Published:Updated:

எக்ஸ்ட்ரா திருப்திக்கு என்ன வழி? மாத்தி யோசி கதைகள் - 4

தினம் ஒரு ஜூஸ்!

ஒருமுறை ஹாஸ்பிடாலிட்டி பற்றி நன்கு அறிந்த பெண்மணி ஒருவர் தன் தோழிகளோடு கடைக்கு வந்திருந்தார். கடையில் கிடைத்த நல்ல சேவை அவரைக் கவர்ந்தது. போகும் போது பரத்திடம் ஒரு யோசனைச் சொன்னார்.

எக்ஸ்ட்ரா திருப்திக்கு என்ன வழி? மாத்தி யோசி கதைகள் - 4

ஒருமுறை ஹாஸ்பிடாலிட்டி பற்றி நன்கு அறிந்த பெண்மணி ஒருவர் தன் தோழிகளோடு கடைக்கு வந்திருந்தார். கடையில் கிடைத்த நல்ல சேவை அவரைக் கவர்ந்தது. போகும் போது பரத்திடம் ஒரு யோசனைச் சொன்னார்.

Published:Updated:
தினம் ஒரு ஜூஸ்!

ஜமா ஜூஸ் பாயின்ட். ஆனால் எல்லா உதடுகளும் சுருக்கமாக உச்சரிப்பது JJ. நல்வாய்ப்பாக, இந்தக் கடை, ஒரு கல்லூரிக்கும் தியேட்டருக்கும் அருகே இருந்தது. அதனால் மாலை 5 மணி வரை மாணவர் கூட்டம். அதன்பின் தியேட்டருக்கு வருபவர்களின் வருகை.

“ஜமா” – இளவட்டங்களில் சொல்லாடல். நாம் எல்லோருமே வாலிப வயதைக் கடந்துதானே வருகிறோம். அதனால் கடையின் பெயர் மக்களின் மனதில் “பசக்”கென்று பதிந்தது.

ஜூஸ் வகைகள்
ஜூஸ் வகைகள்

உரிமையாளர் பரத் முப்பது வயதை அடையக் காத்திருக்கும் நபர். ஜீன்ஸ் + நவநாகரீக டீ ஷர்ட். அவரது வயதும் தோற்றமுமே ஒரு பிளஸ் பாயின்ட். இளைஞர்களும் சரி, குடும்பஸ்தர்களும் சரி. எளிதாகப் பழக இந்த ’இடைப்பட்ட‘த் தோற்றம் உதவியது.

சாதாரண ஜூஸ் வகைகள் தவிர, சில ஸ்பெஷல் வெரைட்டீகளையும் தருவார். குறிப்பாக, ட்ராபிகானா பழச்சாறுகள். அருந்துபவர்களின் கெளரவத்தைக் கூட்டும் பெரிய பிராண்ட் அது. சத்துள்ள சாறுகள் மட்டுமே சிலரது தேர்வு. அந்தத் தேவையையும் பூர்த்தி செய்யும் பானங்கள் இந்த பிராண்டில் உண்டு.

மதியம் 3 மணிக்குச் சூடு பிடிக்கும் வியாபாரம், தியேட்டரில் இரவுக் காட்சி தொடங்கும் வரை ஓடும்.

லாபத்தைக் கூட்ட வேண்டும் என்னும் எண்ணம் எந்த வியாபாரிக்குத்தான் வராது? அந்தக் கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினார் பரத்.

முதல் நிலையில், தன் கல்லூரி நண்பர்களிடம் பேசினார். ஆரம்பக் கட்டக் கலந்துரையாடலில் ஆழமான சிந்தனைக்குள் அவர்கள் வரவில்லை. ஹாஸ்யம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

பின்னர், உருப்படியான, சில ஆலோசனைகளைச் சொன்னார்கள். கடைக்குப் புதிய பெயின்ட் அடிப்பது, கூடுதல் பிரகாசம் கொண்ட விளக்குகளைப் பொருத்துவது போன்றவற்றைக் குறிப்பிட்டார்கள். இவையெல்லாம் தேவைதான். ஆனால் ”ஒப்பனை” மாற்றங்கள்.

இளநீர் கடை
இளநீர் கடை

ஆனால், இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் உந்துதல் பரத்திற்கு இருந்தது. ஒரு காஸ்ட் அக்கவுண்ட்டைப் பார்த்தார். சகல விவரங்களையும் கேட்டறிந்தபின் அவர் சில ஆலோசனைகளைத் தந்தார்.

* எல்லோரும் விரும்புவது மாம்பழ ஜூஸ். ஆனால் மற்ற ஜூஸ்களைவிட அதில் லாபக்கூறு குறைவாகவே இருந்தது. கொள்முதல் விலை அதிகம். மேலும் ஒரு சீசனல் பழம். எனவே, வந்த வரை லாபம்.

* அன்னாசி பழத்தில் தோலுரிக்கும் பாடு அதிகம். அதனால் வீடுகளில் வாங்குவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆனால், ஜூஸ் வடிவில் எல்லோரும் விரும்புவார்கள். கூடுதல் லாபமும் உண்டு. வருடம் முழுவதும் சப்ளை இருக்கிறது. அதை அதிகமாக முன்னிறுத்தலாம்.

* பொதுவாக, எல்லாக் கடைகளிலும் ஒரு பெரிய அளவு கண்ணாடிக் கப்பைத்தான் பயன்படுத்துவார்கள். அதையே சிறிய கப், பெரிய கப் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

காஸ்ட் அக்கவுண்டன்ட் சொன்னதை நடைமுறைப்படுத்தியபோது, நால்ல மாற்றம் தென்பட ஆரம்பித்தது.

எக்ஸ்ட்ரா ஜூஸ்
எக்ஸ்ட்ரா ஜூஸ்
DIXITH

ஒருமுறை ஹாஸ்பிடாலிட்டி பற்றி நன்கு அறிந்த பெண்மணி ஒருவர் தன் தோழிகளோடு கடைக்கு வந்திருந்தார். கடையில் கிடைத்த நல்ல சேவை அவரைக் கவர்ந்தது. போகும் போது பரத்திடம் ஒரு யோசனைச் சொன்னார்.

”நாங்க எல்லோரும் ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் செஞ்சோம். ஒவ்வொரு ஜூஸும் ரெடி ஆனதும் டேபிளுக்குக் கொண்டு வந்து கொடுத்தாங்க. அது ஓகே. ஃபாஸ்ட் சர்வீஸ். ஆனா, இது சரியான மெதட் இல்லீங்க. கடையோட பெயரே ஜமா. அப்படீன்னா ஜாலி. அதானே மீனிங். நாங்க தாகத்துக்குக் குடிக்க வரலியே. அதனால எல்லா ஜூஸையும் ஒரே டயத்துல குடுங்க. அப்பத்தானே ஒண்ணாச் சேர்ந்து ஜாலியா குடிப்போம்!”

ஜூஸ்
ஜூஸ்

பரத் இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்தார். ஜூஸைத் தயாரித்தபின் கோப்பையில் நிரப்புவோம். அதன்பிறகும் மிக்ஸீ ஜார்-ரில் கொஞ்சம் மீதம் இருக்குமே?

கூட்டம் குறைவாக இருந்தால், ஊழியர் கொஞ்ச நேரம் காத்திருந்து நாம் சிறிது அருந்தியபின், கப்பை மீண்டும் நிரப்புவார். மற்ற சமயங்களில் இதைச் செய்ய நேரம் இருக்காது. அதனால் விட்டு விடுவார்.

ஆனால், வாடிக்கையாளர் மனதிலோ “மீதமுள்ள அந்தக் கொஞ்சம் ஜூஸ்” ஒரு பெரிய விஷயமாக நிற்கும். அதற்குப் பதிலாக, தயாரித்த ஜூஸ் முழுவதையும் ஒரு பெரிய ஜக்கில் ஊற்றி அவர்களது மேஜையில் வைத்து விட்டால்…! அதை குடிப்பதில் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா திருப்தி கிடைக்குமே... அதற்காகவே அவர்கள் மீண்டும் மீண்டும் கடைக்கு வருவார்களே!

இந்த மாற்றங்களை எல்லாம் செய்தபின் கூட்டம் அதிகமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

(மாத்தி யோசி கதைகள் தொடரும்)