Published:Updated:

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4

Rupee ( Photo by Ravi Roshan from Pexels )

``எனது வருமானம், செலவைவிட மிக அதிகமாக இருக்கும்போது நான் ஏன் பட்ஜெட் போட வேண்டும்” என்று சிலர் எண்ணுகிறோம். ஆனால் பட்ஜெட் போடுவது நமக்குள் ஒரு கட்டுப்பாட்டை வளர்க்கும்.

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4

``எனது வருமானம், செலவைவிட மிக அதிகமாக இருக்கும்போது நான் ஏன் பட்ஜெட் போட வேண்டும்” என்று சிலர் எண்ணுகிறோம். ஆனால் பட்ஜெட் போடுவது நமக்குள் ஒரு கட்டுப்பாட்டை வளர்க்கும்.

Published:Updated:
Rupee ( Photo by Ravi Roshan from Pexels )

டைட்டானிக் என்றொரு சினிமா வந்தது நினைவிருக்கிறதா? மிதக்கும் நகரம் என்று போற்றப்பட்ட பிரமாண்டக் கப்பல் தன் மீதிருந்த மனிதர்களையும், விலையுயர்ந்த பொருள்களையும் மூழ்கடித்து, தானும் ஆழ்கடலில் சமாதியாகியது எப்படி? அலைக்கழிக்கும் புயலையும் ஆர்ப்பரிக்கும் கடலையும் ஒருங்கே சமாளிக்கவல்ல வலிமை வாய்ந்தது அதன் எஃகு உடல். ஆனால், பனிமலை மோதலால் ஏற்பட்ட ஒரு சின்ன துவாரம் பெரிய பிளவாவதை அதனால் தடுக்க இயலவில்லை அல்லவா? நாம் பார்த்துப் பார்த்துக் கட்டும் பர்சனல் ஃபைனான்ஸ் கப்பலும் அப்படி ஒரு சின்ன கசிவால் மூழ்கும் அபாயம் உள்ளது. அந்தக் கசிவின் பெயர் அதீத செலவுகள்.

``செலவின்றி வாழ்க்கை ஏது? நாம் சம்பாதிப்பதே செலவை சமாளிக்கத்தானே?” என்கிறீர்களா? உண்மைதான். ஆனால், உலக மயமாதலுக்குப் பின் நிறைய மாற்றங்கள்! முன்பு எல்லா வீடுகளிலும் உட்கார சாதாரண நாற்காலிகள், படுக்க வேண்டுமெனில் பாய், அரைக்க வேண்டுமெனில் கல்லுரல், மஞ்சள் நிறத்தில் மங்கலாக ஒளிரும் குண்டு பல்புகள் போன்றவையே இருந்தன.

Family - Representational Image
Family - Representational Image

எப்பேர்ப்பட்ட செல்வந்தர் வீட்டிலும் தோசை, இட்லி, சோறு போன்ற எளிய உணவுகளையே காணலாம். ஒரே துணியில் பல மீட்டர்கள் வாங்கி அத்தனை குழந்தைகளுக்கும் அளவுக்கேற்ப தைத்துத் தருவார்கள். கோடை விடுமுறையில் தாத்தாக்கள் வீடுதான் சுற்றுலாத் தலம்.

இன்று? ஏசியும் வாஷிங்மெஷினும் இல்லாத வீடு இல்லை. பீட்சாவுக்கும் பர்கருக்கும் குழந்தைகள் மட்டுமல்ல, நாமும் அடிமைகள்தான். தீபாவளி சேல், டிஸ்கவுன்ட் சேல் புண்ணியத்தில் துணிமணி வகைகள் பீரோ கொள்ளாமல் வழிகின்றன. கொரோனா முடிந்த பின் போக வேண்டிய இடங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே அனைவர் கையிலும் உள்ளது. இப்படி அத்தனைக்கும் ஆசைப்படும் அமெரிக்கக் கலாசாரம் இங்கும் ஊடுருவிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அது காலத்தின் கட்டாயம். ``நீ இங்குதான் செலவழிக்க வேண்டும்; இப்படித்தான் செலவழிக்க வேண்டும்” என்று யாரும் யாரிடமும் வலியுறுத்த முடியாது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் உரக்கக் கூறும் உரிமை பர்சனல் ஃபைனான்ஸுக்கு உண்டு. நம் செலவு எவ்வளவாக இருந்தாலும் அது வரவில் 70% அளவே இருக்க வேண்டும் என்னும் கோல்டன் ரூல்தான் அது. செலவு என்பது வரவுக்குள் அடங்கினால்தானே சேமிப்பு, முதலீடு என்று நல்வாழ்வு தொடரும்?

