Published:Updated:

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'

FM Nirmala Sitharaman
Live Update
FM Nirmala Sitharaman

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.| Union Budget 2022 Live updates

01 Feb 2022 12 PM

தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை!

2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் எந்தவொரு மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை.

01 Feb 2022 12 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜி.எஸ்.டி வரி வசூல் - புதிய உச்சம்

``கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும், இந்திய தொழில்முனைவோர்கள் ஜி.எஸ்.டி வரியை செலுத்தியதால், தொடர்ந்து இந்தியாவின் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்து வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு, ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது" என பட்ஜெட்டில் அறிவிப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
01 Feb 2022 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 30% வரி

``பிரபல கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினில்தான் இந்தியர்கள் அதிகம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த பிட்காயின் முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு இனி 30% வரி விதிக்கப்படும். அதே போல இதர கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கும் 30% வரி விதிக்கப்படும்.

கிரிப்டோகரன்சிகளைப் பரிசாக வழங்கினால் பரிசு வாங்கியவருக்கே வரி விதிக்கப்படும்" - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'

- ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 2023-ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!

- மொபைல் சார்ஜர்கள் மற்றும் மொபைல் லென்ஸ்கள் போன்றவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகைகள் வழங்கப்படும்.

- வைரங்கள் மற்றும் இதர நவரத்தின ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% ஆகக் குறைப்பு

01 Feb 2022 12 PM

அரசின் நிதிப் பற்றாக்குறை!

நடப்பு நிதி ஆண்டில், இதுவரையிலான அரசின் வரவு ரூ.22.8 லட்சம் கோடி, செலவு ரூ.39.5 லட்சம் கோடி. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 6.9 சதவிகிதமாக உள்ளது. - நிர்மலா சீதாராமன்

``வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில், வரி செலுத்துபவர்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார்கள். திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது" - நிர்மலா சீதாராமன்

வட்டியில்லா கடன்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக இது வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சி

``2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும். ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள இந்த கரன்சி வர்த்தகத்துக்கான, புதிய விதிமுறைகளும் உருவாக்கப்படும்." - நிர்மலா சீதாராமன்

01 Feb 2022 11 AM

2025-க்குள் அனைத்துக் கிராமங்களுக்கும் இணைய வசதி

- பாதுகாப்புத் துறைக்குத் தேவையான 68% தளவாடப் பொருள்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படும். பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 25 சதவிகிதம் தொழில்துறை, ஸ்டார்ட் அப் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஒதுக்க வழிவகை செய்யப்படும்.

- நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் பேமென்டுகள் தாமதமாகாமல் இருக்க முழுக்க முழுக்க ஆன்லைன் பில் சிஸ்டத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

- சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும். இத்திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பையும் சேர்க்கும் வகையில் விதிமுறைகள் திட்டமிடப்படும்.

- மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகம்.

- வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு. சூரிய மின்சக்தி திட்டங்களுக்காக ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்துக் கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்கும்படி செய்யப்படும். 2025-ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

- 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் முடிக்கப்படும்.

- அரசின் மூலதனச் செலவுகளுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைவிட 35.4% அதிகமாகும்.

01 Feb 2022 11 AM

ஒரே நாடு ஒரே பதிவுமுறை

- மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்குப் பதில் பேட்டரியை மாற்றிக்கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேட்டரியை மாற்றிக்கொள்ளும் பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் தொடங்கப்படும்.

- நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை' என்கிற திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.

- நடப்பு ஆண்டிலேயே 5ஜி அலைகற்றைகள் ஏலம் விடப்படும்.

- கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்தத் துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

01 Feb 2022 11 AM

டிஜிட்டல் கல்வி மேம்பாடு!

டிஜிட்டல் முறையில் கல்வியை மேம்படுத்த திட்டம். மாநில மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க 200 டிவி சேனல்கள் தொடங்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'

- பிரதமரின் `கதி சக்தி' திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் வடமாநில இளைஞர்கள் அதிகம் பயனடைவார்கள்.

- வங்கிகளுடன் இணைந்து தபால் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதுமுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

- அடுத்த ஆண்டு முதல் அதிநவீன இ-பாஸ்போர்ட் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் மக்கள் விரைவாக பாஸ்போர்ட்டை பெறலாம். சிப் பொருத்திய இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும்.

01 Feb 2022 11 AM

ஏழைகளுக்கு வீடு

- பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் திட்டங்கள் புதுப்பிக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

- பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளூக்கு வீடு கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் நாடு முழுவதும் மேலும் 18 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

- வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- டிஜிட்டல் முறையில் கல்வியை மேம்படுத்த திட்டம். மாநில மொழிக்கல்வியை ஊக்குவிக்க 200 டிவி சேனல்கள் தொடங்கப்படும்.

01 Feb 2022 11 AM

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி

- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஐடி துறையின் பங்களிப்பில் ஏற்படுத்தப்படும். ரூ.44,00 கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் வகுக்கப்படும்.

- கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'

- அரசி, கோதுமை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2.37 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

- உள்நாட்டில் எண்ணெய் வித்துகளில் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

- 1-12-ம் வகுப்பு வரை மாநில மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

- கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சைகள் வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.

- ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு.

01 Feb 2022 11 AM

காவிரி - பெண்ணாறு நதிநீர் இணைப்புத் திட்டம்

- ``எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், தொழில்நுட்ப ரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் விஷயங்களை விவசாயிகளுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- ட்ரோன் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களைக் கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- நாடு முழுக்க ஐந்து புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கோதாவரி - கிருஷ்ணா, காவிரி - பெண்ணாறு ஆகிய திட்டங்களும் அடக்கம். இதற்காக ரூ.44,000 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 9,00,000 விவசாயிகள் பயனடைவார்கள்.

மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகே நதிநீர் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே நிதியுதவி செய்யப்படும்." - நிர்மலா சீதாராமன்

01 Feb 2022 11 AM

- ``ஏர் இந்தியாவின் உரிமை மாற்ற பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

- 2022-23-ம் நிதி ஆண்டில் 22,000 கி.மீ தொலைவுக்கு ரயில்வே டிராக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

- உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த `ஒரு ரயில் நிலையம், ஓர் உற்பத்தி பொருள்' என்கிற திட்டம் உருவாக்கப்படும்.

- மேலும் தொழில்நுட்ப ரீதியில் போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

- இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்." - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'
01 Feb 2022 11 AM

``இந்தியா மீண்டுள்ளது!"

``கோவிட் - 19 பெருந்தொற்றால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து இந்தியா விரைவாகவே மீண்டு வந்திருக்கிறது. தடுப்பூசித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவல் அதிக அளவில் இல்லாமல் தடுக்கப்பட்டதற்கும் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதே காரணம்.

இந்தியாவின் நிதிநிலை அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் ஸ்திரமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அனைத்து நாடுகளை விடவும் இந்திய ஜிடிபி 9.2 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்திய பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." - நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீடு குறித்த விவரங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
சுயசார்பு திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார், அரசு பங்களிப்பு மூலம் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கான பட்ஜெட்!
நிர்மலா சீதாராமன்
01 Feb 2022 11 AM

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

மத்திய பட்ஜெட் 2022 முக்கிய அம்சங்கள்; `இனி பிட்காயின் முதலீட்டுக்கு 30% வரி!'
01 Feb 2022 10 AM

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி அமைச்சர் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியுள்ளது. பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர். அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் தொடங்குவார். அதன்படி அமைச்சரவை இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

01 Feb 2022 10 AM

பங்குச்சந்தை நிலவரம்

பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. சென்செக்ஸ் 736 புள்ளிகள் உயர்ந்து, 58,750.17 ஆக வர்த்தகமாகிறது. நிஃப்டி 197.70 புள்ளிகள் உயர்ந்து 17,537.55 ஆக வர்த்தகமாகிறது.

01 Feb 2022 9 AM

இன்று காலை 11 மணிக்கு `மத்திய பட்ஜெட் 2022 - 23' தாக்கல் ஆகிறது. கொரோனாவிலிருந்து இன்னும் இந்தியா முழுமையாக மீண்டு வராத நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆகிறது. கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கோவிட் -19 தொற்று பரவல் ஆரம்பித்தபோது, அந்த ஆண்டு தொழில் துறையினர் மற்றும் தனிநபர்களுக்காகப் பல்வேறு சலுகைகளை மத்திய அரசாங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்புகளின் தொடர்ச்சியாகத்தான் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டின் பட்ஜெட் இருந்தது.

கடந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை மக்களும் தொழில் துறையினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகத்தான் அது அமைந்திருந்தது. கொரோனா 2-ம் அலையைக் கடந்து மூன்றாவது அலையில் நாம் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்திருக்கிறது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்றைய பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman
AP Photo

பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி கணிப்பு 2022-23 நிதி ஆண்டில் 8-லிருந்து 8.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தொழில் மற்றும் வர்த்தக சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம், ஐந்து மாநில தேர்தல் எனப் பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால் 2022-23 மத்திய பட்ஜெட் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. விவசாயிகள், கிராமப்புற பொருளாதாரம், இளைஞர்கள் எதிர்காலம், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோர்களுக்கான திட்டங்கள், வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கான சலுகைகள், ஸ்டார்ட் அப்களுக்கான திட்டங்கள் இப்படி ஒவ்வொரு துறையினரும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த பட்ஜெட் அரசுக்கு மிகவும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யாருடைய எதிர்பார்ப்பு நிறைவேறப்போகிறது... யாருக்கெல்லாம் ஏமாற்றம் தரப்போகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

லைவ் அப்டேட்களுக்கு விகடனுடன் இணைந்திருங்கள்.

Union Budget 2022-23
Union Budget 2022-23
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism