முன்பெல்லாம், இந்தியா மற்ற நாடுகளைவிட பின்தங்கியே இருக்கிறது என்ற புலம்பலைக் கேட்டிருப்போம். ஆனால், இப்போது மற்ற நாடுகளைவிட இந்தியா பல விஷயங்களில் முன்னிலை வகிக்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இதனால் தொழில் வாய்ப்புகளையும் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளையும் அபரிமிதமாகக் கொண்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதன் காரணமாக, HNI என்கிற உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பல மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வு கணிப்புகள் கூறுகின்றன.
அடுத்த பத்தாண்டுகளில் இந்திய உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை, 80 சதவிகிதமாக உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவில் வெறும் 20 சதவிகிதமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் 10 சதவிகிதமாகவும் மட்டுமே இதன் வளர்ச்சி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களைத்தான், HNI என்கிற உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் எனக் குறிப்பிடுகிறோம். இந்தியாவில் 3,57,000 பேர், HNIகளாக உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 80 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று கூறப்படும் அதேசமயம், உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள், இந்தியாவில் இருந்து அதிகமாக வெளியேறவும் விரும்புவதாகச் சொல்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் குறிப்பிடுவது, இந்தியாவில் உள்ள கடுமையான வரி நடைமுறைகள், சட்டதிட்டங்கள்தான். உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில், 8,000 பேர் இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் குடியேறுவதாகக் கூறியுள்ளனர். அவ்வாறு வெளியேறுபவர்களின் விருப்பமான நாடுகளாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

சிவப்பு கம்பள வரவேற்பு, வரிச் சலுகைகள், சாதகமான சட்டங்கள் எனத் தொழில்முனைவோருக்கு இந்த நாடுகள் வழங்கும் சலுகைகளே, இவர்களைக் கவர்ந்திழுக்கின்றன. பணக்காரர்களாக வாய்ப்புகளை உருவாக்கித்தரும் இந்தியா, இங்கேயே வளமாக வாழ்வதற்கான சூழலைக் கொண்டிருக்க வில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.