Published:Updated:

youtube: வாரம் ஒரு சமையல் வீடியோ... மாதம் ரூ.1 லட்சம் வருவாய்... - வளர்மதி வியூகம்!

வீடியோ
வீடியோ

யூடியூப்பைப் பொறுத்தவரை, வீடியோ அப்லோடு பண்ணியதும் ரீச் ஆகும்னு சொல்ல முடியாது. நம்முடைய வீடியோக்களைத் தொடர்ந்து அப்லோடு பண்ணிக்கிட்டே இருந்தாத்தான் நம்முடைய சேனலே நிறைய பேருக்குத் தெரிய ஆரம்பிக்கும்

''என் சொந்த ஊர் திருவண்ணாமலை. என்னுடைய மகப்பேறு விடுப்பு காலத்தில் பொழுதுபோக்குக்காக கிரியேட்டிவா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நான் நல்லா சமைப்பேன். அதனால் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், `சமையல் வீடியோ பண்ணி யூடியூப்ல அப்லோடு பண்ணு'னு சொன்னாங்க. எனக்கும் அது நல்லா ஐடியாவாக தோணிச்சு.

ஆனா, நிறைய பேர் சமையல் வீடியோ பண்றாங்க, அதுல தனித்துவமா என்ன பண்ணலாம்னு யோசிப்போதான், `குழந்தைகள் விளையாடும் சொப்புப் பாத்திரத்தில் சமைக்கும் மினியேச்சர் சமையல் பண்ணலாம்'னு பிளான் பண்ணினேன்.

சின்னச் சின்ன பொருள்களைத் தேடிக் கண்டுபிடிச்சு வாங்கினேன். அந்தப் பாத்திரங்களில் சமையல் செஞ்சு 'டைனி ஃபுட்ஸ்'ங்கிற எங்களோட யூடியூப் சேனலில் வீடியோவா அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருந்துச்சு. யூடியூப்பைப் பொறுத்தவரை, வீடியோ அப்லோடு பண்ணியதும் ரீச் ஆகும்னு சொல்ல முடியாது. நம்முடைய வீடியோக்களைத் தொடர்ந்து அப்லோடு பண்ணிக்கிட்டே இருந்தாத்தான் நம்முடைய சேனலே நிறைய பேருக்குத் தெரிய ஆரம்பிக்கும். 15 வீடியோக்களுக்குப் பிறகுதான் என் சேனலுக்குனு நிறைய பார்வையாளர்கள் கிடைச்சாங்க. நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரவே, எனக்கும் ஆர்வம் அதிகமாகிடுச்சு.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

இப்போ வாரம் ஒரு வீடியோனு அப்லோடு பண்ணிக்கிட்டு இருக்கேன். எட்டு லட்சத்துக்கும் மேல சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. மாசத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்குது.

பெரிய அளவு டென்ஷன் இல்லாத வேலை. கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்தா ஈஸியா சக்சஸ் ஆகலாம்" என்று பாந்தமாகச் சிரிக்கிறார் யூடியூப் தொழில்முனைவர் வளர்மதி.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த ஆன்லைன் பிசினஸ், கொரோனா ஊரடங்கலுக்குப் பிறகு பலரும் செய்யக்கூடியதாக மாறியிருக்கிறது.

குறைந்த அளவில் முதலீடு செய்து, சமூக வலைதளங்கள் மூலமாகப் பல பெண்களும் இன்றைக்கு ஆன்லைன் பிசினஸில் கலக்கிவருகிறார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் செய்வது எப்படி, எவ்வளவு முதலீடு செய்தார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், ஆன்லைன் பிசினஸ் என்று வரும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை வளர்மதி போலவே விளக்குகிறார்கள் மேலும் சில சோஷியல் மீடியா தொழில்முனைவோர்கள்.

> மின்னும் ஃபேஷன் நகை பிசினஸ்... தீப்தி - இன்ஸ்டாகிராம் தொழில்முனைவோர்

> கலக்கும் துணி பிசினஸ்... சண்முகப்பிரியா - வாட்ஸ்அப் தொழில்முனைவோர்

> மணம் வீசும் மசாலா பிசினஸ்... சாரதா - இணையதளப் பக்கம் மூலம் தொழில்முனைவோர்

இவர்களின் அனுபவங்களுடன் ஆன்லைன் பிசினஸ் டிப்ஸையும் உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரையை நாணயம் விகடன் வாசிக்க க்ளிக் செய்க... > அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்! https://bit.ly/2YFyhJq

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு