Published:Updated:

இன்றைய இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக ஆக என்ன செய்ய வேண்டும்? - ஜீரோதா நிதின் காமத் தரும் சூப்பர் டிப்ஸ்

ஜீரோதா நிதின் காமத்

சிறுவயதிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு என்னும் பழக்கத்தை ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் அதைக் கடைப்பிடித்து வெற்றி அடைவது சுலபம்... நிதிச் சுதந்திரம் என்பது உங்கள் திறமையை வளர்த்தெடுப்பதே தவிர, பணத்தின் பின்னாள் அலைவதல்ல.

இன்றைய இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக ஆக என்ன செய்ய வேண்டும்? - ஜீரோதா நிதின் காமத் தரும் சூப்பர் டிப்ஸ்

சிறுவயதிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு என்னும் பழக்கத்தை ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் அதைக் கடைப்பிடித்து வெற்றி அடைவது சுலபம்... நிதிச் சுதந்திரம் என்பது உங்கள் திறமையை வளர்த்தெடுப்பதே தவிர, பணத்தின் பின்னாள் அலைவதல்ல.

Published:Updated:
ஜீரோதா நிதின் காமத்

இந்தியாவில் மிகவும் பிரபலமான பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜீரோதாவின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நிதின் காமத் இன்றைய இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக ஆக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சூப்பர் டிப்ஸ்களை அளித்திருக்கிறார். ``நிதிச் சுதந்திரம் அடைவது என்பது ஒரு திறமை. அந்தத் திறமையை நமது வாழ்நாள் முழுவதும் மெதுவாக அப்டேட் செய்துகொண்டே இருந்தால்தான் அதில் வெற்றி அடையலாம்’’ என்று சொல்லி இருக்கிறார் நிதின்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

இது தொடர்பாக அவர் சொல்லி இருப்பது...

``எனது வீட்டுக்குப் பக்கத்தில் மார்வாடி குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் பழகியபோது பணம் பற்றி வித்தியாசமான புரிதலை எனக்குத் தந்தது.

மேலும், என் தந்தை ஒரு வங்கியில் பணிபுரிந்தார். பங்குச் சந்தையில் பிரபலமான நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடும்போது முதலீடு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். என் தந்தை ஒரு தீவிர முதலீட்டாளராக இல்லாவிட்டாலும் அவர் தனது முதலீடுகளைப் பற்றி வீட்டில் தொடர்ச்சியாகப் பேசி வருவாராம். பங்குகள் பற்றிய தன் தந்தையாரின் உரையாடல்கள் காமத்வின் முதலீடு மற்றும் வர்த்தகப் பயணத்துக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

நான் முதன்முதலில் 17 வயதில் பங்குச் சந்தையில் தீவிரமாக முதலீடு செய்யத் தொடங்கினேன். எனக்கு 21 வயதாகும்போது சற்று லாபம் கொடுத்த பங்குகள், 2001-ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப வீழ்ச்சியில் (dotcom bubble) தனது பணம் மொத்தத்தையும் இழந்தேன். பிறகு, மார்க்கெட்டின் நுட்பங்களை அறிந்து வெற்றி பெற்று தற்போது இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறேன்’’ என்று சொல்லும் நிதின், இன்றைய இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக மாறுவதற்கு சொல்லும் 5 அற்புதமான டிப்ஸ்கள் இதோ...

1. பாக்கெட் மணியில் சேமிக்கத் தொடங்குங்கள்..!

இளமைப் பருவத்தை நன்றாக அனுபவித்து வாழ்வது முக்கியம்தான். ஆனால், பாக்கெட் பணத்தில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் முதலீடு என்னும் பழக்கம் ஆரம்பம் ஆகும். சிறுவயதிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு என்னும் பழக்கத்தை ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் அதைக் கடைப்பிடித்து வெற்றி அடைவது சுலபம்.

சேமிப்பு டு முதலீடு...
சேமிப்பு டு முதலீடு...

சிறுவயதில் பணவீக்கத்தை முறியடிக்க பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கும்போது அதேசமயம் நமது திறன்களிலும் முதலீடு செய்வது முக்கியம். சிறுவயதில்தான் புதிய திறன்களைக் கற்க இயலும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட அதிக முக்கியத்துவம் உங்கள் திறனின் மேல் முதலீடு செய்யுங்கள் என்கிறார். 18 வயது அடைந்து குழந்தை என்ற நிலை கடந்து வங்கிக் கணக்கு ஆரம்பித்தவுடன், வங்கியில் உங்கள் பணத்தை தூங்க விடாதீர்கள் முதலீடு செய்து பணத்தை வளரச் செய்யுங்கள்.

2. அனுபவங்களில் முதலீடு செய்யுங்கள்; பொருள்களில் அல்ல!

இளமையாக இருக்கும்போது அனுபவங்களில் முதலீடு செய்வது முக்கியம். உதாரணத்துக்கு கிரிக்கெட் பிடித்திருந்தால் கிரிக்கெட் மேட்ச் நம்மூரில் நடந்தால் அதைப் பார்க்க டிக்கெட் வாங்குவதில் முதலீடு செய்யலாம். ஆனால், கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஆடம்பரத்துக்காக விலை உயர்ந்த போன்களையோ, பைக்குகளையோ வாங்கத் தேவையில்லை. இதனால் உங்கள் பணம் பெருகாது.

கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி

3. இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்!

இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். சிறுவயது முதலே சிறிய அளவிலான பணத்தை இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்தால், இளைஞர்களிடம் நிதி ஒழுங்கு என்பது தானாக உருவாகும். இண்டெக்ஸ் சந்தையில் முதலீடு தொடங்கிய பின்பு, அதைத் தொடர்ந்து கவனித்து வந்தால், பங்குச் சந்தை பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன்மூலம் நீண்ட காலத்தில் கணிசமான செல்வத்தைச் சேர்க்க முடியும். இண்டெக்ஸ் ஃபண்டுகள் தரும் லாபத்தைவிட அதிகமான லாபத்தை பல ஃபண்ட் மேனேஜர்களால் தரமுடிவதில்லை என்பது முக்கியமான விஷயம்.

இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்ட பின்பு, பங்குச் சந்தையில் நேரடியாக பங்குகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கலாம்!

4. கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்!

இளைஞர்கள் ஆரம்ப காலம் தொட்டு முதலீடு செய்ய வேண்டும் என்பது முக்கியம் என்றாலும், ஒருபோதும் கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது! `நான் எனது 21 வயதில் கடன் வாங்கி முதலீடு செய்தபோது, நஷ்டம் அடைந்தேன். அந்த நஷ்டத்தில் இருந்து மீள பெரும் பாடுபட்டேன். பல ஆண்டுகள் போராடி அந்தக் கடனை அடைத்தேன். அந்தச் சிறு வயதிலேயே கடன் வாங்கி திரும்பச் செலுத்தியது அவருக்கு பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அப்போதிருந்து நான் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை.

கடன்
கடன்

5. திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்!

திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனில், உங்களிடம் புதிதாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். பலரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்களே ஒழிய, அதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள நினைப்பதில்லை. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்பதில் மட்டும் கவனத்தைக் குவிக்காதீர்கள். உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள். பணத்தை சம்பாதிப் பதற்கான திறமையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒன்றில் நீங்கள் திறமைசாலியாக இருந்தால், பணம் உங்களைத் தேடிவரும். நிதிச் சுதந்திரம் என்பது உங்கள் திறமையை வளர்த்தெடுப்பதே தவிர, பணத்தின் பின்னாள் அலைவதல்ல.