Published:Updated:

SIP முறையில் முதலீடு செய்து வருபவர்களுக்கு சில ஆலோசனைகள்!

Representational Image
Representational Image

சிறு முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுகிறார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மீ.கண்ணன்.

கோவிட் 19 - நோய்த் தொற்று காரணமாக உலகம் நாளைக்கே அழிந்துவிடும் என்று யாராவது சொன்னால், சிரித்தபடி அதைப் புறந்தள்ளிவிடுங்கள். மாறாக, எல்லாம் தற்காலிகமானதுதான்; `லாக்டெளன்’ முடிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று யாராவது சொன்னாலும் புன்னகையோடு நகர்ந்துவிடுங்கள். எப்போதும் பயத்தைத் தவிர்த்துவிடுங்கள், புன்னகையை மட்டும் தவிர்க்க வேண்டாம். காரணம், கோவிட் 19 என்பது இயற்கையின் திருவிளையாடல்தான். இந்த நேரத்தில் நாம் இயல்பாக இருந்து இதைக் கடந்து செல்வோம்.

பிளாக்ஸ்வன் ஈவன்ட் (Black Swan Event)

இது ஒரு `பிளாக்ஸ்வன் ஈவன்ட்’ என்று பரவலாகப் பேசப்படுகிறது. இதைத் தமிழில் `கறுப்பு வாத்து’ எனலாம். இதன் அர்த்தம், பல்வேறு விஷயங்கள் பற்றி புரிபடாத சுழல். கோவிட் 19-ன் தாக்கங்கள் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு இடங்களில் இருக்கப்போகிறது. அது எவ்வாறு, எங்கு, எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்குப் பலவற்றுக்கு விடை தெரியாமல் இருப்பதே`பிளாக்ஸ்வன் ஈவன்ட்’ எனலாம்

``செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..!” - `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பொருளாதாரச் சரிவு

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) முதல் எல்லா பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வல்லுநர்களும் கோவிட் 19 தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதத்துக்கு மேல் குறையும் என்கிறார்கள். `கோவிட் 19'-க்கு முன் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக இருந்தது, கோவிட் 19-ன் பொருளாதார வீழ்ச்சி காரணமாக -1 சதவிகிதமாகக் குறையும். சில நாடுகளில் இது மைனஸ் 5 சதவிகிதத்திற்கு மேலும் ஏற்படலாம்.

இந்தியாவில் `கோவிட் 19'-க்கு முன் பொருளாதாரம் வளர்ச்சி வீதம் 5 சதவிகிதமாக இருந்தது. இனி 1 - 1.5 சதவிகித வளர்ச்சி மட்டுமே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பொருளாதாரம்
பொருளாதாரம்

பொருளாதார வீழ்ச்சி பணக்காரர்களையும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களையும் பெருமளவில் பாதிக்கலாம் என்று சிலர் எண்ணலாம். ஆனால், சாதாரண மக்களை, பொருளாதார வளர்ச்சி குறைவு எவ்வாறு பாதிக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் எந்தெந்த துறை எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

பொருளாதார பாதிப்புகள்

கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாகப் பலவிதமான பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். வேலைவாய்ப்புகள் குறையலாம், வேலை இழப்புகள் வரலாம், சம்பளம் குறைக்கப்படலாம். ஊதிய உயர்வுகள் நிறுத்தப்படலாம். பதவி உயர்வுகள் தவிர்க்கப்படலாம் என்ற வகையில் உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது.

எதில் முன்னேற்றம், எதில் சரிவு?

கோவிட் 19-க்குப் பிறகு, சில தொழில் துறைகள் வளர்ச்சி காணப் போகின்றன. சில துறைகள் சரியப் போகின்றன. அந்தத் தொழில்கள் பற்றி பார்ப்போம்.

மீ.கண்ணன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
மீ.கண்ணன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்

வளரும் துறைகள்

ஆன்லைன் பணப்பரிமாற்றம்: ஆன்லைன் முலம் பணப்பரிமாற்றம் வளரும். ஆன்லைன் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் விரைவில் சாத்தியமாகலாம்.

பொழுதுபோக்கு: சினிமா மற்றும் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உதாரணமாக, ஒ.டி.டி பிளாட்பார்ம் (OTT Platforms) எனப்படும் சினிமா படங்கள் ஆன்லைன் மூலம் பார்ப்பது.

மருத்துவத் துறை, மருந்து நிறுவனங்கள் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொடர்புத் துறை (Telecommunication) வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. மேலும், சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு பொது ஊர்திகளில் செல்வது குறைந்து, தனி வாகனங்களில் செல்வது அதிகரிக்கலாம் என்ற யூகமும் உள்ளது.

சரியும் துறைகள்

மக்களிடம் பணப்புழக்கம் குறையலாம். பணப்புழக்கம் குறைவதால், அத்திவாசியப் பொருள்கள் மட்டுமே வாங்கப்படும். ஆடம்பரப் பொருள்களின் தேவை இருக்காது. இதனால் ஆடம்பரப் பொருள்கள் தயாரிப்பு தொழில்கள் குறையலாம் அதில் வேலை இழப்புகள், அதனால் பணப்புழக்கம் குறைவது என்று இது ஒரு சங்கிலி தொடர்போல் ஒன்றையொன்று பாதிக்கும். உற்பத்தி குறைவதால், இந்த உற்பத்தித் துறை (Manufacturing) பாதிக்கப்படுகிறது.

Economy Down
Economy Down

உலகெங்கும் வளர்ச்சி குறைவதால், சேவைத்துறை (Service), குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை (Information Technology) ஏற்றுமதி வளர்ச்சி சற்று குறையலாம்.

வங்கி மற்றும் நிதி சார்ந்த தொழில்கள் : வாங்கிய கடன்கள் கட்டப்படாத காரணத்தால் நிதி நிறுவனங்களின் லாப ஈட்டும் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதிற்கில்லை.

அதலபாதாளத்தில் உலகப் பொருளாதாரம் - சொத்து மதிப்பை உயர்த்தும் உலகப் பணக்காரர்கள்!

வீடு மற்றும் வீட்டுமனை சார்ந்தவை பாதிக்கப்படலாம். புதிய விற்பனை தாமதப்படலாம்.

உணவு தயாரிக்கும் துறை, உணவகங்கள் உட்பட சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது

முடிவாக,

1. சூழலை மாற்ற முடியாதபோது, நாம் சூழலுக்கேற்ப மாற வேண்டும்.

2. இதுவும் கடந்துபோகும் என்று பொறுமையாக இருக்க வேண்டும்.

3. சமூக இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்

4. கையில் இருக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்திருப்போம்.

5. புதிய முதலீடுகளைச் சற்று தள்ளிப்போடுவோம். தேவைக்கு அதிகமாக நிச்சயமாகப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் சந்தை சரிந்த சூழ்நிலையில் பங்கு அல்லது பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

6. ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருபவர்கள் தொடர்ந்து செய்துவரவும். எஸ்.ஐ.பி கட்ட பணத்தட்டுப்பாடு இருப்பின் அதை நிறுத்திவிடலாம்.

அனைத்தும் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம்.

அடுத்த கட்டுரைக்கு