Published:Updated:

“எங்க 2.65 லட்ச ரூபாய் கடனை இப்படிதான் அடைக்கப் போறோம்!”

கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

சோஷியல் மீடியா

“எங்க 2.65 லட்ச ரூபாய் கடனை இப்படிதான் அடைக்கப் போறோம்!”

சோஷியல் மீடியா

Published:Updated:
கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

தமிழகத்தின் ‘வெள்ளை அறிக்கை’ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில்... அதில், “தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.65 லட்சம் கடன் உள்ளது” என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லியிருந்தார். இதைத் தொடர்ந்து நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் “உங்க குடும்பத்தோட 2.65 லட்ச ரூபாய்க் கடனை எப்படி அடைக்கலாம்னு ஒரு யோசனை சொல்லுங்களேன்..!” என்று கேட்டிருந்தோம். வாசகர்களும் நக்கல், நையாண்டி நிறைந்த பல பதில்களைக் கூறியிருந்தார்கள்.

“இன்னும் 2.35 லட்சத்தைக் கடனாகக் கொடுத்தால், அதை வைத்து ஒரு பெட்டிக் கடையோ, சின்ன டீக்கடையோ, பக்கோடா கடையோ போட்டுச் சம்பாதித்து எல்லாக் கடனையும் அடைத்துவிடுவேன்”னு சொல்லியிருக்காரு மாஸோ. ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா’ மொமென்ட்! சிறப்பு!

“நாங்க வாங்கின கடனையே எப்படிக் கட்டுறதுனு மண்டையப் பிச்சிக்கிட்டு அலையுறோம். இதுல அரசாங்கத்தோட கடனை வேற கட்டணுமா?”னு கேட்ருக்காங்க தீபா. நல்ல கேள்வி மேடம்!

“எங்க 2.65 லட்ச ரூபாய் கடனை 
இப்படிதான் அடைக்கப் போறோம்!”

“அந்த 15 லட்சம் ரூபாயில என் கடனை எடுத்துகிட்டு, மீதிப் பணத்தை மட்டும் என் அக்கவுன்டுல போட்டுவிடுங்க. போதும்”னு ரொம்ப பெருந்தன்மையா சொல்லியிருக்காரு தீபக் குமார். அந்த 15 லட்சத்தை மறக்கவே மாட்டீங்களா மக்களே...

“நான் நேற்றே முதல்வர் அக்கவுன்ட்ல போட்டுட்டேன் சாரே”னு கமென்ட் பண்ணியிருக்காரு சந்திரன். சொல்லவே இல்ல..!

“நேத்து வரைக்கும் குவாட்டர் மட்டும் அடிச்சவங்க எல்லாம் இனி ஆஃப் அடிச்சு கடன முடிச்சு குடுத்துட வேண்டியதுதான்...ஏன்னா, நம்ம தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப ரோசக்காரங்க!”னு சொல்லியிருக்காரு ஆனந்த குமார். குடிமகன்களே கவனிங்க!

“இந்தப் பணம் வேறு எங்கும் சென்றுவிட வில்லை. நமது தமிழக அரசியல்வாதிகளிடமே உள்ளது. அவர்கள் மனது வைத்தால் சுலபமாகக் கடனை அடைத்துவிடலாம்”னு சொல்லியிருக் காரு தனசேகரன். இது உங்க ஊரு எம்.எல்.ஏ கிட்ட சொல்வீங்களா ஜி..?

“நாம ஒரு வெள்ளை அறிக்கை கொடுத்துட வேண்டியதுதான்”னு கமென்ட் பண்ணி யிருக்காரு அருண். உஷாரய்யா உஷாரு!

“முதல்ல எல்லா அரசியல்வாதிகள் வீட்டிலும் சோதனை பண்ணுங்க. கடனும் அடையும். அரசு கஜானாவும் நிறையும்”னு சொல்லியிருக்காரு பகவதிராஜ். வாத்தி ரெய்டு ஆரம்பிச்சுட வேண்டியதுதான்...

“முதல்ல என்னோட கந்துவட்டிக் கடனை அடைச்சிக்கிறேன். பிறகு, உங்க கடனை அடைகிறேன் அய்யா”னு பாவமா சொல்லி யிருக்காரு காசிராஜன். உன் குத்தமா... என் குத்தமா... யார நானும் குத்தம் சொல்ல!

“என் குடும்பத்துக்கு என்னைக் கேட்காம யாரு உங்களைக் கடன் வாங்கச் சொன்னது”னு கொஞ்சம் கோபமா கேட்ருக்காரு மணிகண்டன். லா பாய்ன்ட் ஜி..!“இன்னும் 2.35 லட்சத்தைக் கடனாகக் கொடுத்தால், அதை வைத்து ஒரு பெட்டிக் கடையோ, சின்ன டீக்கடையோ, பக்கோடா கடையோ போட்டு சம்பாதித்து எல்லாக் கடனையும் அடைத்துவிடுவேன்”னு சொல்லியிருக்காரு மாஸோ. ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா’ மொமென்ட்! சிறப்போ சிறப்பு!