Published:Updated:

`Baa2'-ல் இருந்து `Baa3'... ஜி.டி.பி-யை `மூடீஸ்' டெளன்கிரேடு செய்தது ஏன்?

ஜி.டி.பி
ஜி.டி.பி

ஜி.டி.பி வளர்ச்சி குறித்து புள்ளிவிவரங்கள் இப்படி இருக்கையில், நமது ஜி.டி.பி வளர்ச்சி குறித்த ரேட்டிங்கை மாற்றியிருக்கிறது சர்வதேச ரேட்டிங்

கடந்த மார்ச் மாதத்தின் கடைசி சில நாள்களில்தான் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மற்றபடி அந்த மூன்று மாதங்களில் வர்த்தகம் இயல்பானநிலையிலேயே செயல்பட்டது.

அப்படியிருந்தும், அந்தக் காலாண்டில் 3.1% அளவுக்கே பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருக்கிறது. எனில், ஊரடங்கு முழு அளவில் நடைமுறையில் இருந்த ஏப்ரல், மே மாதங்கள் கொண்ட ஜூன் காலாண்டில் நமது ஜி.டி.பி 3.1 சதவிகிதத்தைவிடக் குறைவாகவே வளர்ச்சிகாண வாய்ப்புண்டு. அந்தப் புள்ளிவிவரமாவது மாற்றப்படாமல் வெளியிடப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஜி.டி.பி வளர்ச்சி குறித்து புள்ளிவிவரங்கள் இப்படி இருக்கையில், நமது ஜி.டி.பி வளர்ச்சி குறித்த ரேட்டிங்கை மாற்றியிருக்கிறது சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடீஸ். 'Baa2' என்ற நிலையிலிருந்து 'Baa3' என்ற நிலைக்கு நமது ஜி.டி.பி வளர்ச்சியைத் தரமிறக்கியிருக்கிறது மூடீஸ்.

பொருளாதாரக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பது, அரசின் நடவடிக்கைகளை பலவீனமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவருவது, சீர்திருத்த நடவடிக்கைகளை மெதுவாகக் கொண்டுவருவது ஆகிய காரணங்களை முன்னிறுத்தி மூடிஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் பிற ரேட்டிங் நிறுவனங்களான ஸ்டாண்டர்டு அண்ட் புவர் நிறுவனம் 'BBB-' என்ற நிலையையும், ஃபிட்ச் நிறுவனம் 'BBB-' என்ற நிலையையும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அளித்திருக்கின்றன.

'BBB-' என்பது 'பொருளாதாரம் சீராக இருக்கிறது' என்பதைச் சொல்வது. ஆனால், மூடீஸ் தற்போது தந்திருக்கும் 'Baa3' என்பது நமது பொருளாதாரம் நெகட்டிவ்வாக இருக்கிறது' என்பதைக் குறிக்கிறது.

முதலீட்டுக்கான சூழல் குறித்த கடைசியான நிலையாக இருந்தாலும், இந்த நிலையிலும் முதலீடு செய்யலாம் என்பதையே அது சொல்கிறது.

- கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் கடந்த 69 காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான ஜி.டி.பி வளர்ச்சி இருக்கிறது. அதாவது, வெறும் 3.1% அளவுக்குக் குறைந்திருக்கிறது.

புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டனவா? - குழம்பும் கணக்கீடுகள்..! - அதிகரித்துக் காட்டப்பட்ட ரூ.2 லட்சம் கோடி..! > முழுமையான கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. > ஜி.டி.பி புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டனவா? - கிளம்பும் சர்ச்சைகள்..! https://bit.ly/3dOKhhX

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு