Published:Updated:

சிஏ தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

Chartered Accountant

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பட்டய கணக்காளர்களாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் அனைத்திந்திய ரேங்க் ஹோல்டராக தமிழகத்தைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சிஏ தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பட்டய கணக்காளர்களாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் அனைத்திந்திய ரேங்க் ஹோல்டராக தமிழகத்தைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

Published:Updated:
Chartered Accountant

பட்டைய கணக்காளர்களுக்கான (Chartered Accountant)  தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை என ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.

Chartered Accountant
Chartered Accountant

நமது நாட்டில் நடைபெறும் தேர்வுகளில் மிகவும் கஷ்டமான தேர்வுகளில் ஒன்றாக இந்தத் தேர்வுகள் மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பட்டய கணக்காளர்களாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் அனைத்திந்திய ரேங்க் ஹோல்டராக தமிழகத்தைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

வட மாநில மாணவர்கள் முன்னிலை..!

அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே இந்த முறையும் இந்தத் தேர்வுகளில் அதிக தேர்ச்சியை அடைந்துள்ளனர். இதற்கு  தமிழக மாணவர்களிடையே இந்த படிப்பிற்கான போதிய விழிப்புணர்ச்சி இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் தமிழக மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் படிப்பதும் இந்த படிப்பு படித்த மாணவர்களே சமுதாயத்தில் வெற்றி பெற முடியும் என்று பெரும்பாலானவர்களின் எண்ணமுமே பிற துறை சார்ந்த படிப்புகளில் தமிழக மாணவர்களை பின் தங்கச் செய்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்க்கை காரணமாக பொறியியல் படிப்பிற்கு வேலை கிடைப்பது தற்போது சிரமமாக உள்ளது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் மிக நீண்ட காலம் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தத் துறைகளில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களை காட்டிலும் பட்டைய கணக்காளராக தேர்ச்சி பெற்றால் அதிக ஊதியம் ஈட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த படிப்புகள் பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் தமிழக மாணவர்கள் இந்தப் படிப்புகளை தேர்ந்தெடுப்பதில்லை.

பட்டைய கணக்காளராக ஆவது எப்படி?

பட்டைய கணக்காளராக தேர்ச்சி அடைவதற்கு நான்கு படிநிலைகளை ஒருவர் கடக்க வேண்டும். இதனை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் குறைந்தபட்சம் நாலரை ஆண்டுகளை கடந்து பட்டைய கணக்காளராக தேர்ச்சி அடைய முடியும்.

சிஏ தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

முதல் படிநிலை -  சிஏ பவுண்டேஷன் தேர்வுகள்

பன்னிரண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் இந்திய பட்டய கணக்கறிஞர்கள் கழகம் நடத்தும் சிஏ பவுண்டேஷன் என்ற தேர்வினை எழுத வேண்டும். பன்னிரண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆறு மாதங்களில் இந்தத் தேர்வினை எழுதலாம்.

இதில், கணக்கு, அக்கவுண்டன்சி, சட்டம், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இதில் இரண்டு தேர்வுகள் திறன் சோதனை (Aptitude Test) வகையிலும் இரண்டு தேர்வுகள் எழுத்து தேர்வு வகையிலும் இருக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளுக்கு தகுதி பெறுவர். சிஏ பவுண்டேஷன் தேர்வுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக சிஏ பவுண்டேஷன் தேர்வுகளில் 25% மாணவர்கள் தேர்ச்சி அடைகின்றனர்.

இந்தத் தேர்வினில் ஒருவர் தோல்விய அடைந்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எத்தனை தடவை வேண்டுமானாலும் மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி அடையலாம்.

இரண்டாவது படிநிலை - சி ஏ இன்டர்மீடியட்

இந்தத் தேர்விற்கு இரண்டு வகைகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதலாவது படி நிலையான சிஏ பவுண்டேஷன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். பிகாம், பிஎஸ்சி என்று குறைந்தபட்சம் மூன்று ஆண்டு பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் எழுதாமல் நேரடியாக சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளை எழுதலாம். இந்தப் படிப்பிற்கான காலமாக ஒன்பது மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான்கு பகுதிகள் கொண்ட இரண்டு குரூப்புகளாக இந்தத் தேர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிஏ தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், வரி, சட்டம் போன்ற முக்கிய பாடங்களை இந்தத் தேர்வில் படிக்க வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டுமென்றால் ஒரு குரூப்பில் உள்ள நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இந்த நான்கு பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 200-க்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த குரூப்பில் ஒருவர் தேர்ச்சி அடைய முடியும்.

நான்கு பாடங்களில் ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்றாலும், நான்கு பாடங்களில் தனித் தனியாக 40 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தும் மொத்த கூட்டுத்தொகை இருநூறுக்கு கீழ் வந்தாலும் அந்த நான்கு பாடங்களிலும் தேர்ச்சி அடையவில்லை என்று கருதப்படும். உதாரணத்திற்கு மாணவர் ஒருவர் குரூப் ஏ வில் உள்ள நான்கு பாடங்களில் 55,58,52,38 என்று எடுத்து இருந்தால் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் ஒரு தேர்வில் தோல்வியடைந்ததால் நான்கு பாடங்களையும் மறுதேர்வு எழுத வேண்டும்.

