Published:Updated:

`மதுரைக்காரர் டு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்' - யார் இந்த அனந்த நாகேஸ்வரன்?

V. Anantha Nageswaran ( Photo: Vikatan )

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் நான்காவது தமிழர், அனந்த நாகேஸ்வரன் ஆவார். இதற்குமுன் இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, தற்போது அனந்த நாகேஸ்வரன் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

`மதுரைக்காரர் டு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்' - யார் இந்த அனந்த நாகேஸ்வரன்?

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் நான்காவது தமிழர், அனந்த நாகேஸ்வரன் ஆவார். இதற்குமுன் இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, தற்போது அனந்த நாகேஸ்வரன் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

Published:Updated:
V. Anantha Nageswaran ( Photo: Vikatan )

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

அமெரிக்கன் கல்லூரியின் பிரதான கட்டடம்
அமெரிக்கன் கல்லூரியின் பிரதான கட்டடம்

மதுரையைச் சேர்ந்தவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில் பிறந்து வளர்ந்த அனந்த நாகேஸ்வரன், மதுரை டி.வி.எஸ் பள்ளியில் படித்தவர். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்து முடித்தபின், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ படித்தார். பின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

படித்தபின் உலகப் புகழ்பெற்ற யு.பி.எஸ் கிரெடிட் சூஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். பெரும்பாலான மேலை நாடுகளில் இவர் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக ஜூலியஸ் பேயர் முதலீட்டு நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாகப் பணியாற்றினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசிரியர் அனந்த நாகேஸ்வரன்

சர்வதேசப் பொருளாதாரம் குறித்து சிந்திப்பதிலும் எழுதுவதிலும் பேசுவதிலும் ஆர்வத்துடன் செயல்படுபவர் அனந்த நாகேஸ்வரன். பெங்களூருவில் உள்ள ஐ.எம்.எம்-ல் சர்வதேசப் பொருளாதாரம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியிலும் சர்வதேசப் பொருளாதாரம் குறித்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்தார்.

சென்னையை அடுத்துள்ள ஐ.எஃப்.எம்.ஆர் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் டீனாக 2017-2019 வரை பணியாற்றினார். க்ரியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

டாக்டர் அனந்த நாகேஸ்வரன்
டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

அனந்த நாகேஸ்வரனின் அரசியல் சித்தாந்தம்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் வலதுசாரி பொருளாதார சிந்தனையாளர் ஆவார். திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பவர். தொடர்ந்து பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தாமல், அதன் போக்கில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர். அரசாங்கங்கள் பொருளாதாரப் பாதையை நிர்ணயம் செய்யலாமே தவிர, அதைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியான எண்ணம் கொண்டவர். பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனாவின் நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருபவர்.

காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்துவந்த அவர், பா.ஜ.க-வின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பவர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்காவது தமிழர்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் நான்காவது தமிழர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் ஆவார். இதற்குமுன் இருந்த டாக்டர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியம், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, தற்போது டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு தற்போது முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சய் சன்யால் உட்பட பலரது பெயரும் அடிபட்டது. இறுதியாக, அனந்த நாகேஸ்வரனை இப்போது தேர்வு செய்திருக்கிறது. இந்தத் தேர்வு சில மாதங்களுக்கு முன்பே நடந்திருக்கும்பட்சத்தில் வரும் திங்கள்கிழமை அன்று மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யவிருக்கும் எதிர்வரும் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை டாக்டர் அனந்த நாகேஸ்வரன் தாக்கல் செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ``தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்கப்போவதில்லை" என்று கடந்த செப்டம்பரிலேயே அறிவித்த பின்னும், புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், எதிர்வரும் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சய் சன்யால்தான் எழுதியிருக்கிறார்.

அனந்த நாகேஸ்வரனின் புத்தகங்கள்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இதுவரை நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். `தி எக்னாமிக்ஸ் ஆஃப் டெரிவேட்டிவ்’ அவர் முதலில் எழுதிய புத்தகம் ஆகும். `தி டெரிவேட்டிவ்ஸ்’ என்கிற புத்தகத்தை தற்போது நிதித்துறை செயலாளராக இருக்கும் டி.வி.சோமநாதனினுடன் சேர்ந்து எழுதிய அடுத்த புத்தகம். `கேன் இந்தியா குரோ?’ என்கிற புத்தகம் குல்சர் நடராஜனுடன் சேர்ந்து எழுதிய புத்தகம் ஆகும். இந்தியா அதிவேகமான முன்னேற்றம் காண முடியுமா என்பது குறித்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் முக்கியமானது என்பதால், எல்லோரும் எளிதில் படிக்கும் விதமாக இதை இலவசமாகக் கிடைக்கும்படி செய்திருக்கிறார். `தி ரைஸ் ஆஃப் ஃபைனான்ஸ்’ என்கிற புத்தகம் உலக அளவில் நிதிப் பொருளாதாரம் செயல்படுகிறது என்பதை விளக்கும் புத்தகமாகும்.

வி.அனந்த நாகேஸ்வரன்
வி.அனந்த நாகேஸ்வரன்

தமிழ் ஆர்வலர்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் தமிழில் எழுதுவதிலும் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளாக நாணயம் விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். சர்வதேசப் பொருளாதாரம் குறித்து நாணயம் விகடனில் அவர் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நாணயம் விகடன் நடத்திய பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். கொரோனாவால் ஏற்பட்ட உலகப் பொருளாதார பிரச்னைகள் குறித்து சிங்கப்பூரில் இருந்தபடி ஜூம் இணையதளம் மூலம் தமிழ் வாசகர்களுடன் பேசினார்.

சிங்கப்பூர் தமிழர்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு அங்கு ஒரு சர்வதேச இந்தியப் பள்ளியைத் தொடங்கியதில் அனந்த நாகேஸ்வரனுக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் தக்‌ஷசீலா அமைப்பைத் தொடங்கியதிலும் இவருடைய பங்கு முக்கியமானது.

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் தற்போது சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மனைவி ரம்யா, சென்னையைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் தொண்டு அமைப்பு ஒன்றைத் தொடங்கி, இந்தியப் பெண்களுக்கும் பிற ஆசிய நாட்டுப் பெண்களுக்கும் முன்னேற்றம் காண்பதற்கான பல்வேறு உதவிகளைச் செய்துவந்தார். அவரின் மகள் அமெரிக்காவில் பொருளாதாரம் படித்துவிட்டு, தற்போது சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஒரு மகன், பட்டமேற்படிப்பு படித்து வருகிறார்.

மதுரையில் வசித்துவந்த தந்தை வெங்கட்ராமன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவரின் தாயார் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

கர்நாடக இசை ஆர்வலர்

கர்நாடக இசையில் டாக்டர் அனந்த நாகேஸ்வரனுக்கு ஆர்வம் அலாதியானது. உலகின் எங்கிருந்தாலும் டிசம்பர் மாதம் சென்னைக்கு வந்து, இங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்துகொண்டு ரசிப்பார். கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்கள், அவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள், ஆலாபனைகளில் உள்ள சூட்சுமங்கள் என இழை இழையாக ஆராய்ந்து ரசிப்பவர்.

புள்ளிவிவரங்களின் காதலர்

தனி உடைமைப் பொருளாதாரக் கொள்கையில் உறுதியாக ஆதரிப்பவராக டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இருந்தாலும், எதையும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்வார். எனவே, அவரை புள்ளிவிவரங்களின் காதலர் எனலாம். எதிர்தரப்பினர் என்ன சொல்கிறார்கள் என்பதை எப்போதுமே கவனித்துவிட்டு, பதில் சொல்லும் பழக்கம் கொண்டவர்.

இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கத்தைக் கொண்டுவருவதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்று யோசிக்கும் அவர், நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism