Published:Updated:

ஆல்கோ டிரேடிங்கிற்கு கட்டுப்பாடுகள் வருமா? என்ன செய்கிறது செபி?

Stock Market
News
Stock Market ( Photo by Nick Chong on Unsplash )

எந்த விலையில் பங்குகளை வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை கம்ப்யூட்டர் முன்கூட்டியே கணித்து திட்டமிடுவதன் மூலம் அந்தச் செயல்திட்டம் சரியான விலையில் எக்ஸிகியூட் ஆகிறது. இதுதான் அல்கோ டிரேடிங்.

இந்தியப் பங்குச் சந்தையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் செபி அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது அல்கோ டிரேடிங்கை சிறு முதலீட்டாளர்களுக்காக ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை உருவாக்க இருக்கிறது.
இது தொடர்பான ஆலோசனைகளை செபி கேட்டிருக்கிறது. மேலும், அல்கோ டிரேடிங் குறித்து செய்ய வேண்டிய நடைமுறை மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் கருத்து தெரிவிக்கலாம் என செபி கூறியிருக்கிறது. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் பரிந்துரையை அனுப்ப வேண்டும் என செபி கூறியிருக்கிறது. முதலில் அல்கோ டிரேடிங் குறித்தும் அதன் பயன் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அல்கோ டிரேடிங் என்றால் என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை வாங்க போன் மூலமாக ஆர்டர் செய்தோம். அதன்பிறகு, கம்ப்யூட்டர் மூலமாகப் பங்குகளை வாங்கி விற்றுவந்தோம். அதன் தொடர்ச்சியாக மொபைல் ஆப்கள் வந்தன. இதன் அடுத்தகட்டமாக எந்த விலையில் பங்குகளை வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை கம்ப்யூட்டர் முன்கூட்டியே கணித்து திட்டமிடுவதன் மூலம் அந்தச் செயல்திட்டம் சரியான விலையில் எக்ஸிகியூட் ஆகிறது. இதுதான் அல்கோ டிரேடிங்.

உதாரணத்துக்கு, ஒரு பங்கை ரூ.100-க்கு வாங்க நினைக்கிறோம் எனில், நாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறோம். மிக குறைந்த நேரமே அந்த விலையில் இருக்கிறது எனில், நம்மால் வாங்க முடியாது. அதேபோல, விற்பனையும். நாம் 110 ரூபாய்க்கு விற்க நினைத்திருப்போம். ரூ.110 தொட்ட பிறகு உடனடியாகச் சரிந்து 109 ரூபாய்க்கு வந்திருக்கும். இது போன்ற நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்குவதுதான் அல்கோ.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதாவது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் கம்ப்யூட்டர் நேரடியாக யுத்திகளை வகுத்து அந்த உத்தியைத் தானாக நடத்துகிறது. பல வகையான உத்திகள் இருக்கின்றன அல்லது நாம் உருவாக்க முடியும். இதில் எந்த உத்தியைத் தேர்ந்தெடுப்பது என்பது மட்டுமே பங்கு வர்த்தகர்கள் வேலை.

நன்மைகள் என்னென்ன?

அல்கோ மூலம் இரு நன்மைகள் நடக்கின்றன. முதலாவதாக, ஒரு முதலீட்டாளர் / வர்த்தகரின் செயல் திட்டத்தைத் துல்லியமாக நடத்துகிறது. இரண்டாவதாக, எமோஷனல் முடிவுகளை நீக்குகிறது. பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க யுக்தி அளவுக்கு எமோஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ரூ.110-ல் விற்க நினைத்திருக்கிறோம். அந்த விலையில் சரியாக விற்கும். ஒரு வேளை, நாமே விற்பதாக இருந்தால் 110 ரூபாய் இலக்கை சீக்கிரம் தொட்டுவிட்டது. அதனால் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்போம் என நினைப்போம். இதுபோல எமேஷனால் முடிவுகள் பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

அல்கோ மூலம் எமோஷனுக்கு வேலையில்லை. நிர்ணயம் செய்யும் விலையை அல்கோ எக்ஸிகியூட் செய்யும்.
தற்போது சந்தையில் நடக்கும் வர்த்தகத்தில் குறைந்த அளவுக்கு அல்கோ மூலமாக நடக்கிறது. இந்த வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த செபி திட்டமிடுகிறது. ல்கோ ட்ரேடிங் செயலிகள் மூலமாக சிறிய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என செபி கருதுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குச் சந்தையை மேம்படுத்துவும், இந்த டூல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதும் தற்போதைய தேவையான ஒன்றே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அல்கோவைப் பயன்படுத்துபவர்கள் முதலீட்டாளர்கள் அல்ல, வர்த்தகர்கள்.

ஜெபு விஜயகுமார்
ஜெபு விஜயகுமார்

வர்த்தகர்கள் ஓரளவுக்கு யுக்திகளைத் தெரிந்துகொண்ட பிறகுதான் அதைப் பயன்படுத்துகிறார்கள். தவிர, அல்கோ என்பது இ.சி.எஸ் பேமென்ட் போல அவசியமான ஒன்று. அதைத் தற்போதைய காலத்துக்காக மட்டுமல்லாமல் வருங்காலத்துக்கு ஏற்ப செபியின் மாற்றம் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

அதேபோல, ஒவ்வொரு யுக்திக்கும் அனுமதி வாங்குவது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. ஒரு அல்கோவை யார் உருவாக்கிறார்கள், அந்த அல்கோவின் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை பார்க்க முடியும்.

தவிர, யுக்தி என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சீஸனில் ஒரு யுக்தி இருக்கும். சில மாதங்களுக்குப்பிறகு யுக்தி மாறும் வேறு யுத்தி இருக்கும்.

அதனால் அல்கோவை வடிவமைக்கும் நிறுவனத்துக்கு அனுமதி என்று இருந்தால் போதுமானது. இதை முறைப்படுத்துவது காலத்தின் தேவை. ஆனால், வரும் காலத்துக்கு ஏற்ப விதிமுறைகள் இருக்க வேண்டும்.