Published:Updated:

சொந்தமாகத் தொழில் தொடங்குவதைவிட ஃப்ரான்சைஸ் நல்லது... யாருக்கு?

ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்குபவர்கள் அதிக அளவு வெற்றி பெறுகிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இது நிரூபணமாகியிருக்கிறது

> சொந்தமாக பிசினஸ் தொடங்கப் போவதாக ஒரு பிரமாண்ட புளூ பிரின்ட்டுடன் நீங்கள் வங்கி வங்கியாக ஏறி இறங்கினால் கிடைக்காத வங்கிக் கடன், ஒரு குறிப்பிட்ட பிராண்டின் ஃப்ரான்சைஸியாக நீங்கள் மாறப் போகிறேன் என்று சொன்னால் கிடைக்கும்.

ஏனென்றால், அந்த பிராண்ட் உருவாக்கியிருக்கும் நம்பகத்தன்மை மற்றும் அந்த பிராண்டுக்கு இருக்கும் வருவாய் வரலாற்றை அடிப்படையாக வைத்து வங்கிகள் கடன் தரும் முடிவை எடுக்கின்றன.

> சொந்தமாக பிசினஸ் தொடங்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து நபருக்கு யாரெல்லாம் ஆதரவாக, உறுதுணையாக இருப்பார்கள் தெரியுமா... குடும்பமும் நண்பர்களும்தான். ஆதரவு அளிப்பதுடன், முடிந்தால் பண உதவியும் செய்வார்கள்.

ஆனால், வணிகரீதியான அறிவுரைகள், அனுபவப் பாடங்கள் எல்லாம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. ஃப்ரான்சைஸ் பிசினஸைத் தேர்வு செய்யும்போது, உங்கள் தாய் நிறுவனம் வணிக அறிவுரைகளையும், அனுபவப் பாடங்களையும் உங்களுக்குத் தாராளமாகத் தரும்.

சொந்தமாகத் தொழில் தொடங்குவதைவிட ஃப்ரான்சைஸ் நல்லது... யாருக்கு?

> நீங்கள் ஃப்ரான்சைஸியாகும்போது, உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க ஒரு குழுவை அல்லது நிபுணரை ஃப்ரான்சைஸ் நிறுவனம் அமர்த்துகிறது. ஏனென்றால், இப்போது உங்கள் நிறுவனத்தில் இயங்கும் ஒவ்வொருவரின் செய்கையும், வாடிக்கையாளருக்கு பிராண்டின் செய்கையாகவே தெரியும். எனவே, பிராண்டின் நன்மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு ஃப்ரான்சைஸ் பிசினஸின் அடிநாதமாக இருப்பது... வணிக நடவடிக்கையை அடுத்த தலைமுறைக்கோ, அடுத்த நபருக்கோ வெற்றிகரமாக வார்த்துத் தருவதுதான்.

> சொந்தமாக பிசினஸ் தொடங்கும் நபர்களைவிட, ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்குபவர்கள் அதிக அளவு வெற்றி பெறுகிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 'எது வெற்றி' என்பதையே! ஃப்ரான்சைஸ் பிசினஸ் உங்களை பிரமாண்ட வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பது மறுக்க முடியாதது! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2OHnUAm

வாழ்வில் உத்வேகம் இருக்கும் அத்தனை பேருக்குமே ஏதாவது ஒருகட்டத்தில், 'ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும்' என்ற யோசனை வரும். உடனே ஒரு பிசினஸைத் தொடங்கி, அதில் வெற்றி பெறுவது வரை கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவோம். ஆனால், யதார்த்தத்தில் இருந்த இடத்திலேயேதான் இருப்போம். இந்த யதார்த்தத்துக்கும் கற்பனைக்குமான இடைவெளியை உடைக்கும் சிலர் மட்டுமே உண்மையில் தொழிலதிபர்கள் ஆகிறார்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஆனால், இன்றைய உலகில் 'தொழிலதிபர்' எனும் சொல் நீங்கள் தனியாளாக நின்று அடிக்கல் நாட்டித் தொடங்கிய ஒரு பிசினஸைக் குறிப்பதாக மட்டுமே இருப்பதில்லை. ஒரு பிரமாண்ட பிராண்டின் பங்காக இணைந்துகொண்டும் நீங்கள் சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தொழிலதிபராக மாற முடியும். ஒரு ஃப்ரான்சைஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான காரணம் இது.

- இதேபோல் 10 காரணங்களைப் பட்டியலிடுகிறது, நாணயம் விகடன் இதழில் வெளியாகும் 'ஃப்ரான்சைஸ் தொழில்' தொடர் பகுதி. அதை முழுமையாக வாசிக்க > ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்? https://www.vikatan.com/news/investment/new-series-on-business-models-part-11-franchise-model

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு