கொரோனா காலம் தொடங்கியதிலிருந்து வேலை இழப்பு, வருமானம் பாதிப்பு என மக்கள் பல நெருக்கடியில் உள்ளனர். இதனால் நிலைமையைச் சமாளிக்க கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு வங்கியாக அலைந்து தகவல் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அந்த அலைச்சல் இல்லாமல் வங்கியில் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு உதவும் தகவல்தான் இது.

பொதுவாக, வங்கிகளில் பல்வேறு வகையான கடன் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் வாங்கும் கடன் பர்சனல் லோன்தான். ஏனெனில், பர்சனல் லோனை எளிதில் பெற முடியும். இதில் மற்ற கடனைக் காட்டிலும் ஆவணங்கள் குறைவு. ஆனால், மற்ற கடன்களைவிட இதில் வட்டி அதிகம். இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டுக் கடன் என மற்ற கடன்களுக்குப் பதிலாக இந்த தனி நபர் கடன்களையே நாடுவதைக் காண முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஹெச்.டி.எஃப்.சி வங்கியைப் பொறுத்தவரையில் வட்டி விகிதம் வருடத்துக்கு 10.50 முதல் 21% வரையில் உள்ளது. கடன் வாங்க குறைந்தபட்ச வயது - 21, அதிகபட்ச வயது - 60. குறைந்தபட்ச நிகர வருமானம் ரூ.15,000. இதே ஹைதராபாத், சென்னை, புனே, அகமதாபாத், மும்பை, கொச்சின், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு எனில், 20,000 ரூபாய் வருமானம் இருக்க வேண்டும். 12 முதல் 60 மாதங்களில் கடனை திரும்ப செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.

டர்போலோன் - சோழமண்டலம் பர்சனல் ஃபைனான்ஸ் வட்டி விகிதம் - 15%. வயது வரம்பு - 21 முதல் 60 வயதாகும். செயல்பாட்டுக் கட்டணம் - கடன் தொகையில் 3% கடன் தொகை - ரூ.5 லட்சம் வரையில். கடன் காலம் - 12 முதல் 48 மாதங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எஸ்.பி.ஐ வங்கியைப் பொறுத்தவரையில் இரண்டு வகையான பர்சனல் லோன் உண்டு. இதில் எஸ்.பி.ஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனுக்கு - 10.60% வட்டி ஆரம்பமாகிறது. வயது வரம்பு 21 - 60 வயதாகும். குறைந்தபட்ச வருமானம் - ரூ.15,000; கடன் வரம்பு - ரூ.25,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம். கால அவகாசம் 60 மாதம் வரையில்.

மேலும், எஸ்.பி.ஐ பர்சனல் லோன் /ஓய்வூதியதாரர்களுக்கு இதில் வட்டி விகிதம் வருடத்துக்கு 9.75% - 10.25% வரையில்; வயது வரம்பு 21 முதல் 76 வயது வரையில் கடன் வாங்கிக்கொள்ளலாம். கடன் தொகை ரூ.25,000 முதல் 14 லட்சம் ரூபாய் வரை பெறலாம். கால அவகாசம் 84 மாதங்கள் வரையில் கட்டலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி விகிதம் வருடத்துக்கு 8.7% - 14.25% வரையில்; வயது வரம்பு 21 முதல் 60 வயதுவரை. வருமானம், வங்கி விதிமுறைகளைப் பொறுத்து கடன் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை அல்லது வருமானத்தில் 20 மடங்கு கடன் வாங்கலாம்.

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்துக்கு 12% முதல் 21% வரை; வயது வரம்பு 21 முதல் 60 வயது வரை; குறைந்தபட்ச வருமானம் ரூ.15,000, கடன் அளவு ரூ.50,000 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் வாங்கலாம். கால அளவு 12 முதல் 60 மாதங்கள் வரை.
கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோன் வட்டி விகிதம் 12.40%; வயது வரம்பு 21 முதல் 60 வரை; குறைந்தபட்ச வருமானம் ரூ.10,000. கடன் அளவு ரூ. 3 லட்சம் ரூபாய் (அ) 10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அதைப் பெறலாம். கால அளவு 48 மாதங்கள் வரை.

கனரா வங்கி பட்ஜெட் பர்சனல் லோன் வட்டி விகிதம் 11.30 முதல் 12.30% வயது வரம்பு - வங்கியின் விருப்பப்படி குறைந்தபட்ச வருமானம் - வங்கியின் விருப்பப்படி கடன் அளவு - ரூ. 3 லட்சம் ரூபாய் (அ) 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அதைக் கடனாகப் பெறலாம். கால அளவு - 60 மாதங்கள் வரை.
மஹிந்திரா ஃபைனான்ஸ் பர்சனல் லோன் வட்டி விகிதம் - 26% வரையில் வயது வரம்பு - 21 முதல் 58 வரை கடன் அளவு ரூ. 3 லட்சம் வரை. கால அளவு 3 வருடங்கள் வரை. வருமான வரம்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.

ஐ.டி.பி.ஐ வங்கி பர்சனல் லோன் வட்டி விகிதம் வருடத்துக்கு 8.15 முதல் 10.90% வரையில்; வயது வரம்பு 21 முதல் 60 வயது வரை; குறைந்தபட்ச வருமானம் ரூ.15,000 கடன் அளவு ரூ.25,000 முதல் 5 லட்சம் வரை; கால அளவு 12 முதல் 60 மாதங்கள் வரை.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பர்சனல் லோன் வட்டி விகிதம் வருடத்துக்கு 10.80% வயது வரம்பு 21 முதல் 60 வயது வரை; குறைந்தபட்ச வருமானம் ரூ.5,000-க்கு மேல்; கடன் அளவு ரூ.5 லட்சம் வரை; கால அளவு 60 மாதம் வரை.

இப்படி வங்கிகளின் வட்டி விகிதம் பலவாறாகவும் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வேறு, வேறு விதமாகவும் உள்ளன. இதனால் கடன் பெற முயற்சிப்பவர்கள் இதில் தங்களுக்கு எது சரியானதாகத் தெரிகிறதோ அதைப் பயன்படுத்தி கடனை பெற்று பிரச்னை இல்லாமல் திருப்பிச் செலுத்தி நிலைமையை சமாளிக்கலாம்!