Published:Updated:

வேகமெடுக்கும் கோவிட் இரண்டாம் அலை... ரிசர்வ் வங்கி அறிவித்த நிதிச் சலுகைகள் யாருக்கு?

RBI Governor shaktikanta das ( AP / Rajanish Kakade )

``தற்போதைய நுகர்வுத் தேவைதான் இந்திய பொருளாதாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது".

வேகமெடுக்கும் கோவிட் இரண்டாம் அலை... ரிசர்வ் வங்கி அறிவித்த நிதிச் சலுகைகள் யாருக்கு?

``தற்போதைய நுகர்வுத் தேவைதான் இந்திய பொருளாதாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது".

Published:Updated:
RBI Governor shaktikanta das ( AP / Rajanish Kakade )

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ``கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. 2-வது அலை, முதல் அலையை விட ஆபத்தானதாக இருப்பதால், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தற்போதைய நிலைமையை ஆர்.பி.ஐ. உன்னிப்பாக கவனித்து வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த வருடம் கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும், பொருளாதார பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி | Reserve Bank
ரிசர்வ் வங்கி | Reserve Bank

தற்போதைய நுகர்வுத் தேவைதான் இந்திய பொருளாதாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நுகர்வுப் பொருட்களின் விற்பனை கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதேபோல தினசரி சராசரி மின்சார உற்பத்தி, கடந்த ஏப்ரல் 2020-ஐ விட தற்போது 40% கூடுதலாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை என்றாலும் ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது. வேறு சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன. அதனால் நிதிச் சவால்களை சமாளிக்க, ஒரு சில சலுகைகளை ரிசர்வ் வங்கி வழங்குகிறது.

Lockdown
Lockdown

அதனடிப்படையில், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சலுகையானது வருகிற அக்டோபர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல, கொரோனாவின் 2-வது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்து தயாரிப்பாளர்கள் போன்றோர்களின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம்.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D

தனி நபர்கள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் வாங்கி இருக்கும் மொத்த கடன் அளவு ரூ.25 கோடிக்குள் இருந்து, அவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த ஒரு கடன் மறுசீரமைப்புத் திட்டங்களையும் பயன்படுத்தாதவர்களாக இருந்து, 2021 மார்ச் 31-ம் தேதி வரை முறையாக கடனுக்கான வட்டியைச் செலுத்தியிருந்தால் அவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டம் 2.0-ல் பயன் பெறலாம்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism