நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

என்.ஆர்.ஐ-களுக்கு ஈஸியாகும் யு.பி.ஐ பரிவர்த்தனை!

 பணப் பரிவர்த்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
பணப் பரிவர்த்தனை

பணப் பரிவர்த்தனை

உலக அளவில் மிகவும் பாராட்டப்படக் கூடிய பணப் பரிவர்த்தனை முறையாக யு.பி.ஐ இருந்துவருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ வசதி மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்திருக்கின்றன. ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்கவும், பணப் பரிவர்த்தனையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றவும் பெரும் உதவியாக யு.பி.ஐ பரிவர்த்தனை இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணப் பரிமாற்றம் செய்யவும், கடைகளில் பொருள்கள், சேவைகளைப் பெறவும் வங்கி களிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், யு.பி.ஐ வந்தபிறகு, ஒரு ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரைக்கும் சில நொடிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.

என்.ஆர்.ஐ-களுக்கு ஈஸியாகும் யு.பி.ஐ பரிவர்த்தனை!

ஆனால், இந்தியாவில் நாம் பயன்படுத்தக் கூடிய இந்த யு.பி.ஐ பணப்பரிவர்த்தனையை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயன்படுத்து வதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய மொபைல் எண்கள் மூலம் மட்டுமே அவர்கள் யு.பி.ஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிந்தது.

இந்த நிலையில், தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு எண்கள் மூலமாகவும் யு.பி.ஐ வசதியைப் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி முதல் கட்டாக சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த வெளி நாடு வாழ் இந்தியர்கள் தங்களது சர்வதேச எண்கள் மூலமாக யு.பி.ஐ சேவைகளைப் பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச எண்களைப் பயன்படுத்தி என்.ஆர்.இ, என்.ஆர்.ஓ கணக்குகள் மூலமாக யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை வசதியைப் பெற முடியும்.

இந்த வசதியை வரும் ஏப்ரல் 30-க்குள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென இந்திய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.