Published:Updated:

GST மாற்றங்கள்: ஜனவரி 1-ம் முதல் எந்தெந்தப் பொருள்கள் விலை உயர்கின்றன?

ஜி.எஸ்.டி
News
ஜி.எஸ்.டி

புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்துக்கும் 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதன்படி, வருகிற 1-ம் தேதி முதல் (சனிக்கிழமை) வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் தலைமையில் ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் சீர்திருத்தங்களின் மூலம் ஒரு சில பொருள்களுக்கு வரி விதிப்பைக் குறைத்தும், சிலவற்றுக்கு அதிகரித்தும் செயல்படுத்துகின்றன. அதன்படி, வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது.

ஓலா, ஊபருக்கு ஜி.எஸ்.டி!

ஓலா, ஊபர் நிறுவனங்கள்
ஓலா, ஊபர் நிறுவனங்கள்
vikatan

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் முதலாவதாக, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துச் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி புதிதாக விதிக்கப்படுகிறது. இதற்கு முன் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்துப் பயணங்களுக்கும் 5% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. அதன்படி, வருகிற 1-ம் தேதி முதல் (சனிக்கிழமை) வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.

ரயில், பேருந்து என அனைத்துக்கும் இந்த ஜி.எஸ்.டி வரி பொருந்தும். ஆட்டோவைப் பொறுத்தவரை, ஆன்லைன் அல்லாத சேவைக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஓலா ஆட்டோக்களுக்கு ஜி.எஸ்.டி வரி உண்டு.

ஸ்விக்கி, ஸொமேட்டோவுக்கு ஜி.எஸ்.டி

இதுவரை உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸொமேட்டோ மாதிரியான அப்ளிகேஷனுக்கு ஜி.எஸ்.டி வரி விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, ஸொமேட்டோவில் மக்கள் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருள்களின் மீது 5% ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்.

பட்டு சேலைகள் விலை உயரும்?!

காஞ்சிபுரம் பட்டு சேலை
காஞ்சிபுரம் பட்டு சேலை

அதே போல, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜவுளிப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புதிய விலையானது வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்டுச்சேலை மற்றும் அதைத் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்கிறது.

ஒட்டுமொத்த ஜவுளித் துறையின்கீழ், பட்டு கைத்தறி நெசவும் வருவதால், ஜி.எஸ்.டி உயர்வு வாயிலாக, பட்டுச் சேலைகளின் விலை கணிசமாக உயரவுள்ளது. சாதாரண பட்டுச் சேலையின் விலையும் 3,௦௦௦ ரூபாய் வரை உயரும் என்பதால், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை, கைத்தறியில் நெய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் எனக் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.

Foot falls (Representational Image)
Foot falls (Representational Image)

ரெடிமேட் துணிகளுக்கு 12% ஜி.எஸ்.டி!

காலணி மற்றும் ரெடிமேடு துணி வகைகளுக்கு 12% ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பொருள்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதுவும் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. காட்டன் துணி வகைகளுக்கு மட்டும் ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.