Published:Updated:

`கம்மி பட்ஜெட்டில் தொடங்கினேன்; இப்ப லட்சங்கள்ல வருமானம்!' - ஆன்லைன் பிசினஸில் சாதித்த போட்டோகிராபர்

மாத்தி யோசி! - பயிற்சி வகுப்பு
மாத்தி யோசி! - பயிற்சி வகுப்பு

``உங்கள் துறையில இருக்கிற மற்றவர்களிடம் இருந்து உங்களுடைய பிசினஸ்ஸை எப்படித் தனித்துவமாக காட்டுறது, காலத்துக்கு ஏற்ப எப்படி பிசினஸை மாத்தலாம்னு தெளிவான புரிதல் இருந்தா குறைஞ்ச முதலீட்டுல நீங்களும் சாதிக்கலாம்".

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பெண்களுக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை இயங்கும் அலுவலக வேலைதான் சரின்றது இந்த சமூகத்தோட கருத்து. அதையெல்லாம் உடைச்சு இன்னிக்கு பிசினஸ்ல நிறைய பெண்கள் சாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட வெற்றியும், புறக்கணிப்புகள், கேலி கிண்டல்களிலிருந்து தொடங்குனதுதான் " உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் `அஹானா' ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் சாரதா.

சாரதா
சாரதா

``சென்னைப் பொண்ணு நான். சின்ன வயசுலேயே போட்டோகிராபி மேல காதல். பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் வீட்ல இன்ஜினீயரிங்ல சேர்த்துவிட்டாங்க. அதை டிஸ்கன்டின்யூ பண்ணிட்டு அடம்பிடிச்சு விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். ரசனை இருக்கிற யாரும் போட்டோகிராபியின் நுணுக்கங்களைக் கத்துக்க முடியும். நான் போட்டோகிராபியுடன் சேர்த்து, போட்டோ எடிட்டிங், ஃபிலிம் மேக்கிங், போட்டோஷாப்னு கூடுதலான விஷயங்களையும் கத்துக்கிட்டேன்.

ஒரு தொழிலைத் தொடங்கணும்னா அதில இருக்கிற அடிப்படை விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கணும். அடுத்தவங்களை நம்பித் தொடங்குனா நிறைய சறுக்கல்கள் இருக்கும். நான் ஜெயிச்சுருவேன்னு ஒரு நம்பிக்கை வந்த பிறகு கேமராவையும், என்னோட திறமையையும் மட்டும் நம்பி ஸ்மைலி மீடியாங்கிற நிறுவனத்தை காலேஜ் படிக்கும்போதே தொடங்கிட்டேன்.

சாரதா
சாரதா
SHREYANS DUNGARWAL

ஆரம்பத்துல நண்பர்கள் மூலமா பிறந்தநாள் பார்ட்டி கவர் பண்றது மாதிரியான சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் கிடைச்சுது. பிறகு நிறைய கான்செப்ட் போட்டோ ஷூட்களும் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல குறைவான பட்ஜெட்டில தான் பிசினஸ் தொடங்குச்சு. அப்புறம் லட்சங்கள்ல வருமானம் வர ஆரம்பிச்சுது. இப்போ எங்க நிறுவனத்துல 20 பேருக்கும் மேல வேலை செய்றாங்க, என் கணவரும் போட்டோகிராபர்தான். எல்லா நிகழ்ச்சிகளையும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஷூட் பண்ணுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் கர்ப்பமா இருந்த நேரம் `பிரெக்னன்சி போட்டோ ஷூட்' பண்ணினேன். குழந்தை பிறந்த பிறகு அவங்களை விதவிதமாக போட்டோ எடுக்க பேபி போட்டோகிராபிக்குத் தேவையான பொருள்களை எல்லாம் தேடித்தேடி வாங்குனேன். எதிர்பாராத விதமா என் குழந்தை இறந்தே பொறந்துச்சு. நிறைய மனஅழுத்தம், அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம உடைஞ்சு போய் உட்கார்ந்துட்டேன். என்னை மீட்டு எடுக்க என் குடும்பம் மறுபடியும் என் கையில கேமராவை கொடுத்துச்சு.

Baby Photography ( Representational Imag)e
Baby Photography ( Representational Imag)e
`சிறிய முதலீடு, இப்போது மாதம் ₹3 லட்சம் வரை வருமானம்!' - ஆன்லைன் பிசினஸில் அசத்தும் நித்யா

அஹானா போட்டோகிராபின்ற பேருல குழந்தைகளை போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். குழந்தைகளுடைய சிரிப்பு என்னுடைய எல்லா கவலைகளையும் மறக்க வெச்சுது. நான் எடுத்த போட்டோக்களை பார்த்துட்டு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. நல்லா போயிட்டு இருந்த பிசினஸ்ல கொரோனா மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. பிசினஸை சூழலுக்கு தகுந்த மாதிரி எப்படி மாத்தலாம்னு யோசிச்சு ஆன்லைனில் பேபி போட்டோகிராபிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பிச்சேன்.

பிசினஸை பொறுத்தவரை சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செஞ்சாதான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். நிறைய அம்மாக்கள் ஆன்லைன் கோர்ஸ் படிச்சாங்க. இப்போ போட்டோகிராபி பத்தி வகுப்புகள் எடுக்கிறதே எனக்கு புது பிசினஸாகவும் மாறியிருக்கு. வருமானமும் லட்சங்களில் உயர்ந்திருக்கு. உங்ககிட்ட இருக்குற திறமையை நிச்சயம் பிசினஸாக மாற்ற முடியும்.

உங்க துறையைச் சார்ந்த மத்தவங்ககிட்ட இருந்து உங்களுடைய பிசினஸை எப்படித் தனித்துவமா காட்டுறது, காலத்துக்கு ஏற்ப எப்படி பிசினஸை மாத்தலாம்னு தெளிவு இருந்தா குறைஞ்ச முதலீட்டுல நீங்களும் சாதிக்கலாம்" பாசிட்டிவ்வாக நிறைவு செய்தார் சாரதா.

நீங்களும் உங்கள் திறமையை பிசினஸாக மாற்றுவது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்களும் புதிய பிசினஸ் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டுமா?

மாத்தி யோசி! - பயிற்சி வகுப்பு
மாத்தி யோசி! - பயிற்சி வகுப்பு

அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் சார்பில் `மாத்தி யோசி!' என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. தொழில் தொடங்குவது, குறைந்த செலவில் மார்கெட்டிங், அதிக லாபம் பெறும் வழிமுறைகள் என்ன என்பது வரை விரிவான பயிற்சியளிக்கப்படும். பிசினஸ் பயிற்சியாளரும் மார்கெட்டிங் நிபுணருமான சக்திவேல் பன்னீர்செல்வம் பயிற்சியை வழங்கவுள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6.30 மணி வரை ஆன்லைனில் பயிற்சி நடைபெறும்.

`மாத்தி யோசி!' பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/3x5lCyo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு