மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். கோவிட் தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வர இந்த பட்ஜெட் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
எதிர்வரும் நிதியாண்டில் சுங்க வரி அதிகரிக்கப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட பொருள்களின் பட்டியலை வெளியிட்டார். அதில், மக்கள் அதிகம் உபயோகிக்கும் தொழில்நுட்ப பொருள்களான ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர்கள், போலி நகைகள், சோலார் செல்கள் மற்றும் சோலார் மொடூல்ஸ் உள்பட இறக்குமதி செய்யப்படும் பாகங்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக கூறியுள்ளார். ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாயக் கருவிகள் மீதான வரி விலக்கு நீடிப்பதாகவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் நிதியாண்டில் நிதியமைச்சர் குறிப்பிட்ட விலை குறைய வாய்ப்புள்ள பொருள்களின் பட்டியல்:
ஆடைகள், ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள், மொபைல், போன்களுக்கான கேமரா லென்ஸ், மொபைல் போன் சார்ஜர்கள், Frozen mussels, Frozen squids, பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், அசிட்டிக் அமிலம், பெட்ரோலியப் பொருள்களுக்குத் தேவையான இரசாயனங்கள், எஃகு ஸ்கிராப் போன்றவை

விலை உயர வாய்ப்புள்ள பொருள்களின் பட்டியல்:
குடை, போலி நகைகள், ஒன்று அல்லது பல ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள், சோலார் மின்கலங்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.
விலை உயர்வதற்கு வாய்ப்புள்ள பொருள்களை உடனே வாங்கத் தயாராகுங்கள் மக்களே...!