Published:Updated:

வருமான வரிச்சுமையைக் குறைக்கும் இந்த வழிகள் பற்றித் தெரியுமா? - 51

வருமான வரி (மாதிரி படம்)
News
வருமான வரி (மாதிரி படம்)

ஒரு நாட்டைக் கட்டமைத்துக் காப்பாற்றி, அதிலுள்ள மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு விஷயங்களை ஏற்பாடு செய்து தருவது எந்த அரசுக்கும் மிகவும் சவாலான விஷயம். உள்கட்டமைப்பு, ராணுவம், கல்வி, ஹெல்த்கேர், விவசாயத்துக்குத் தேவையான மானியம், ரேஷன் போன்ற பல செலவுகளுக்கும் பணம் தேவைப்படும்.

ஒரு நாட்டைக் கட்டமைத்துக் காப்பாற்றி, அதிலுள்ள மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு விஷயங்களை ஏற்பாடு செய்து தருவது எந்த அரசுக்கும் மிகவும் சவாலான விஷயம். உள்கட்டமைப்பு, ராணுவம், கல்வி, மருத்துவம், விவசாயத்துக்குத் தேவையான மானியம், ரேஷன் போன்ற பல செலவுகளுக்கும் பணம் தேவைப்படும். குடிமக்கள் கட்டும் வரிப்பணத்தில் இருந்தே இது போன்ற செலவுகள் செய்யப்படுகின்றன.

வருமான வரி

பொதுவாக, நாம் செலுத்தும் வரிப்பணம், நேரடி வரி (Direct Tax), மறைமுக வரி (Indirect Tax) என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி, டைரக்ட் டாக்ஸின் கீழ் வருகிறது. இந்தியாவில் வசிக்கும் ரெசிடென்ட் இந்தியர்கள் உலகின் எந்த மூலையிலிருந்து வருமானம் பெற்றாலும், அதற்கு இங்கு வரி கட்ட வேண்டும்.

வருமான வரி
வருமான வரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அயல் நாட்டில் வசிக்கும் நான்-ரெசிடென்ட் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) இந்தியாவில் ஈட்டும் வருமானத்துக்கு மட்டும் இங்கு வரி கட்டினால் போதும். வருமான வரி கட்டும் இந்தியர்கள் வயதுவாரியாக 60 வயதுக்குக் கீழ், 60 - 80 வயது உள்ளவர்கள், 80-க்கு மேல் உள்ளவர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப் படுகிறார்கள். அவர்கள் கட்ட வேண்டிய வருமான வரியும் அதற்கேற்றவாறு மாறுபடுகிறது.

கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் இருந்து வரக்கூடிய வருமானத்துக்கு வருடா வருடம் வரி கட்ட வேண்டும்.

1. சம்பளம் – சம்பளமும் பென்ஷனும்.

2. பிசினஸ் மற்றும் தொழில் வருமானம் - பிசினஸ் / சுய தொழில் செய்வோர், இன்ஷூரன்ஸ் ஏஜன்ட்டுகள், சார்டர்ட் அக்கவுன்டன்டுகள், டாக்டர்கள், வக்கீல்கள், கான்ட்ராக்டர்கள் ஆகியோர் ஈட்டும் பணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3. மூலதன ஆதாயம் - மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, சொத்துகள் போன்றவற்றில் இருந்து நாம் ஈட்டுவது.

4. வாடகை வருமானம் - சொத்துகளில் இருந்து வரும் வருமானம்.

5. மற்றவை - ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேவிங்ஸ் அக்கவுன்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டி, லாட்டரியில் பெறும் பணம்.

வரி வரம்புகள் (Tax Slabs) பழைய முறையும் புதிய முறையும்

வருமானம் அதிகமானால் வரியும் அதிகரிக்கும்படி வருமான வரி வரம்புகள் (Slabs) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் பழைய முறை, புதிய முறை என்று இரு வகைகள் உள்ளன. பழைய முறையில் 14 விதமான பிரிவுகளின் கீழ் வரிச்சலுகை உண்டு. இந்த வரிச் சலுகையைப் பெற்றபின் மீதி இருக்கும் வருமானத்துக்கு விதிக்கப்படும் வரி அதிகம். புதிய முறையில் வரிச் சலுகை கிடையாது; ஆனால், வரிவிதிப்பு குறைவு. இந்த இரண்டு முறைகளில் நமக்குப் பொருத்தமானதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வரிவிதிப்பு
வரிவிதிப்பு

மேற்கண்ட ஸ்லாப்கள் முதலீடு மூலதன ஆதாயத்துக்கு பொருந்தாது. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, வீடு, மனை போன்ற சொத்துகள் போன்ற முதலீடுகளை நாம் எவ்வளவு காலம் வைத்திருந்தோம் என்பதைப் பொறுத்து அவற்றிலிருந்து வரும் லாபம் லாங் டெர்ம் அல்லது ஷார்ட் டெர்ம் என்று கண்டறியப் பட்டு அதற்குத் தகுந்த மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

80சி வரிக்கழிவு (Tax Deduction)

இந்தியக் குடும்பங்களில் சேமிப்பையும் முதலீட்டையும் ஊக்குவிக்க பலவித முதலீடுகளுக்கு அரசு வரிச்சலுகை அளிக்கிறது. தனிநபரைப் பொறுத்தவரை முக்கியமானது 80சி வரிக்கழிவுகள்.

வரி
வரி

கீழ்க்கண்ட திட்டங்களில் செலுத்தப்பட்ட முதலீடுகளைக் கூட்டினால் வரும் தொகை அல்லது ரூ.1.5 லட்சம் (எது குறைவோ அது) வரிக்கழிவாகக் கிடைக்கிறது:

 • பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்

 • எம்ப்ளாயீஸ் பிராவிடென்ட் ஃபண்ட்

 • இன்ஷூரன்ஸ் பிரீமியம்

 • ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (இ.எல்.எஸ்.எஸ்)

 • சுகன்யா சம்ரித்தி யோஜனா

 • நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட்

 • சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம்

 • யூலிப்

 • ஐந்து வருட வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்

 • இரண்டு குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவு

 • வீட்டுக் கடனுக்குக் கட்டும் அசல் தொகை

 • சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம்

இவை தவிர, இன்னும் பல செக்ஷன்களின் கீழ் வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அரசே இத்தனை சலுகைகளை அனுமதிக்கும்போது, அவற்றை உபயோகித்து வரிச்சுமையைக் குறைக்கலாமே தவிர, தவிர்க்க எண்ணுவது முற்றிலும் தவறு.