இந்த விதிமுறையே இந்த தேர்வினை மிகவும் கஷ்டமான தேர்வாக மாற்றுகிறது. ஆனால் இந்த நான்கு பாடங்களில் எந்த பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தாலும் அந்த தேர்வு மட்டும் தேர்ச்சி அடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு மட்டும் மறுதேர்வு எழுத வேண்டாம். ஒரு உதாரணத்திற்கு மாணவர் ஒருவர் 55,60,52,38 என்று எடுத்திருந்தால் மூன்று பாடங்களில் மட்டும் மறுதேர்வு எழுத வேண்டும். ஒரு தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்து விட்டபடியால் அந்த தேர்வை மீண்டும் எழுத வேண்டாம்.

இவ்வாறு இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடையும் ஒருவர் சிஏ ஃபைனல் தேர்வுக்கு தேர்ச்சி அடைவார். சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மூன்றாவது படிநிலை - பயிற்சி ஆடிட்டர்

சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளில் இரண்டு குரூப்புகளில் ஒரு குரூப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பயிற்சி ஆடிட்டர்களாக மூன்று ஆண்டுகள் ஆடிட்டிங் கம்பெனியில் பணிபுரிய வேண்டும். இந்த காலகட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் மாணவர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் பன்னிரண்டாவது படித்த மாணவர்கள் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே ஊதியம் ஈட்ட தொடங்கி விடுவார்கள்.

படிப்பு
படிப்பு

நான்காவது படிநிலை - சிஏ பைனல் தேர்வுகள்:

மூன்று ஆண்டுகள் பயிற்சி படிப்பு மற்றும் சிஏ இன்டர்மீடியட்டில் இரண்டு குரூப்புகளிலும் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் சிஏ பைனல் தேர்வுகளை எழுதலாம். இந்தத் தேர்வுகளும் எட்டு பாடங்கள் கொண்ட இரண்டு குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடையும் மாணவர்கள் பட்டய கணக்காளராக தேர்ச்சி பெறுவார்கள்.

இந்தப் படிப்பில் உள்ள ரிஸ்க் என்ன?

இந்தத் தேர்வுகளை 100 மாணவர்கள் எழுதினால் பட்டைய கணக்காளராக 15 முதல் 20 மாணவர்களே சராசரியாக தேர்ச்சி அடைகின்றனர். நமது நாட்டில் நடத்தப்படும் தேர்வுகளில் மிகச் சிரமமான தேர்வாக பட்டயக் கணக்காளர் தேர்வு இருக்கிறது. அதனால் இந்த தேர்வுகளில் தேர்வு அடைவதற்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும். சி ஏ இன்டர்மீடியட் படிப்புகளுக்கான பாடங்கள் 10,000  பக்கங்கள் வரையிலும் சிஏ பைனல் படிப்புகளுக்கான பாடங்கள் 16,000 பக்கங்கள் வரையிலும் கொண்டதாக இருப்பதால் அதிக மணி நேரம் படித்தால் மட்டுமே இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைய முடியும்.

இந்தப் படிப்பினால் பெரும் நன்மைகள்

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை நமது நாட்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் ஜி எஸ் டி வரவிற்கு  பிறகு பட்டைய கணக்காளர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. சிறு கடைகளில் இருந்து மிகப் பெரிய நிறுவனங்கள் வரை ஆடிட்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் பெரு நிறுவனங்களில் ஆடிட்டர் படிப்பு படித்தவர்களுக்கு கூடுதல் ஊதியத்துடன் வேலை சுலபமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதனால் மிகவும் கடினமான சிஏ தேர்வுகளில் ஒருவர் தேர்ச்சி அடையும் பொழுது ஒருவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய அதிக வாய்ப்புள்ளது. என்றாலும் இந்த தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் பி.காம் போன்ற படிப்புகளை பகுதி நேரமாக ஒருவர் தேர்ந்தெடுத்து படிப்பது ஏதோ ஒரு காரணத்தினால் இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போகும் நேரத்தில் பயனளிக்கும்.

பட்டைய கணக்காளர்கள் மட்டுமன்றி காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட் (CMA), கம்பெனி செகரட்டரிஷிப் (CS) போன்ற பிற படிப்புகளையும் இது போல ஒருவர் எழுதலாம். இதுபோன்ற படிப்புகளுக்கும் அதிக டிமாண்ட் உள்ளது. இது போன்ற தேர்வுகளில் வரும் காலத்தில் தமிழக மாணவர்களும் அதிக அளவில் தேர்ச்சி அடைய இந்த படிப்பு பற்றிய விழிப்புணர்வை தமிழக மாணவர்களிடம் அதிக அளவு ஏற்படுத்த வேண்டும். இதனை பள்ளிக் கல்வித் தறை சார்பாக தமிழக அரசு செய்யும் பட்சத்தில் கூடுதல் மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.