ஆனால், எத்தனை பேரால் அதைக் கடைப்பிடிக்க முடிகிறது? அப்படி கடைப்பிடிக்க முடியாததன் காரணம் என்ன?

Money
Money
Photo by Disha Sheta from Pexels
  1. ஆசைக்கும் தேவைக்கும் வித்தியாசம் புரியாமை.

  2. குடும்ப பட்ஜெட்டின் அவசியம் புரியாமை.

  3. நம் எதிர்கால சம்பாத்தியத்துக்கு இன்றே உலை வைக்கும் கிரெடிட் கார்டுகள்.

உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர் வாரென் பஃபெட், ``நீங்கள் ஆசைக்குப் பொருள்களை வாங்கினால், தேவையான பொருள்களை விற்க நேரிடும்” என்கிறார். ஆனால், இளம் வயதில் வேலை; கை நிறையச் சம்பளம்; அடுத்தவர் போல வாழ ஆசை; எல்லாவற்றுக்கும் மேலாக கிரெடிட் கார்டு. இவை எல்லாம் நம் புத்தியை மழுங்கடிக்கின்றன. வேலைக்குப் போய்வர ஒரு சின்ன கார், ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், இன்டர்நெட் போன்றவை எல்லாம் ஆசைகளாக இருந்து இன்று கொரோனாவுக்குப் பின் தேவைகளாகிவிட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் எதுவுமே தவறில்லை, நம்மால் சமாளிக்க முடிந்தால். ஆனால், பிளாஸ்டிக் கார்டுகளின் வரவுக்குப் பின், எது அதீத செலவு என்பதே நமக்குத் தெரிவதில்லை. டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள், ``எனக்கு மாதம் 10,000 ரூபாய் பாக்கெட் மனி தேவை” என்று கூறி நிகழ்ச்சி தொகுப்பாளரையே அதிர வைத்தாள். இப்படிப் பலர் குடும்ப வருமானம், நிதி நிலைமை, வருங்காலத் தேவைகள் என்று எதையும் யோசிக்காமல் ஐபோன், லட்ச ரூபாய் பைக் என்று ஆசைப்படுகிறார்கள்.

இதைச் சமாளிப்பதற்கு பர்சனல் ஃபைனான்ஸ் தரும் மந்திரம், பட்ஜெட். ``எனது வருமானம், செலவைவிட மிக அதிகமாக இருக்கும்போது நான் ஏன் பட்ஜெட் போட வேண்டும்” என்று சிலர் எண்ணுகிறோம். ஆனால் பட்ஜெட் போடுவது நமக்குள் ஒரு கட்டுப்பாட்டை வளர்க்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையே என்பவர்களுக்கும் பட்ஜெட்தான், பதில்.

Money
Money

பட்ஜெட் என்றதும் ஏதோ நிதியமைச்சர் ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. சிம்பிளாக வரவு, செலவு, சேமிப்பு இவற்றை அவ்வப்போது குறித்து வைத்துக்கொண்டால், எந்தச் செலவினம் அநாவசியம், எது அதிகமாக வாரிக் கொண்டு போகிறது என்றறிவது சுலபம்.

இப்போதெல்லாம் போனிலேயே நிறைய இலவச ஆப்கள் வந்துவிட்டன. ஒன்றைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது நம் செலவுகளை அதில் பதிவிடலாம். மாதக் கடைசியில் அது சார்ட் போட்டு நமது தவறுகளை இனம் காட்டிவிடும். இதனால், ஒரு செலவை அதிகம் செய்திருந்தாலும் அதை வரும் மாதங்களில் திருத்திக்கொள்ள முடியும். செய்வோமா?

- (மீண்டும் புதன்கிழமை அன்று சந்திப்போம்)

பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர் இது. திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism