Published:Updated:

சொத்துகளுக்கு யார் வாரிசு... உயில் எழுதுவது ஏன் முக்கியம்?

உயில்

உயில் எழுதிய நபர் மறைவுக்குப் பின்னரே உயில் செயல்பாட்டுக்கு வரும். உயிலில் குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்த உயில் அமல்படுத்துபவரை (Executor) நியமிக்கலாம். அவர் நம்பிக்கையான வராகவும் நியாயமானவராகவும் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பது பிரச்னைகளைத் தவிர்க்கும்.

சொத்துகளுக்கு யார் வாரிசு... உயில் எழுதுவது ஏன் முக்கியம்?

உயில் எழுதிய நபர் மறைவுக்குப் பின்னரே உயில் செயல்பாட்டுக்கு வரும். உயிலில் குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்த உயில் அமல்படுத்துபவரை (Executor) நியமிக்கலாம். அவர் நம்பிக்கையான வராகவும் நியாயமானவராகவும் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பது பிரச்னைகளைத் தவிர்க்கும்.

Published:Updated:
உயில்

ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்துகள், கூட்டுக்குடும்ப பாகப் பிரிவினையில் இருந்து கிடைத்த சொத்துகள், தானமாகக் கிடைத்த சொத்துகள், தந்தை இறப்புக்குப் பிறகு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத சூழலில் வந்து சேரும் சொத்துகள் உள்ளிட்ட சொத்துகளை ஒருவர் உயிலாக எழுதலாம்.

18 வயது நிரம்பிய யாரும் தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். சில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும். உயில் எழுதும்போது அனைத்து அசையும், அசையா சொத்துகளையும் எதையும் விட்டுவிடாமல் விரிவாகக் குறிப்பிட்டு தனது காலத்துக்குப் பின்பு யாருக்கு என்ன சென்று சேர வேண்டும் என்பதையும், ஏன் இப்படி பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கமாக எழுதுவது நல்லது.

உயில்
உயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயில் எழுதுவதற்கு முன்பு யாருக்கேனும் ஏதேனும் சொத்து கொடுத்திருந்தால் அதையும் குறிப்பிடுவது நல்லது. ஏற்கெனவே கொடுத்துவிட்டோம் உயிலில் தனியாக பங்கு தர வேண்டியதில்லை என்று நீங்களாக முடிவு செய்துவிட்டால், பின்னாளில் தனக்கு பங்கு தரவில்லை என்று அந்த நபர் பிரச்னையை உருவாக்கும் நிலை ஏற்படலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயில் எழுதிய நபர் மறைவுக்குப் பின்னரே அந்த உயில் செயல்பாட்டுக்கு வரும். உயிலில் குறிப்பிட்டபடி அனைத்தையும் செயல்படுத்த உயில் அமல்படுத்துபவர் (Executor) ஒருவரை நியமிக்கலாம். அந்த நபர் நம்பிக்கையானவராகவும் நியாயமானவராகவும் இருப்பதோடு குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பது பிற்கால பிரச்னைகளைத் தவிர்க்கும்.

உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும், பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதை சுலபமாக மெய்ப்பித் தலுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக உயிலில் இரண்டு சாட்சிகள் கையொப்பம் இட வேண்டும். பின்னாளில் உயிலில் ஏதேனும் பிரச்னை எனில் நீதிமன்றத்தில் அவர்களுடைய வாக்குமூலம் தேவைப்படும். உயில் மூலம் பலன் அடையும் நபர் சாட்சி கையொப்பம் இடுவதைத் தவிர்த்தல் நல்லது. மேலும், சாட்சிகள் மிகவும் வயதானவர்களாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உயில்
உயில்

உயிலை யாருடைய தூண்டுதலோ, வற்புறுத்தலோ இல்லாமல் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் எழுதப்பட வேண்டும். உயில் எழுதும்போது அந்த நபர் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் உயில் எழுதப்பட்டால் அது செல்லாது.

தனிப்பட்ட சொத்தை ஒருவர் தன் வாரிசுகளுக்குத்தான் உயிலாக எழுத வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைக்கோ, கோயிலுக்கோ கூட உயிலாக எழுதித் தர முடியும். உயில் எதுவும் எழுதவில்லை எனில் அவருடைய வாரிசுகளுக்கு வாரிசுரிமை சட்டத்தின்படி சொத்து சென்றுசேரும்.

18 வயது நிரம்பாத மைனர் மீது உயில் எழுதப்பட்டால் அதற்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டியது அவசியம். இதுவரை பிறக்காத குழந்தையின் பேரிலும் உயில் எழுதலாம். அதாவது பிறக்கப் போகும் பேரக் குழந்தையின் மீதும் உயில் எழுதி வைக்க முடியும்.

உயில் விஷயத்தில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம் உயில் மெய்ப்பித்தல். உயில் எழுதியவர் இறந்தபின் அந்த உயிலை நீதிமன்றத்தில் மெய்ப்பித்தல் அவசியம்.
மூன்றாண்டுகளுக்குள் உயிலை மெய்ப்பித்தல் நல்லது. தவறினால் தாமதத்துக்கான காரணங்களைத் தெளிவாக விளக்க வேண்டியது அவசியம்.

உயில்
உயில்

உயிலை அமல்படுத்துபவர் நியமிக்கப்பட்டிருந்தால் அவர் நீதிமன்றத்தில் உயிலை மெய்ப்பிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். உயில் அமல்படுத்துபவர் இல்லாதபட்சத்தில் உயிலின் பயனாளரே நீதிமன்றத்தை அணுகி உயில் தொடர்பான விளக்கங்களைக் கூறி மெய்ப்பிக்கலாம்.

உயிலை ஒரு முறை மட்டுமே எழுத முடியும் என்றில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இறுதியாக எழுதப்பட்ட
உயிலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அதேபோல் உயில் எழுதிய பிறகும்கூட அந்தச் சொத்தை அவர் விற்க முடியும். உயில் எழுதியவர் இறந்த பிறகு, உயிலில் குறிப்பிட்ட சொத்து விற்கப்பட்டிருந்தால் சொத்து வாங்கியவரிடம் உயிலின் பேரில் கோர முடியாது.