Published:Updated:

நிம்மதியான ஓய்வுக்காலத்திற்கு உதவும் `பேசிவ் இன்கம்'; நீங்கள் தயாரா? - பணம் பண்ணலாம் வாங்க - 3

Money (Representational Image)

இந்த ஆக்டிவ் இன்கமில் நாம் பணத்துக்காக வேலை பார்க்கிறோம். பேசிவ் இன்கமில் பணம் நமக்காக வேலை பார்க்கும்.

நிம்மதியான ஓய்வுக்காலத்திற்கு உதவும் `பேசிவ் இன்கம்'; நீங்கள் தயாரா? - பணம் பண்ணலாம் வாங்க - 3

இந்த ஆக்டிவ் இன்கமில் நாம் பணத்துக்காக வேலை பார்க்கிறோம். பேசிவ் இன்கமில் பணம் நமக்காக வேலை பார்க்கும்.

Published:Updated:
Money (Representational Image)

வட்டி வருமானத்தில் ஓய்வுக் காலத்தைக் கழிக்க முடிவு செய்துள்ள பலரில் நீங்களும் ஒருவரா? இன்று உங்கள் குடும்பத்துக்கு ஆகும் மாதச் செலவு சுமார் ரூ. 30,000 எனில், 25 வருடங்கள் கழித்து நீங்கள் ரிடையர் ஆகும்போது (அதிக ஆடம்பரமின்றி இருவர் மட்டுமே வாழ்க்கையைத் தொடர்ந்தாலும்) உங்களுக்கு மாதம் ரூ. 1,80,000 தேவைப்படும்.

Money (Representational Image)
Money (Representational Image)

அய்யய்யோ என்று அதிர்ந்து போய்விடாதீர்கள். பணவீக்கமும் விலைவாசி உயர்வும்தான் இதற்குக் காரணம். மாதம்தோறும் இந்தத் தொகையை வட்டியாகப் பெற உங்களிடம் ரூ.4.5 கோடி ரொக்கமாக இருக்க வேண்டும். இவ்வளவு தொகையை எப்படி சேமிப்பது என்று மலைக்கிறீர்களா?

எப்பேர்ப்பட்ட அலிபாபா குகையாக இருந்தாலும் அதைத் திறக்கும் மந்திரச் சாவி இருக்கும் இல்லையா? இந்தப் பிரச்னைக்கு சாவி, பர்சனல் ஃபைனான்ஸ்தான். ஓய்வுக் கால பணப்பிரச்னையை சமாளிக்க அது சொல்லும் சூத்திரம் செயலின்றி வருமானம் (Passive Income). இளமையில் நாம் ஓடியாடி சம்பாதிப்பது செயலினால் வருமானம் (Active Income) எனப்படும். இந்த ஆக்டிவ் இன்கமில் நாம் பணத்துக்காக வேலை பார்க்கிறோம். பேசிவ் இன்கமில் பணம் நமக்காக வேலை பார்க்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆக்டிவ் இன்கமுக்கு உதாரணமாக இருப்பவை - சம்பளம், லாபம், ஃபீஸ் போன்றவை. நம்மால் ஓடியாடி வேலை செய்ய முடியும் வரைதான் இவற்றை சம்பாதிக்க இயலும். நம் உடல் ஓய்ந்துவிட்டால் இந்த வருமானமும் நின்றுவிடும். வருமானம் நிற்கும்; செலவு நிற்குமா? பணவீக்கம், விலைவாசி உயர்வு இவற்றின் காரணமாகச் செலவு இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

Money (Representational Image)
Money (Representational Image)

ஆனால், பேஸிவ் இன்கம் நம் உடல் சக்தியைப் பொறுத்த விஷயம் அல்ல; முன்கூட்டியே திட்டமிட்டு ஜெயிக்கும் நம் மனஉறுதியைப் பொறுத்த விஷயம் அது. வாடகை, வட்டி, டிவிடெண்ட், பென்ஷன் போன்ற பல உருவங்களில் அது நமக்குத் தொடர்ந்து வருமானம் தந்துகொண்டே இருக்கும்.

இவ்வளவு அருமையான பேஸிவ் இன்கமைப் பெற நமக்குத் தேவையானது என்ன? பணம் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் அது தவறு. ஃபைனான்ஸில் பெரிய புலியாக இருக்க வேண்டும் என்பீர்கள் எனில், அதுவும் தவறு. பேஸிவ் இன்கம்மை உருவாக்க வேண்டும் என்ற மன உறுதியும், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, வங்கி டெபாசிட்டுகள் போன்றவை பற்றிய கள அறிவும் மட்டுமே பேசிவ் இன்கம்மை உருவாக்கும்.

நம் ஆக்டிவ் இன்கமில் இருந்து மட்டுமே பேசிவ் இன்கம் தரும் சொத்துக்களை உருவாக்க முடியும். ஆகவே, நம் ஆக்டிவ் இன்கம் நின்றுபோவதற்குள் பேசிவ் இன்கம் வரக்கூடிய வழிகளை நாம் திறந்து விட வேண்டும்.

Home (Representational Image)
Home (Representational Image)
Photo by Tierra Mallorca on Unsplash

பென்ஷன் தவிர்த்து, பேசிவ் இன்கம் வரக்கூடிய மற்ற வழிகள் என்னென்ன?

  1. ஃப்ளாட், வீடு, கடைகள், கிட்டங்கி போன்றவற்றில் இருந்து வரக்கூடிய வாடகை வருமானம் நிற்காமல் தொடர்வது மட்டுமன்றி, பணவீக்கத்துக்கேற்ப அதிகரிக்கவும் செய்யும். வெறும் நிலத்தைக்கூட தரை வாடகை தந்து எடுத்துக் கொள்ள விரும்புவோர் இருக்கிறார்கள். புதிதாக வந்திருக்கும் ஏர் பி.என்.பி நிறுவனம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் மட்டுமன்றி, எல்லா ஊர்களிலும் நாம் உபயோகப்படுத்தாமல் பூட்டி வைத்திருக்கும் வீடுகளை வாடகைக்கு விட்டு நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது.

2. நிலம் மட்டுமன்றி, கார்கள், ஃபர்னிச்சர்கள், உபகரணங்கள் போன்றவையும் வாடகை ஈட்டும். சிறு ஊர்களில் விசேஷ வீடுகளுக்கு பெரிய பாத்திரங்கள், ஜமுக்காளம் போன்றவற்றை வாடகைக்குத் தரும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

3. வங்கிகளில் வைப்பு நிதி வைத்து வட்டி வருமானத்தில் வாழ்வது காலங்காலமாகப் பழக்கத்தில் இருந்துவரும் ஒன்று. அரசு பாண்டுகள், பெரிய கம்பெனிகள் வெளியிடும் பாண்டுகள், போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆனியுட்டி ஸ்கீம்கள் போன்றவையும் பேசிவ் இன்கம் தருகின்றன.

Investment
Investment

4. நண்பர்களின் கம்பெனிகளில் ஸ்லீப்பிங் பார்ட்னராகச் சேர்ந்து கொள்ளலாம். இங்கு நாம் உழைக்க வேண்டாம்; நம் பணம் உழைக்கும்.

5. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற முதலீடுகளும் பேசிவ் இன்கம் தரும். அது பற்றி வரும் வாரங்களில் காணலாம்.

மேற்கண்ட வழிகளில் நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால், ஓய்வுக்காலம் நம்மை பயமுறுத்தாது.

- (மீண்டும் புதன் கிழமை சந்திப்போம்)

பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர். திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!