இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முதலீட்டு முறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் ரூ.12,286 கோடி எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்தது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தை விட ரூ. 423 கோடி அதிகமாகும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2022 மே மாத இறுதி நிலவரப்படி இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ. 37.4 லட்சம் கோடியாக உள்ளது. இது 2021 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.60% வளர்ச்சியாகும். மொத்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் (Folio) எண்ணிக்கை இதுவரைக்கும் இல்லாத வகையில் 13.33 கோடியாக அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் இந்த எண்ணிக்கை சுமார் 10 கோடியாகதான் இருந்தது. மொத்தமுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 10.6 கோடியாக உள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS5.48 கோடி எஸ்ஐபி கணக்குகள்..!
எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கை 2022 மே மாதம் 5.48 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 5.39 கோடியாக இருந்தது. மே மாதத்தில் மட்டும் 19.74 மொத்தம் எஸ்ஐபி கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்ஐபி முறையில் மே மாத நிலவரப்படி நிர்வகிக்கும் தொகை ரூ. 5.65 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியக் கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தை மே மாதத்தில் அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இந்த நிலையிலும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு குறிப்பாக எஸ்ஐபி முறையில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஈக்விட்டி ஃபண்ட்களில் நிகரமாக செய்யப்பட்ட முதலீடு ரூ.18,500 கோடியாக உள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் ரூ.15,890 கோடியாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னணியில் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்கள்..!
மிக அதிகபட்சமாக ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்களில் ரூ. 2,900 கோடி நிகரமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. லார்ஜ் கேப் ஃபண்ட்கள், லார்ஜ் & மிட் கேப் ஃப்ண்ட்கள், மற்றும் தீம்மெட்டிக் ஃபண்ட்களில் தலா ரூ.2,000 கோடிக்கு மேல் நிகர முதலீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஈக்விட்டி திட்டங்களில் (ஈக்விட்டி, ஹைபிரீட், தீர்வு அடிப்படையிலான ஃபண்ட்) சிறு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 2022 மே மாதத்தில் ரூ.18,49,896 கோடியாக உள்ளது. இது 2021 மே மாதத்தை விட 26.83% அதிகமாகும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது சிறு முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால் அவர்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தை தாண்டி நீண்ட கால நோக்கில் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
கடன் ஃபண்ட்கள்..!
ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகித உயர்வு காரணமாக கடன் ஃபண்ட்களிலிருந்து மே மாதத்தில் நிகரமாக 32,700 கோடி ரூபாய் மதிப்புள்ள தொகையை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள். இதில் மணி மார்கெட் ஃபண்ட்களிருந்து ரூ.14,600 கோடி, ஷார்ட் டூரேஷன் ஃபண்ட்களிலிருந்து ரூ.8,600 கோடி, ஃப்ளோட்டர் ஃபண்ட்களிலிருந்து ரூ.5,300 கோடி வெளியேறி இருக்கிறது.

கலப்பின ஃபண்ட்களில் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட்களில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
எஸ்ஐபி சராசரி..!
எஸ்ஐபி சராசரி முதலீட்டை எடுத்துக் கொண்டால் போன்பே (PhonePe) மூலமான முதலீடு மிக குறைந்த அளவாக மாதம் ரூ.816 உள்ளது. இதுவே பிரிவாடோ கேப்பிட்ட வென்ஞர்ஸ் (Privado Capital Ventures) மூலமான சராசரி எஸ்ஐபி மாத முதலீடு ரூ.7.80 லட்சமாக உள்ளது. சிறு முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மற்றும் ஹைபிரீட் ஃபண்ட்களில் நீண்ட கால நோக்கில் எஸ்ஐபி முதலீட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

மிக அதிகமாக என்ஜே இந்தியா இன்வெஸ்ட் நிறுவனத்தின் மூலம் தான் ரூ. 36,582 கோடி மதிப்புள்ள எஸ்ஐபி முதலீடு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் மாத சராசரி எஸ்ஐபி முதலீடு ரூ. 2,779 கோடியாக உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் எஸ்பிஐ (ரூ.23,000 கோடி), ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (ரூ.14,000 கோடி) உள்ளன.

விரிவான விவரத்திற்கு அட்டவணை பார்க்கவும்.