Published:Updated:

காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கும் புவனகிரி பட்டுச் சேலைக்கும் என்ன வித்தியாசம்?

பட்டு நெய்து, விற்பனை செய்துவரும் ராஜ்குமார், மகேந்திரன்.

''புவனகிரில 13 கடைக்கு நாங்க பட்டுச் சேலைகள் கொடுத்துட்டு இருக்கோம். நம்மிடம் பட்டின் ஆரம்ப விலை பார்த்தீங்கனா, ரூ3,500-லிருந்து ரூ.3 லட்சத்திற்குமேல்...''

காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கும் புவனகிரி பட்டுச் சேலைக்கும் என்ன வித்தியாசம்?

''புவனகிரில 13 கடைக்கு நாங்க பட்டுச் சேலைகள் கொடுத்துட்டு இருக்கோம். நம்மிடம் பட்டின் ஆரம்ப விலை பார்த்தீங்கனா, ரூ3,500-லிருந்து ரூ.3 லட்சத்திற்குமேல்...''

Published:Updated:
பட்டு நெய்து, விற்பனை செய்துவரும் ராஜ்குமார், மகேந்திரன்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றுப் படுகையில் அமைந்துள்ள இடமாகவும், ராகவேந்திரர் அவதரித்த தலமாகவும் கருதப்படும் புவனகிரியில்தான் பல தலைமுறைகளுக்குமுன் தொடங்கப்பட்ட கைத்தறிப் பட்டு இன்றுவரை நெய்யப்பட்டு வருகிறது. மக்கள் விரும்பும் முக்கியமான பட்டு உற்பத்திக் கேந்திரமாகத் திகழும் புவனகிரி இருந்தாலும், காஞ்சிபுரம் அளவுக்கோ அல்லது கும்பகோணம் அளவுக்கோ அதிகம் தெரியவில்லை. எனவே, அந்த ஊருக்கு நாம் ஒரு விசிட் செய்தோம்.

புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி
புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி

கடலூர் மாவட்டத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புவனகிரி பேரூராட்சி. இப்பேரூராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டு ஸ்தாபனங்களுக்கு மத்தியில் இரண்டு தலைமுறையாக பட்டு நெய்து, உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் ராஜ்குமார் மற்றும் மகேந்திரனை விற்பனை நிலையத்தில் (showroom) சந்தித்தோம்.

‘‘13 வயதிலேயே நெசவுத் தொழிலைக் கற்றுக்கொண்டேன்”...

புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் 32 வயதுடைய ராஜ்குமார் நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார். “எங்களின் பூர்வீகம் கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் உள்ள உட்கோட்டை. இரண்டு தலைமுறைகளாகவே பட்டுச் சேலை உற்பத்தி செய்துவர்றோம். நான் படிச்சது பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். 13 வயசுல இருந்தே அப்பாகூட சேர்ந்து நெசவுத் தொழில் கற்றுக்கொண்டு, அவருக்கு உறுதுணையாய் இருந்தேன். இப்ப முழுமையா இறங்கி ஏழு வருடங்கள் ஆச்சு.

புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி
புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி

நெசவுத் தொழிலின் மீது உள்ள ஆர்வம் காரணமாகவே நான் இன்ஜினியரிங் படித்துகூட, நெசவுத் தொழில என்ன மாதிரி டிசைன்லாம் பண்ணலாம் அப்படின்னு அதுல இருக்க ஈர்ப்புதான் முழுமையா நெசவுத்தொழில்ல என்ன ஈடுபட வைச்சது. நாங்க பட்டுச் சேலை உற்பத்தி பண்ற இடம்வந்து பூர்வீகமான கங்கைகொண்ட சோழபுரத்தில்தான். உற்பத்தி பண்ண புடவைகள், கைத்தறிப் பட்டு, வேஷ்டிகளைப் புவனகிரியில் எடுத்துட்டு வந்து ஷோரூம்ல விற்பனை செய்றோம். மேலும் மிகப் பெரிய ஜவுளி மாளிகையான திருபுவனம் மற்றும் திருச்சிக்கும் மொத்தமாக பட்டுச் சேலைகளை கொடுக்கிறோம்.

புவனகிரில 13 கடைக்கு நாங்க பட்டுச் சேலைகள் கொடுத்துட்டு இருக்கோம். நம்மிடம் பட்டின் ஆரம்ப விலை பார்த்தீங்கனா, ரூ3,500-லிருந்து ரூ.3 லட்சத்திற்குமேல்... ரூ.3500-க்குக்கீழ் ஒருத்தங்க பட்டு விற்பனை செய்றாங்கனா, அது பட்டு கிடையாது.

புவனகிரியில் ஒரு பட்டுச் சேலை உருவாக ஆகும் நிகர செலவு, பாகு - ரூ.7,500, பட்டு- ரூ.9,000, நெய்தலுக்கான கூலி - ரூ,7500, ஜரிகை - ரூ.2,500 என மொத்தம் ரூ. 26,500.

நேரடியா வாங்கினால் லாபம்...

ஜரிகையின் தரம் பொறுத்து அந்த ஜரிகை பயன்படுத்தப்படும் விலை மாறுபடும். ஒரு பாகிற்கு எட்டு சேலைகள் நெய்யப்படும் வீதம், ஒரு பட்டுச் சேலைக்கு ரூ.3,250 உற்பத்திச் செலவாகும். நாங்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் ரூ.250 லாபம் வைத்து ரூ.3,500-க்கு விற்பனை செய்கிறோம். ஆனால் அதை ஷோரூம்க்கு வெளியில் கொடுக்கும்போது அதே ரூ.3,500 உள்ள பட்டுச் சேலையை ரூ.6,000 -ரூ.7,000 வரை விற்பனை செய்வார்கள்.

புவனகிரி பட்டுச் சேலை
புவனகிரி பட்டுச் சேலை

நாங்கள் புதிய டிசைன்ல ஒரு சேலையைத் தயார் செய்து ஷோரூம்ல கொடுக்கிறப்ப, 5-6 மாதம் கழித்துத்தான் மக்களுக்கு அவங்க கொடுப்பார்கள். பழைய ஸ்டாக்லாம் தள்ளிவிட்டு அதுக்கப்புறம்தான் அந்த சேலையைக் கடையில விற்பனை செய்ய ஆரம்பிப்பார்கள். கிட்டத்தட்ட கையில் வந்துசேர்வதற்கு ஒரு வருஷம் ஆயிடும். ஆனா, எங்ககிட்ட வந்து உற்பத்தி பண்ற இடத்துல வாங்கும்போது, 5 வருட உத்திரவாதத்துடன் (warranty), புது கலக்க்ஷனில் அவ்வப்போது கொடுக்குறோம். அது மட்டும் தேவை இல்லாமல் அதிக பணத்தை எடுத்துட்டு போய் வெளியே இருக்க ஷோரூமில் கொடுக்குறதுக்கு, உற்பத்தியாளர்கள் கிட்ட தரமான சேலையை நல்ல விலைக்கு எடுத்துட்டு போகலாம்” என்றார்.

ஒரிஜினல் பட்டுச்சேலை எப்படி இருக்கும்?

அடுத்து, கைத்தறிப் பட்டு உற்பத்தி செய்யும் மகேந்திரன் என்பவருடன் பேசினோம். மூன்று பரம்பரையாக நெசவுத் தொழில் செய்து வருகிறார் இவர்.

‘‘ஒரிஜினல் கைத்தறிப் பட்டுச் சேலைக்கும் இயந்திரங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுச் சேலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சில அற்புதமான டிசைன்களை கைகளினால் நெய்யப்படும் பட்டுச் சேலையில் மட்டுமே இருக்கும். ரூ.3,000கீழ் உள்ள ஒரு சேலையை பட்டு எனக் கூறினால் அது பட்டு அல்ல. அது பாலிஸ்டர் கலந்தது.

புவனகிரி பட்டுச் சேலை
புவனகிரி பட்டுச் சேலை

ஒரிஜினல் பட்டை நெருப்பில் போட்டால் அது சாம்பலாகிவிடும். மற்ற ரக சேலையை நெருப்பில் போட்டால் அது பாலித்தீன் கவர் போல் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையதாக திரவத்தைப் போல் ரசாயனம் கலந்ததாக உருமாறும். கைத்தறிப் பட்டை நாம் உடுத்தும்போது எரிச்சல் உருவாகாது. எல்லாக் காலத்திற்கும் ஏற்றது. எவ்வளவு வேர்வை ஆனாலும் அதை உறிந்து கொள்ளும் தன்மை பட்டிற்கு உண்டு.

காஞ்சிபுரம் பட்டிற்கும் புவனகிரி பட்டிற்கும் என்ன வித்தியாசம்னு சொல்றேன்... காஞ்சிபுரம் பட்டுடைய பார்டர் வந்து 13- 15 இன்ச் இருக்கும். புவனகிரி பட்டில் 2-9 இன்ச் வரைதான் இருக்கும். குறைந்தபட்சம் 2 இன்ச். புடவையோட விசிறி மடிப்புதான் இங்க மிகவும் பிரபலம். இந்த விசிறி மடிப்பு புவனகிரியில் இருந்தான் காஞ்சிபுரத்திற்கு சென்றதாக முன்னோர்கள் கூறுவார்கள். கைத்தறியில் போர்வை போட்டு நெய்தலும் இங்கு பிரபலம்.

400-லிருந்து 20-ஆகக் குறைந்த கைத்தறிக் குடும்பங்கள்...

பட்டு, ஜரிகை வெவ்வேறு. 48 இன்ச் இருப்பது பட்டு. ஐந்தரை மீட்டர் இருப்பது பாகு. பட்டு, பாகு, ஜரிகையை வைத்து ஒரு பட்டு சேலையை உருவாக்குகிறோம். முதலில் பாகு நீட்டி, வெயிலில் காயவைத்து உருளையில் சுற்ற வேண்டும். உருளையில் சுற்ற குறைந்தபட்சம் ஐந்து பேர் தேவைப்படும். பாகின் முன்னுள்ள நூலிற்கும் பின்னுள்ள நூலிற்கும் இணைப்பு ஏற்படுத்தி, பட்டு மற்றும் ஜரிகையை சேர்த்து பட்டுச் சேலை நெய்யப்படும். இப்படி ஒரு குடும்பமே வேலை செய்வதில்தான் ஒரு பட்டுச் சேலை உருவாகிறது.

புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி
புவனகிரியில் பட்டுச் சேலை உற்பத்தி

சாதாரண டிசைன் உள்ள ஒரு சேலை நெய்ய நான்கு நாள் ஆகும். ஒரு நாளைக்கு ஒன்றரை முழம் நெய்தாலே பெரிய விஷயம்.

சம்பூரி பட்டு - வெள்ளி ஜரிகை (ரூ.12,000 குறைந்தபட்சம்), இது முதல் ரகம். கச்சப்பட்டு - (ரூ.5,000 குறைந்தபட்சம்) இரண்டாம் ரகம். 2006-ல் 400 கைத்தறிக் குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் 2022 தற்போது 20 கைத்தறிக் குடும்பங்களே உள்ளன. இதற்குக் காரணம், பட்டு, ஜரிகை, பாகு, கூலி இவற்றின் விலை கடுமையாக உயர்ந்ததே. 2006-ல் 1 கிராம் பட்டின் விலை ரூ.1.50. 2022-ல் 1 கிராம் பட்டு ரூ.9’’ என்று பேசி முடித்தார்.

அடுத்த முறை பட்டுச் சேலை வாங்கும்போது புவனகிரி பட்டுச் சேலை ஒருமுறை பாருங்களேன்!