Published:Updated:

யூடியூபில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் கிராமத்து மக்கள்... ஆச்சர்யப்பட வைக்கும் குக்கிராமம்!

யூடியூப் பணியில் ( Picasa )

வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், வங்கி வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர யூடியூபராக மாறினார். இதுவரை 250 வீடியோக்களைத் தயாரித்து பட்டையைக் கிளப்பி வருகிறார் ஞானேந்திர சுக்லா.

யூடியூபில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் கிராமத்து மக்கள்... ஆச்சர்யப்பட வைக்கும் குக்கிராமம்!

வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், வங்கி வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர யூடியூபராக மாறினார். இதுவரை 250 வீடியோக்களைத் தயாரித்து பட்டையைக் கிளப்பி வருகிறார் ஞானேந்திர சுக்லா.

Published:Updated:
யூடியூப் பணியில் ( Picasa )

பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த `யூடியூப்’ பலருக்கும் பணம் தரும் காமதேனு என்பதை உணர்ந்த சிலர், தங்கள் போனில் மற்ற யூடியூப் சேனல்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு, யூடியூப் சேனலுக்கான கன்டென்ட்டை உருவாக்கித் தந்து, லட்சக் கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

யூடியூப் பணியில்
யூடியூப் பணியில்
Picasa

அதிலும், ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேரில், 1200 பேர் யூடியூப் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக அல்லது யூடியூப் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களாக, பங்களிப்பவர்களாக மாறி, மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் துளசி கிராமம்தான் இந்தியாவின் யூடியூப் கிராமமாக மாறியிருக்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ள பலரும் காலை முதல் மாலை வரை காமிராவும் கையுமாக ஊருக்குள்ளும் வெளியேயும் முச்சந்திகளிலும் தெருக்களிலும் பரபரப்பாக இயங்குவதைப் பார்த்தால், நீங்கள் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்.

யூடியூப் பணியில்
யூடியூப் பணியில்
Picasa

அடுத்தடுத்து நிகழ்ச்சிகளைத் தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்தால்தானே வருமானம் கிடைக்கும் என்பதற்காக இந்தக் கிராமத்தில் யூடியூப்களுக்கான கன்டென்ட் உருவாக்கம் ஒரு நாளின் 24 மணி நேரமும் நடத்துகொண்டிருக்கிறது.

இந்தக் கிராமம் யூடியூப் கிராமமாக மாறியதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ஞானேந்திர சுக்லா, ஜெய் வர்மா ஆகியவர்கள்தாம். இந்த இருவரும் நண்பர்கள். ஞானேந்திர சுக்லா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்தவர். யூடியூபில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, `நாமும் இது மாதிரி பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வெளியிட்டால் என்ன’ என்று நினைத்தார்.

தன் நண்பர் ஜெய் வர்மாவுடன் சேர்ந்து சில வீடியோக்களை எடுத்து அதை யூடியூபில் சேனல் தொடங்கி பதிவேற்ற, பலரும் பார்க்கத் தொடங்கினார்கள். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், வங்கி வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர யூடியூபராக மாறினார். இதுவரை 250 வீடியோக்களைத் தயாரித்து பட்டையைக் கிளப்பி வருகிறார் ஞானேந்திர சுக்லா.

ஞானேந்திர சுக்லா
ஞானேந்திர சுக்லா
Picasa

சுமார் ஒரு லட்சம் சந்தாதாரர்கள் ஞானேந்திர சுக்லா, ஜெய் வர்மாவுக்கு இருக்கிறார்கள். ஜெய் வர்மா, வேதியல் முதுகலை பட்டதாரி. உள்ளூர் கோச்சிங் சென்டரில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தவர். நண்பன் ஞானேந்திர சுக்லாவுடன் இணைந்து யூடியூபராக மாறியதிலிருந்து மாதம் ரூ.30,000 நண்பரிடமிருந்து சம்பளமாகப் பெறுகிறார்.

இந்த இருவரும் யூடியூபில் கலக்குவதைப் பார்த்து துளசி கிராமத்தில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் யூடியூபர்களாக அவதாரம் எடுத்தார்கள்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி சாகு யூடியூபர் மட்டுமல்ல, நடிகையும்கூட. ``யூடியூப் பெண்களிடையே வல்லமையைக் கூட்டியுள்ளது. எங்கள் ஊரில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வரமாட்டார்கள். வருவதற்கும் அனுமதி இல்லை. வீட்டுக்குள் இருக்கும் பெண்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், யூடியூப்தான்..!

யூடியூப் பணியில்
யூடியூப் பணியில்
Picasa

நான் யூடியூபராக மாறி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் என் ஊர் மக்கள் கேமரா முன் நடிக்கத் தயங்கினார்கள். பொது இடங்களில் நடிக்க வெட்கப்பட்டார்கள். நடிக்க ஆர்வம் இருந்தாலும் கேமரா முன் நடிக்க தயங்குபவர் களாகவும், நடிக்க வெட்கப்படுகிறவர்களாகவும் இருந்தனர். ஊரில் `ராம லீலா’ நாடகம் ஏற்பாடு செய்து நடிக்கச் சொல்லி அவர்களது தயக்கங்களைப் போக்கினோம். இந்தக் கிராமத்து பெண்களுக்கும் முதியோர்களுக்கும் நடிப்பு நன்றாகவே வருகிறது” என்கிறார் பிங்கி சாகு.

``எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிராமியக் கலைகள் அத்துப்படி என்றாலும், குடத்துக்குள் இருக்கும் விளக்கு போல வெளியே தெரியாமல் இருந்துவிட்டார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் யூடியூப் அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது...” என்கிறார் யூடியூபரான சந்தீப் சாகு.

யூடியூப்
யூடியூப்

துளசி கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர்கள் கல்வி, பொது அறிவை வளர்க்கும் காணொளிகளைத் தயாரித்தாலும், நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள். ஒருமுறை மருத்துவமனையில் சீரியஸாகப் படுக்கையில் கிடந்த ஒருவர் `காமெடி வீடியோ ஒன்றைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்ல, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட காமெடி வீடியோ அவருக்கு காட்ட... வலியையும் மறந்து சிரித்தாராம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வீடியோக்களுக்கு துளசி கிராம யூடியூபர்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர்கள் பலருமே லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். `யூடியூப் ஷார்ட்ஸ்’ என்பது தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் படைப்பாளிகளின் சொர்க்கமாக யூடியூப் ஷார்ட்ஸ் மாறிவிட்டது. இந்த ஷார்ட்களைத் தயாரித்து வெளியிடுவதிலும் துளசி கிராம மக்கள் அதிசயிக்க வைக்கிறார்கள்!

இது மாதிரி ஒரு கிராமம் தமிழ்நாட்டில் உருவானால் எப்படி இருக்கும்?

- பிஸ்மி பரிணாமன்