Published:Updated:

அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியல்!- அமெரிக்கா முதலிடம், இந்தியா..?

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

கிரெடிட் சூயிஸ் குழுமம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகளாவிய செல்வ அறிக்கையின் 10 வது பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

உலக அரங்கில் முக்கியமான முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ், உலக நாடுகளின் சொத்து அறிக்கையின் 10 வது பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற அறிக்கை வெளியிடுவது அந்நிறுவனத்தின் வழக்கம்.

மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் எண்ணிக்கை, அவர்கள் வைத்திருக்கும் சொத்துகளின் விகிதம் மற்றும் உலகளவில் சமத்துவமின்மையின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு நாட்டின் செல்வத்தின் வளர்ச்சி மற்றும் விநியோகம் இரண்டையும் இந்த அறிக்கை கணிக்கிறது.

`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ!’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates

இந்த நிறுவனம் சொத்து என்பதை ஒரு நபரின் `நிகர சொத்து மதிப்பு’ அடிப்படையில் வரையறுக்கிறது. பணம், நிதிச் சொத்துகளின் மதிப்பு மற்றும் வீடுகளின் உண்மையான சொத்துகளின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் ஒரு தனிநபரின் கடன்களைக் கழித்தும் கணக்கிடுகிறது. மேலும், இந்த நிறுவனம், உலகின் மொத்த பணம் 360.6 டிரில்லியன் டாலர் என்று கூறுகிறது. உலகின் மொத்த பண மதிப்பில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தைக் கொண்ட அமெரிக்கா, உலகின் முதல் பணக்கார நாடாக உள்ளது.

இந்தியா - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்கா

நாட்டின் மொத்த சொத்து மதிப்பு அடிப்படையில், டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் இதோ...

1. அமெரிக்கா - 106 ட்ரில்லியன் டாலர்

2. சீனா- 63.8 ட்ரில்லியன் டாலர்

3. ஜப்பான்- 25 ட்ரில்லியன் டாலர்

4. ஜெர்மனி- 14.7 ட்ரில்லியன் டாலர்

5. இங்கிலாந்து- 14.3 ட்ரில்லியன் டாலர்

6. இந்தியா - 12.6 ட்ரில்லியன் டாலர்

7. கனடா - 8.6 ட்ரில்லியன் டாலர்

8. தென் கொரியா- 7.3 ட்ரில்லியன் டாலர்

9. ஆஸ்திரேலியா - 7.2 ட்ரில்லியன் டாலர்

10. ஸ்விட்சர்லாந்து - 3.9 ட்ரில்லியன் டாலர்

அடுத்த கட்டுரைக்கு