Published:Updated:

சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17

ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)

``வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்.

சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17

``வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்.

Published:Updated:
ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)

சென்ற கட்டுரையில் நாம் குடியிருக்க ஒரு வீடு ஒவ்வொருவருக்கும் அவசியம் என்று பார்த்தோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, குடியிருக்க ஒரு வீடு, வாடகை வருமானத்துக்கு ஒரு வீடு என்றிருந்தால் ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானம் பெறலாம் என்று நினைத்து, அடுத்தடுத்து வீடுகளை வாங்கி வருகிறார்கள்.

நாம் குடியிருக்கும் வீட்டைப் பேணுவதே வயதான காலத்தில் பெரும் பாரம். இதில் வாடகை வருமானத்துக்காக ஒரு வீட்டை வாங்கினால், அதில் குடியிருக்க அவ்வப்போது ஆள் தேடுவது, வாடகை வசூலிப்பது, சிறு சிறு ரிப்பேர்களைச் செய்து தருவது போன்ற செயல்கள் நம்மை மிகுந்த களைப்படையச் செய்யும். அதைவிட முக்கியமான விஷயம், வாடகை மூலம் கிடைக்கும் வருமானமானது 2 - 3% என்கிற அளவே இருக்கிறது.

Home (Representational Image)
Home (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனாலும், நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீது நம்பிக்கையும் பிரியமும் உள்ளவர் எனில், கடைகள், அலுவலகங்கள், கிட்டங்கிகள், இண்டஸ்ட்ரியல் ஷெட்டுகள் போன்ற வணிகச் சொத்துகளில் முதலீடு செய்யலாம். இவை இருக்கும் இடம், தரும் வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து 6 - 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிகச் சொத்துக்களை வாடகைக்கு எடுப்போர் பொதுவாக, உரிமையாளர்களுடன் நல்லுறவை மேற்கொள்வார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் தங்கள் கடை / அலுவலகம் இனிமையாகக் காட்சி தர வேண்டும் என்று விரும்புவதால், நம் சொத்தை நல்லபடியாகப் பராமரிக்கவும் செய்வார்கள். வீட்டின் மதிப்பைவிட வணிகச் சொத்துகளின் மதிப்பை எடை போட்டு வாங்குதல் எளிது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. இடம்:

வணிகச் சொத்து அமைந்திருக்கும் ஏரியா எல்லோரும் எளிதில் வந்து கடை போடுகிற மாதிரி, வணிக நிறுவனங்களை அமைக்கிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் பலரும் எளிதில் வருவார்கள்; வருவோரும் நிலைத்திருப்பார்கள்.

2. அதிகத் தரம்:

கட்டடமும் சுற்றுப்புறங்களும் அதிகத் தரம் வாய்ந்தவையாக இருந்தால், அதிக வாடகை வரும். மிகப் பெரிய கட்டடங்கள் எனில், லாபி, லிஃப்ட் போன்றவை நல்ல நீள, அகலத்துடன் இருந்து, கட்டடமும் எடுப்பாக இருந்தால், நல்ல வாடகை பெறலாம். இவற்றை விற்பதும் எளிது.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

3. நல்ல வாடகைதாரர்கள்:

வரும் வாடகைதாரர்கள் தரமானவர்களாக இருந்தால், 10 - 12 மாத வாடகை டெபாசிட்டாகக் கிடைக்கும்; மாத வாடகையும் சரியான நேரத்தில் கிடைக்கும். கட்டடத்தின் உள்ளலங்காரப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வாடகைதாரர்கள் அதிக காலம் நீடிப்பார்கள்.

``வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட். இது ஒரு புதிய முதலீட்டு வழி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாகச் செயல்படும் இது, ஏறக்குறைய ஒரு மியூச்சுவல் ஃபண்டுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் நாம் முதலீடு செய்யும் பணத்தை ஃபண்ட் மேனேஜர் மொத்தமாகச் சில பல கம்பெனி பங்குகளில் முதலீடு செய்கிறார். அதில் வரக்கூடிய டிவிடெண்ட், முதலீட்டு லாபம் போன்றவற்றை நம் முதலீட்டுக்கு தகுந்தாற்போல நமக்கு பிரித்துத் தருகிறார். ரெய்ட்டில் நாம் முதலீடு செய்யும் பணத்தை அந்த கம்பெனி பலவிதமான கமர்ஷியல் ரியல் எஸ்டேட் சொத்துகளில் - ஹாஸ்பிடல்கள், ஆபீஸ் காம்ப்ளெக்ஸ், 5 ஸ்டார் ஹோட்டல், மால் போன்ற சொத்துகளில் - முதலீடு செய்கிறது. வரக்கூடிய வாடகை வருமானத்தில் செலவுகள் போக மீதி இருக்கும் பணத்தில் 90% அளவு நமக்கு அந்த கம்பெனி கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதனால் ஒரு நிலையான வருமானம் நமக்குக் கிடைக்கும். மேலும், இந்த ஷேர்கள் சந்தையில் லிஸ்ட் ஆகின்றன. ஷேர் விலை ஏறினால் அதிலும் நமக்கு லாபம் வர வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)
ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)

இந்தப் புதிய முதலீட்டு வழியால் நம் போன்ற சிறு முதலீட்டாளர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே, கம்ப்யூட்டரை க்ளிக் செய்து ஒரு பெரிய மாலில்கூட நாம் விரும்பும் கடையில் முதலீடு செய்ய முடியும்.

பொதுவாக, வணிகச் சொத்துகள் நாம் நெருங்கவே முடியாதபடி விலை உயர்ந்ததாக இருக்கும். ரெய்ட் திட்டத்தின் புண்ணியத்தில் வெறும் ரூ.10,000 முதலீட்டில்கூட வணிகச் சொத்தில் உரிமை பெறலாம். எம்பஸி ஆபீஸ் பார்க், மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் போன்ற கம்பெனிகள் இந்தத் துறையில் நன்கு செயல்படுகின்றன. கோவிட் முடிந்து மக்கள் ஆபீஸ் திரும்பும்போது ரெய்ட் இன்னும் அதிகமாகப் பேசப்படும்.

(மீண்டும் திங்கள் காலை 9 மணிக்கு சந்திப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism