Published:Updated:

எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு; சரியான மியூச்சுவல் ஃபண்ட் எது? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி

நாணயம் மியூச்சுவல் ஃபண்ட் நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ச்சியாக சிறு சிறு தொகையாக முதலீடு செய்து வந்தால்கூட குறிப்பிட்ட காலத்தில் பெரும் தொகையை ஈட்ட முடியும். ஆனால், யாருக்கு எந்த ஃபண்ட் சரியானது, நம்முடைய நிதி இலக்குக்கு என்ன ஃபண்ட் சரியாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள் முதலீடு செய்வதற்கு முன் எழும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் ஆர்வமுடன் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. ஆனால், பலருக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி அதிகம் தெரியாமல்தான் முதலீடு செய்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ச்சியாக சிறு சிறு தொகையாக முதலீடு செய்துவந்தால்கூட குறிப்பிட்ட காலத்தில் பெரும் தொகையை ஈட்ட முடியும். ஆனால், யாருக்கு எந்த ஃபண்ட் சரியானது, நம்முடைய நிதி இலக்குக்கு என்ன ஃபண்ட் சரியாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள் முதலீடு செய்வதற்கு முன் எழுவது இயல்பு.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

சரியான கேள்விகள்தான் நம்மை சரியான பதில்களைத் தேட வைக்கும். இவ்வாறு முதலீட்டாளர்களுக்கு எழும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் நாணயம் விகடன் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

`சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது எப்படி?' என்ற நிகழ்ச்சியை நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து கோவையில் நவம்பர் 5-ம், சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடத்த உள்ளது. ஹோட்டல் விஜய் பார்க் இன் வெங்கடேஷ் மஹாலில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் அழகப்பன் ராமநாதன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றியும் ஃபண்ட் தேர்வு பற்றியும் பேசுகிறார். மேலும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் ஏரியா ஹெட் சுரேஷ் பாலாஜியும் இதில் சிறப்புரையாற்றுகிறார்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. அனைவருக்கு அனுமதி இலவசம். https://bit.ly/3d2WG6G என்ற லிங்கில் பதிவு செய்தால் போதும். அனைவரும் கலந்துகொண்டு முதலீடு குறித்து தெளிவு பெற்றுக்கொள்ள அருமையான வாய்ப்பு. தவற விட வேண்டாம்.