நிதி ஆண்டில் 22,000 கி.மீ தொலைவுக்கு ரயில்வே டிராக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். 25,000 கி.மீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த `ஒரு ரயில் நிலையம், ஓர் உற்பத்தி பொருள்' என்கிற திட்டம் உருவாக்கப்படும். `வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. ஏழைகளுக்கு வீடு

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஏழைகளூக்கு வீடு கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் நாடு முழுவதும் மேலும் 18 லட்சம் வீடுகள் கட்டப்படும். 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் முடிக்கப்படும். குடிநீர் இணைப்பு குழாய்களுக்காக ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடு
வீடு

4. டிஜிட்டல் கல்வி மேம்பாடு

கொரோனா காலங்களில் நேரடி வகுப்புகளை விட, டிஜிட்டல் வகுப்புகளே அதிகம் நடைபெற்றன. டிஜிட்டல் முறையில் கல்வியை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

1-12-ம் வகுப்பு வரை மாநில மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிக்கல்வியை ஊக்குவிக்க 200 டி.வி சேனல்கள் தொடங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் திட்டங்கள் புதுப்பிக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

5. ஆர்.பி.ஐ டிஜிட்டல் கரன்சி, பிட்காயினுக்கு வரி!

2022-2023-ம் நிதி ஆண்டில் ஆர்.பி.ஐ-யின் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்துக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கும்.

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி

பிரபல கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினில்தான் இந்தியர்கள் அதிகம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த பிட்காயின் முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு இனி 30% வரி விதிக்கப்படும். அதே போல அனைத்து கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டும் வருமானத்துக்கும் 30% வரி.

6. ஒரே நாடு ஒரே பதிவுமுறை

சொத்துகளை பத்திரப் பதிவு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்துவருகின்றன. அதற்கு ஒரு தீர்வாக, நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை' என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்யலாம்.

7. வட்டியில்லா கடன்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குகிறது. இதற்கு வட்டி எதுவும் இல்லை என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் இந்த கடன்கள் வழங்கப்படும்.

8. தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை!

வருமான வரி
வருமான வரி

2022-203-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த தனிநபர் வருமான வரியில் எந்தவொரு மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சமாகவே தொடரும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 2023-ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் சார்ஜர்கள் மற்றும் கேமரா லென்ஸ்கள் போன்றவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் இதர நவரத்தின ஆபரண கற்களுக்காக இறக்குமதி வரி 5%-ஆக குறைப்பு. குடைக்கான இறக்குமதி 20% அதிகரிப்பு, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் போன்ற வரி சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

9. ஜி.எஸ்.டி வரி வசூல் சாதனை

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும், இந்திய தொழில்முனைவோர்கள் ஜி.எஸ்.டி வரியை செலுத்தியதால், தொடர்ந்து இந்தியாவின் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்து வந்தது. தொடர்ந்து பல மாதங்களாக ஒரு லட்சம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்து வந்த நிலையில், கடந்த ஜனவரியில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

10.அரசின் நிதிப் பற்றாக்குறை

அரசின் மூலதனச் செலவுகளுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35.4% கூடுதலாகும். நடப்பு நிதி ஆண்டில், இதுவரையிலான அரசின் வரவு ரூ.22.8 லட்சம் கோடி, செலவு ரூ.39.5 லட்சம் கோடி. இது கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டில் 6.9%-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இது தற்போது 6.8%-ஆக இருக்கிறது. வரும் நிதி ஆண்டில் இந்த நிதிப் பற்றாக்குறை 6.4%-ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ``மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலேயே 5ஜி அலைகற்றைகள் ஏலம் விடப்படும். கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்த துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

Representation Image
Representation Image

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க அளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தளவாடப் பொருட்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.

பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்கும் படி செய்யப்படும்.

கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.

Post Office
Post Office
Photo: Ashok kumar.D / Vikatan

வங்கிகளுடன் இணைந்து தபால் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணப்பறிமாற்றம் செய்வதற்கான வசதிகள் அறிமுகம் செய்யப்படும். எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீடு விரைவில் தொடங்கப்படும். மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேட்டரியை மாற்றிக் கொள்ள பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் துவங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism