Published:Updated:

இந்தியா ரூபாய் மதிப்பு வீழ்ந்திருக்கிறதா இல்லையா? உண்மை என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, வர்த்தக ரீதியான விஷயங்களே நாணயத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன. சர்வதேச வர்த்தகத்துக்கு பொதுவான நாணயமாக டாலர் இருப்பதால் டாலருடன் ரூபாயின் மதிப்பு ஒப்பிடப்படுகிறது.

இந்தியா ரூபாய் மதிப்பு வீழ்ந்திருக்கிறதா இல்லையா? உண்மை என்ன?

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, வர்த்தக ரீதியான விஷயங்களே நாணயத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன. சர்வதேச வர்த்தகத்துக்கு பொதுவான நாணயமாக டாலர் இருப்பதால் டாலருடன் ரூபாயின் மதிப்பு ஒப்பிடப்படுகிறது.

Published:Updated:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சமீபத்தில் டாலர் - ரூபாய் மதிப்பு ஒப்பீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 'ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை, டாலர் மதிப்புதான் உயர்ந்திருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார். அவருடைய இந்தக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் உட்பட பலர் அவருடைய கருத்தைக் கிண்டல் செய்துள்ளனர். உண்மையில் டாலர் - ரூபாய் மதிப்பு விஷயத்தில் என்னதான் நடக்கிறது.

பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை நிபுணரும் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவருமான வ.நாகப்பனிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு!

``டாலர்-ரூபாய் மதிப்பு ஓப்பீடு குறித்து நிதியமைச்சர் கூறியது கேலிக்குரியதாக மாறியிருக்கிறது. `நாம் தோற்கவில்லை, எதிரணி ஜெயித்துவிட்டது' போன்ற கமென்டுகளைப் பலர் கூறி விமர்சித்து வருகின்றனர். டாலர் - ரூபாய் ஒப்பீடு விஷயத்தில் உண்மை என்ன என்பதை சில உதாரணங்களை வைத்து புரிந்துகொள்ளலாம்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது நேற்று இருந்ததை விடவும் இன்று 10 டாலர் உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பது மற்றும் டாலரின் மதிப்பு குறைந்திருப்பது ஆகிய காரணங்களால்தான் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்திருக்கும் அதேசமயம், இங்கிலாந்தின் பவுன்ட் ஸ்டெர்லிங் நாணயத்துக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அதனால் பவுண்டைவிட ரூபாய் வலுவானது என்றோ, இந்தியா வல்லரசாகிவிட்டது என்றோ கூறிவிட முடியாது அல்லவா?

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்
Pixabay

அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் கடந்த 2021 அக்டோபர் 18-ம் தேதி 93.95 ஆக இருந்தது. இன்று 111.85 ஆக இருக்கிறது. ஓராண்டில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் என்பது உலகின் முன்னணி வலுவான 6 நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது அந்த 6 வலுவான நாணயங்களே அமெரிக்கா டாலருக்கு நிகராக 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது எனில், வலுவான நாணயங்கள் பட்டியலில் இல்லாத ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்குமா?

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, வர்த்தக ரீதியான விஷயங்களே நாணயத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன. சர்வதேச வர்த்தகத்துக்கு பொதுவான நாணயமாக டாலர் இருப்பதால் டாலருடன் ரூபாயின் மதிப்பு ஒப்பிடப்படுகிறது. மற்றபடி ரூபாய் மதிப்பு இந்திய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக சூழலைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகக் கூடியதாகவே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது டாலர் வலுவடைவதை தனித்த விஷயமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.

டாலர் மதிப்பு உயர்வது நிச்சயம் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இந்திய ரூபாயிலும் பிரதிபலிக்கும். ஆனால், டாலருக்கு நிகரான மதிப்பு குறைவு என்பது மற்ற நாடுகளின் நாணயங்களைவிட அதிகமாக இருக்கிறதா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும். எனவேதான், 'மற்ற நாணயங்களோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் சீராக இருக்கிறது' என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். மேலும், 'மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி) சிறப்பாக இருக்கும்' என்றும், '6.5 சதவிகித வளர்ச்சி இருக்கும்' என்றும் உலக வங்கி கூறியுள்ளது. இவை அனைத்துமே புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் தெரிவிக்கப்படுகின்றன

பொது மக்களுக்கு என்ன பாதிப்பு

இந்திய ரூபாய் வீழ்ச்சியின் நேரடி பாதிப்பு எவை என்பதைப் பார்ப்போம். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விச் செலவு கணிசமாக உயரும். இந்தியா அதன் தேவையைப் பூர்த்தி செய்வதில் இறக்குமதியைப் பெரிதும் நம்பி இருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

தற்போது கச்சா எண்ணெய், எரிவாயு, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதிக்கு அதிக ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சரக்கு லாரிகளின் கட்டணம் உயரும். இதனால் காய்கறி உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். மின்னணு மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் மொபைல்போன், லேப்டாப் உட்பட மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களின் விலை  அதிகரிக்கச் செய்யும்.

மொத்தத்தில் டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதையும், ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதையும் தனித்தனியாகத்தான் பார்க்கவேண்டும். குறிப்பாக, ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதற்கு உள்நாட்டிலும் பல்வேறு காரணிகள் உள்ளன'' என்றார் நாகப்பன்.